நாவின் விபரீதங்களை நம்மில் பலர் உணர்வதில்லை


       அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          *“ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்ட விடயங்களில் பார்வையைச் செலுத்துதல் போன்ற இன்னோரன்ன தீய  விடயங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு முடியுமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான விடயமாகும்!!*

          *மார்க்கம், உலகப் பற்றின்மை, வணக்க வழிபாட்டில் ஈடுபாடு ஆகியவற்றில் நல்லவர் என்பதாகச் சுட்டிக்காட்டப்படும் மனிதர், எதையுமே பொருட்படுத்தாதவராக அல்லாஹ் கோபிக்கும்படியான வார்த்தைகளைப் பேசிவிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள்! இவற்றில் ஒரேயொரு வார்த்தையை இவர் பேசுவதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட தூரம் அளவுக்கு (அந்தஸ்த்திலிருந்து) இறங்கி விடுகிறார்!*

            *மானக்கேடான விடயங்கள் மற்றும் அநியாயம் ஆகியவற்றை விட்டும் பேணுதலாக இருக்கும் எத்தனையோ மனிதர்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள்! ஆனால், அவர்களில் ஒருவரது நாவோ உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்,மரணித்தவர்களின் மானங்களில் பொய் சொல்லி இட்டிக்கட்டிக்கொண்டிருக்கிறது. தான் சொல்வதை அவர் பொருட்படுத்துவதே கிடையாது!”*

{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf', பக்கம்: 54 }


           قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

            *[ ومن العجب أن الإنسان يهون عليه التّّحفّظ والإحتراز من أكل الحرام والظلم والزّنى والسرقة وشرب الخمر، ومن النظر المحرّم وغير ذلك. ويصعب عليه التّحفّظ من حركة لسانه!*

         *حتى ترى الرّجل يشار إليه بالدّين والزّهد والعبادة، وهو يتكلم بالكلمات من سخط الله لا يلقي لها بالا. ينزل بالكلمة الواحدة منها أبعد ممّا بين المشرق والمغرب!*

           *وكم ترى من رجل متورّع عن الفواحش والظلم، ولسانه يفري في أعراض الأحياء والأموات، ولا يبالي ما يقول]*

{ الجواب الكافي،  ص - ٥٤ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿  *அல்லாஹ் கூறுகிறான்:* “அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே நீர்) கூறுவீராக!  நிச்சயமாக ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். நிச்சயமாக ஷைத்தான்  மனிதனுக்குப் பகிரங்க எதிரியாகவே இருக்கின்றான்”. (அல்குர்ஆன், 17:53 )

🌿➖➖➖➖➖➖➖➖🌿

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post