பாவ இருளால் உள்ளத்தின் ஒளியை அணைத்து விடாதீர்கள்


              அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          *“கல்வி என்பது ஓர் ஒளி! அல்லாஹ்தான் அதை உள்ளத்தில் போடுகிறான்;  அவ்வொளியை, பாவம் அணைத்து விடுகிறது!”* 

              மாணவராக இருந்த இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்கள், தனது ஆசிரியர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் உட்கார்ந்திருந்த வேளையில், தான் படித்ததை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார்கள். அப்போது இமாம் ஷாபிfயின் விவேகத் திறனையும், புத்திக்கூர்மையையும், பூரணத்துவமான அவரின் விளக்கத்தையும் கண்ட இமாம் மாலிக் அவர்கள் ஆச்சரியமடைந்தவர்களாக, *“ஒளியை உனது உள்ளத்தில் அல்லாஹ் போட்டு விட்டதை உறுதியாக நான் காண்கிறேன். எனவே, பாவ இருளால் அதை நீ அணைத்து விடாதே!”*என்று அவருக்குக் கூறினார்கள்.

            இமாம் ஷாபிfஈ (ரஹ்) கூறுகின்றார்கள்: *“மோசமான என் மனனக் குறைவு குறித்து எனது ஆசான் 'வகீஃ இப்னுல் ஜர்ராஹ்' அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள், 'பாவங்களை விட்டு விடும்படி எனக்கு வழிகாட்டினார்கள். அத்தோடு, கல்வி என்பது ஓர் ஒளி; அல்லாஹ்வின் அவ்வொளி, பாவிக்கு வழங்கப்படமாட்டாது என்றும் எனக்கு அவர்கள் கூறினார்கள்”*.

{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf லிமன் சஅல அனித்தவாஇஷ் ஷாபீf ' , பக்கம்: 82 }

🍃➖➖➖➖➖➖➖➖🍃

             قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى :- 

            [ فإن العلم نور يقذفه الله فى القلب ، والمعصية تطفئ ذلك النور ]

           ولما جلس الإمام الشافعي بين يدي مالك وقرأ عليه أعجبه  ما  رأى من وفور فطنته، وتوقد ذكائه، وكمال فهمه، فقال: *"إني أرى أن الله قد ألقى على قلبك نورا، فلا تطفئه بظلمة المعصية"*

           وقال الإمام الشافعي رحمه الله: [ شكوت إلى وكيع سوء حفظي، فارشدني إلى ترك المعاصي! وأخبرني بأن العلم نور، ونور الله لا يهدى لعاصي ! ]

 { الجواب الكافي لمن سأل عن الدواء الشافي ،  ص -  ٨٢ }

🍃➖➖➖➖➖➖➖➖🍃

                   ✍தமிழில்✍

                   அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم