உலக வளங்கள் கொடுக்கப்பட்ட அனைவருமே அல்லாஹ்வின் திருப்திக்குரியவர்கள் அல்லர்


🔅அல்லாஹ் கூறுகிறான்: *“பின்னர் அவன் தனது அலங்காரத்துடன் தன் சமூகத்தாரின் பக்கம் புறப்பட்டான். (அப்போது), 'காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று எமக்கும் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? நிச்சயமாக அவன் பெரும் பாக்கியமுடையவன்' என்று இவ்வுலக வாழ்வை விரும்பியோர் கூறினர்.* (அல்குர்ஆன், 28: 79)

          *“நேற்று அவனது அந்தஸ்தை ஆதரவு வைத்தோர், 'அந்தோ கைசேதமே! அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடுவோருக்கு வாழ்க்கை வசதியைத் தாராளமாகவும், அளவோடும் வழங்குகின்றான். அல்லாஹ் எமக்கு அருள் புரிந்திருக்காவிட்டால் எம்மையும் (பூமிக்குள்) விழுங்கச் செய்திருப்பான். அந்தோ கைசேதமே! நிராகரிப்பாளர்கள் வெற்றியடையமாட்டார்கள்' என்று (இன்றைய தினம்) கூறுவோராக மாறினர்”.* (அல்குர்ஆன், 28:82)

           கலாநிதி அலீ இப்னு முஹம்மத் நாஸிர் அல்fபகீஹீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

           “அதாவது:  ஒருவரிடம் சொத்து செல்வங்கள் இருப்பதும், அவை அதிகமாகக் காணப்படுவதும் அவர் மீது அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடையாது. சிலருக்கு அல்லாஹ் கொடுப்பான்; கொடுக்காமல்  சிலருக்கு அவன் தடுத்துவிடுவான். சிலருக்கு சுருக்கிக் கொடுப்பான்; மற்றும் சிலருக்கு விரிவாக்கியும் கொடுப்பான். சிலரைத் தாழ்த்துவான்; சிலரை உயர்த்துவான். பூரணத்துவ ஞானம் அவனுக்குத்தான் இருக்கிறது; உறுதியான ஆதாரமும் அவனுக்கே உண்டு. நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வாறு  கூறினார்கள்: *“உங்கள் வாழ்வாதாரங்களை அல்லாஹ் பிரித்துத் தந்திருப்பது போல உங்கள் பண்பாடுகளையும் உங்களுக்கிடையில் அவன் பிரித்தே தந்திருக்கிறான். இவ்வுலகத்தை, தான் நேசிப்பவர்களுக்கும் தான் நேசிக்காதவர்களுக்கும் அல்லாஹ் கொடுப்பான். ஆனால், ஈமானை தான் நேசித்தவர்களுக்கு மாத்திரம்தான் கொடுப்பான்”* ( நூல்: 'அஸ்ஸில்சிலா அஸ்ஸஹீஹா' லில் அல்பானீ, ஹதீஸ் இலக்கம் - 2714)

[ பார்க்க: 'அல்வஸாயா fபில் கிதாபி வஸ்ஸுன்னா', பக்கம்: 62 ]


🔅قال الله تعالى: *{ فخرج على قومه في زينته قال الّذين يريدون الحياة الدنيا ياليت لنا مثل ما أوتي قارون إنّه لذو حظّ عظيم }* « القصص، الآية - ٧٩ »

          *وأصبح الّذين تمنّوا مكانه بالأمس يقولون ويكأنّ الله يبسط الرّزق لمن يّشاء من عباده ويقدر لولا أن مّنّ الله علينا لخسف بنا ويكأنّه لا يفلح الكافرون }* (القصص، الآية : ٨٢ )

           قال الدكتور علي بن محمد ناصر الفقيهي حفظه الله:-

         { أي: ليس المال وكثرته بدالّ على رضا الله عن صاحبه. فإن الله يعطي ويمنع؛ ويضيّق ويوسّع؛ ويخفض ويرفع. وله الحكمة التّامّة والحجّة البالغة! قال النّبي صلّى الله عليه وسلم: *« إن الله قسم بينكم أخلاقكم كما قسم أرزاكم ، وإن الله يعطي الدّنيا من يحبّ ومن لا يحبّ، ولا يعطي الإيمان إلّا من أحبّ »* ( السلسلة الصحيحة، رقم الحديث: ٢٧١٤ )

[ المصدر: ' الوصايا في الكتاب والسنة' لناصر الفقيهي، ص - ٦٢ ] 

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم