ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
*“அல்லாஹ்வை (ச் சரியாக) அறிந்து கொள்ளும் அறிவுதான், அவன் படைப்புகளை அறிந்து கொள்வதைவிட மிகச் சிறந்த அறிவாகும். இதனால்தான் 'ஆயதுல் குர்சீ', அல்குர்ஆனில் அதி சிறப்புக்குரிய ஆயத்தாக (வசனமாக) இருக்கின்றது! ஏனெனில், அல்லாஹ்வின் தன்மையை அது உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.*
*மேலும், 'குல் ஹுவல்லாஹு அஹத்' என்ற (அல்இஹ்லாஸ்) அத்தியாயம் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும். காரணம், அல்குர்ஆன் மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கின்றது. ஒரு பகுதி 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவத்தையும், மற்றொரு பகுதி வரலாறுகளையும், இன்னொரு பகுதி ஏவல்-விலக்கலையும் கொண்டிருக்கிறது. ஏகத்துவத்தை உள்ளடக்கியிருக்கக்கூடிய அந்த மூன்றில் ஒரு பகுதிதான் மற்ற இரு பகுதிகளைவிட அதிக சிறப்புக்குரியதாகும்”*
{ நூல்: 'மஜ்மூஉல் fபதாவா', 02/206 }
قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-
*[ العلم بالله أفضل من العلم بخلقه؛ ولهذا كانت آية الكرسي أفضل آية في القرآن؛ لأنها صفة الله تعالى.*
*وكانت « قل هوالله أحد » تعدل ثلث القرآن؛ لأن القرآن ثلاثة أثلاث: ثلث توحيد، وثلث قصص، وثلث أمر ونهي. وثلث التوحيد أفضل من غيره]*
{ مجموع الفتاوى، ٢/٢٠٦ }
➖➖➖➖➖➖➖➖➖➖
❇👉🏿 ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இன்னுமொரு இடத்தில் இப்படிக் கூறுகின்றார்கள்:-
*“இவ்வுலகில் உள்ளதில் மிக நல்லது அல்லாஹ்வை அறிந்து கொள்வதாகும். மறுமையில் உள்ளதில் மிக நல்லது அவனைப் பார்ப்பதாகும்!”*
{ நூல்: 'மஜ்மூஉல் fபதாவா', 14/163 }
قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-
*[ فأطيب ما في الدنيا معرفة الله، وأطيب ما في الآخرة النظر إليه سبحانه وتعالى ]*
{ مجموع الفتاوى، ١٤/١٦٣ }
☘➖➖➖➖➖➖➖➖☘
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா