ஷைத்தானுக்குக் கவலையை ஏற்படுத்தும் வரைக்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்


            ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           மாணவர்களில் ஒருவர் தமது ஆசிரியரிடம், “நான் பாவம் செய்கிறேன்! பரிகாரம் என்ன?” என்று கேட்டார்.

*ஆசிரியர்:*“நீ பாவமன்னிப்புத் தேடிக்கொள்!” என்றார்.

*மாணவர்:*“திரும்பவும் பாவம் செய்கிறேனே!” எனக் கேட்டார்.

*ஆசிரியர்:*“நீ பாவமன்னிப்புத் தேடிக்கொள்!” என்றார்.

*மாணவர்:*“பின்னரும் பாவம் செய்கிறேனே!” எனக் கேட்டார்.

*ஆசிரியர்:*“நீ பாவமன்னிப்புத் தேடிக்கொள்!” என்றார்.

*மாணவர்:* “எதுவரை நான் பாவமன்னிப்புத் தேட?” எனக் கேட்டார்.

*ஆசிரியர்:* “ஷைத்தானுக்கு நீ கவலையை ஏற்படுத்துகின்ற வரைக்கும்....!” எனப் பதிலளித்தார்கள்.

{ நூல்: 'பfதாவா இப்னி தைமிய்யா' , 7/492 }

       يقول شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-

             قال بعضهم لشيخه: إني أذنب...

قال: تب.  قال: ثم أعود...

قال: تب.   قال: ثم أعود ....

قال:تب .  قال: إلى متى ؟

قال: إلى أن تخزن الشيطان!

{ فتاوى إبن تيميه، ٧/٤٩٢ }

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🌟👉🏿 இமாம் நவவீ (ரஹ்) அவர்கள், அல்குர்ஆனின் 39-ம் அத்தியாயம், 53-ம் வசனமான “தமக்குத் தாமே வரம்பு மீறி நடந்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்று (அல்லாஹ் தெரிவிப்பதை நபியே) நீர் கூறுவீராக!” என்பதற்கு இவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள்....

           “ஒருவன், நூறு தடவைகள், அல்லது ஆயிரம் தடவைகள், அல்லது அதை விட அதிக தடவைகள் பாவம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அவன் பாவமன்னிப்புத் தேடினாலும் அவனது பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவனுடைய பாவங்கள் அழிந்து போய் விடும்! நிறைய தடவைகள் அவன் பாவம் செய்துவிட்டு, அவையனைத்துக்குமாகச் சேர்த்து ஒரு முறை அவன் பாவமன்னிப்புத் தேடினாலும் அவனது பாவமன்னிப்பு சரியாகிவிடும்!”.

{ நூல்: 'ஷர்ஹுன் நவவீ அலா முஸ்லிம்' , 17/75 }

*قال الله تعالى:* [ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ]

        قال الإمام النووي رحمه الله تعالى: "لو تكرر الذنب مائة، مرة أو ألف مرة، أو أكثر وتاب في كل مرة قبلت توبته، وسقطت ذنوبه. ولو تاب عن الجميع توبة واحدة صحت توبته".

{ شرح النووي على صحيح مسلم،  ١٧/٧٥ }

➖➖➖➖👇👇👇👇➖➖➖➖

        நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

       “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் தனது கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (உலக முடிவு நாள்) வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்”.

{நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 5324 }

🍃➖➖➖➖➖➖➖➖➖➖🍃

                ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

            

أحدث أقدم