மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்ள அல்லாஹ் வாய்ப்பளித்திருக்கின்றானா? அவனை அதிகமாகப் புகழுங்கள்


          அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “வலப்பக்கமாக, இடப்பக்கமாக, முன்னால், பின்னால் என உன்னைச் சுற்றியிருப்போரை நீ பார். அப்போது, மனிதர்களில் அதிகமானோர் இந்த இஸ்லாமியப் கல்வியைப் புறக்கணித்துவிட்டு,  மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் வேறு விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று உன்னால் கண்டுகொள்ள முடியும். உலகத்தைத்  தேடுவதிலும்,  அதற்காகப் பாடுபட்டு உழைப்பதிலும்தான் அவர்களின் ஈடுபாடு இருந்துகொண்டிருக்கின்றது. எனவே,  இவர்களிலிருந்து உன்னை அல்லாஹ் பாதுகாத்து வைத்திருப்பதற்காகவும், மறுமையைப் புறக்கணித்து உலக விவகாரங்களில் ஈடுபடுவோருடன் நீ இல்லாமல் இருக்கின்றாய் என்பதற்காகவும் அல்லாஹ்வை நீ புகழ்ந்துகொள்! இவ்விடயங்களிலிருந்து  ஈடேற்றம் உனக்குக் கிடைத்திருப்பதற்காகவும் மீண்டும் அவனை நீ புகழ்ந்துகொள்!

          அல்லாஹ் உனக்கு அருள் புரிந்து, உன்னை நேர்வழியில் செலுத்தி, பயன்மிகு மார்க்கக் கல்வியை  நீ தேடிக்கொள்ள உனக்கு அவன் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றான் என்ற வகையில் உன் இரட்சகனிடமிருந்து உனக்குக் கிடைத்திருக்கும் பாரிய இந்நன்கொடை எவ்வளவு சிறப்புக்குரியது!! பிரமாண்டமான இவ்வருட்கொடை எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.!! “அல்லாஹ் கூறுகிறான்; அவனுடைய தூதர் கூறுகிறார்கள்!” என்று ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்கும் இந்த விடயம், 'அவசரமாக வழங்கப்படுகின்ற சுவர்க்கம்' என்பது சிந்திப்பவருக்கு விளங்கும் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்) எனது சகோதரர்களே!”.

{நூல்: 'மஜ்மூஉ ரசாயில்' லிஷ்ஷெய்க் பின் பாஸ், பக்கம்: 336 }

         


           قال العلاّمة عبدالعزيز بن باز رحمه الله تعالى:-

        *« أنظر إلى من حولك يمينا وشمالا، وأمام وخلف... تجد أكثر الناس قد أعرضوا عن هذا العلم، وشغلوا بما هو أدنى، شغلوا بطلب الدنيا والإقبال عليها. فاحمد الله أن جعلك سالما من هؤلاء، لم تكن مع الذين شغلوا بالدنيا عن الآخرة، إحمد الله على سلامتك من هذه الأشياء.*

           *فيا لها من نعمة عظمى ويا لها من منحة جسيمة من ربّك عزّ وجلّ أن منّ عليك وهداك، ويسّر لك طلب العلم النافع الشرعي! تسمع كلّ يوم: قال الله؛ قال رسوله. هذه جنّة معجّلة يا إخواني لمن عقل »*

{ المصدر: 'مجموع رسائله'، ص - ٣٣٦ }

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post