சஊதி அரேபிய நாட்டின் தலைமை முfப்தியாக இருந்த அல்லாமா அப்துல்லா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நற்புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறது என்பதைப் பறைசாற்றும் விதமாக அவர் வாழ்வில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை, கலாநிதி முஹம்மத் அஷ்ஷுவையிர் அவர்கள் தெரிவிப்பதாக கலாநிதி நாஸிர் பின் மிஸ்fபர் அஸ்ஸஹ்ரானீ (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:-
*“சஊதி அரேபிய தூதுக்குழு ஒன்று முக்கிய தேவையொன்றின் நிமித்தமாக ஆபிரிக்கக் காடுகளை நோக்கி பயணம் மேற்கொண்டது. அப்போது, அத்தூதுக்குழுவிடம் வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், “நீங்களெல்லாம் சஊதி நாட்டைச் சேர்ந்தவர்களா?” என்று அவர்களில் ஒருவரைப் பார்த்துக் கேட்க, அவர் 'ஆம்!' என்றார். “அப்படியாக இருந்தால், எனது சலாத்தை அப்துல்லா பின் பாஸ் அவர்களுக்கு நீர் எத்திவைத்து விடும்!” என்று கூறினார்கள். “அவர்களை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேட்டார். அதற்கு அப்பெண், “நானும் எனது கணவரும் கிறிஸ்தவக் குடும்பமாக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டோம். எனினும் எங்கள் உறவினர்கள் (எங்களுக்கு ஆதரவு தராமல்) எம்மை விரட்டியே விட்டார்கள். அப்போது உலக வாழ்வு எமக்கு நெருக்கடியாகிப் போய்விட்டது. அல்லாஹ்வுக்குப் பின்னர் எமக்கு உதவும் ஒருவர் யாராவது இருக்கிறார்களா? என்று மக்களிடம் நான் கேட்டேன். 'அல்லாஹ்வுக்குப் பின்னர் அப்துல்லா பின் பாஸ் அவர்களைத் தவிர உமக்கு யாரும் இல்லை!' என்று அவர்கள் சொன்னார்கள். உடனே நான், இப்னு பாஸ் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அது அவரிடம் போய்ச் சேரும் என்றுகூட நான் நம்பாமல்தான் இருந்தேன். என்றாலும், திடீரென்று சஊதி தூதரகத்திலிருந்து என்னோடு தொடர்பு கொண்டார்கள். தூதரகத்தில் வந்து சந்திக்குமாறும் என்னிடம் அவர்கள் வேண்டினார்கள். அங்கே நான் சென்று பார்த்தபோது, அப்துல்லா பின் பாஸ் அவர்கள் பத்தாயிரம் சஊதி ரியால் பணத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். நாம் முஸ்லிம்களாக இருக்கும்போது சோதனையில் இருக்கிறோம் என்பதை அறிந்ததற்குப் பின்னால் (பாரிய இத்தொகைப் பணத்தை அனுப்பி வைத்ததன் மூலம்) இந்த விடயத்தில் அல்லாஹ்வுக்குப் பின்னர் சிறப்புள்ள ஒரு மனிதராகவே ஷேக் அப்துல்லா பின் பாஸ் அவர்கள் இருக்கிறார்கள்!” என்று கூறினாள்.
{ நூல்: 'இமாமுல் அஸ்ர் அப்துல்லா பின் பாஸ்', பக்கம்: 143 }
قال الدكتور ناصر بن مسفر الزهراني حفظه الله: وأذكر هنا قصة رواها الدكتور محمد الشويعر تدلّ على الآفاق الخيّرة التي بلغها سماحة الشيخ بن باز - رحمه الله - ، يقول: *« ذهب وفد سعودي في إحدى المهمات إلى غابات أفريقيا، فجاءت عجوز عند هذا الوفد، وقالت لأحد رجال الوفد: أنتم من السعودية؟ فقال: نعم، فقالت: أبلغ سلامي على الشيخ ابن باز؛ فقال: كيف عرفتيه؟ فقالت: لقد كنت أنا وزوجي عائلة نصرانية وأسلمنا، لكن طاردنا أقاربنا، وضاقت بنا الدنيا، فسألت عن مساعد بعد الله، فقالوا: ليس لك بعد الله إلا ابن باز، فكتبت إليه، وكنت لا أتوقع وصول الرسالة، ولكن فجأة إذا بالسفارة السعودية تتصل بي وتطلبني بمراجعتها وإذا بسماحته قد أرسل لها بمساعدة عشرة آلاف ريال، فهذا الرجل كان له فضل بعد الله في ذلك بعد ما عرف أنّنا في بلاء ونحن مسلمون »*
{ المصدر: "إمام العصر العلاّمة عبد الله بن باز رحمه الله"، ص - ١٤٣ }
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா