இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ரஜப் அபூ பbசீசா (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“தனிமையின் போதும், பிரச்சினையின் போதும்தான் *“மார்க்கத்தில் உறுதியாக இருத்தல்”* என்பதனுடைய உண்மை நிலை வெளிப்படுகின்றது. ஏனெனில், இளைஞர்களில் சிலர் தனிமையில் இருக்கின்றபோது பாவங்களுக்கு முன்னால் சில நேரங்களில் பலவீனமடைந்து விடுகின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்: *“மனிதர்களுக்கு இவர்கள் (தமது சதிகளை) மறைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்விடம் இவர்களால் (எதையும்) மறைத்துவிட முடியாது. (ஏனெனில்,) அவன் விரும்பாத வார்த்தைகளை அவர்கள் இரவில் பேசி சதி செய்தபோது அவனும் அவர்களுடன் இருந்தான். இவர்கள் செய்பவற்றை அல்லாஹ் சூழ்ந்து அறிபவனாக இருக்கின்றான்”*. (அல்குர்ஆன், 04: 108). “நான் தனிமையில் இருக்கும்போது எனது இரட்சகன் என்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறான் என்ற கண்காணிப்பு உணர்வுடனேயே நான் வாழ வேண்டும்; அவன் திருப்திப்படும் விடயங்களில் நான் விரைந்து காரியமாற்ற வேண்டும்” என்று இளைஞன் செயல்பட்டால் அது எவ்வளவு அழகானதாக இருக்கும் தெரியுமா?!! எனவேதான், இந்த உயிரோட்ட உணர்வை இளைஞனிடம் நாம் வளர்த்து, அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்ற அடிப்படையில் அவனைப் பயிற்றுவித்து, அவனைப் பண்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டிருக்கின்றது. காரணம், இளைஞனொருவன் தனிமையில் இருக்கும் போது செய்கின்ற பாவங்கள் அவனது மார்க்க உறுதியைக் காயப்படுத்தி விடுகின்றது.
இவ்வாறே, பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது பொறுமையாக இருந்து, அதற்காக அல்லாஹ் நல்ல கூலியைத் தருவான் என்று எதிர்பார்க்கும்படியாக இளைஞனைப் பயிற்றுவிக்க வேண்டும். மேலும், பிரச்சினையோ, துன்பமோ ஏற்பட்டுவிட்டால் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (பொருள்: நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்; அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்) என்று சொல்லவும் அவனைப் பயிற்றுவிக்க வேண்டும். இதுபோன்ற அடிப்படையில் அவன் பயிற்றுவிக்கப்படவில்லை என்றால், அவனுக்கு ஏற்பட்ட அந்தப் பிரச்சினைகளே அவனின் வீழ்ச்சிக்கான காரணியாக அமைந்து விடும். ஏனென்றால் மக்களில் பெரும்பாலானோரிடம், பிரச்சினைகள் இல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது நல்ல அமைப்பும், உறுதியைக் கடைப்பிடிக்கும் நிலையும் அவர்களிடம் வெளிப்படுகின்றது. என்றாலும், பிரச்சினைகளின்போது வேறொரு முகமும், வேறொரு நடத்தையும் வெளிப்பட்டு விடுகின்றது. *“சோதனைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி விடுகின்றன”* என்று சொன்னவரின் கூற்றை இது உண்மைப்படுத்தி விட்டது!”.
[ 'அல்fபுர்கான்' அரபு சஞ்சிகை, இதழ் - 927, 07/08/2017 ம் திகதி ]
قال الشيخ رجب أبو بسيسة حفظه الله تعالى:-
{ حقيقة الإستقامة تظهر عند الخلوة وعند الأزمة؛ لأن بعض الشباب عندما يختلي بنفسه قد يضعف أمام المعاصي. قال الله تعالى: *« يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيّتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا »* (سورة النساء، الآية - ١٠٨)، فما أجمل أن يراقب الشّابّ ربّه في خلوته، وأن يسارع في مرضاته؛ فلا بدّ أن ننمي عند الشّابّ روح الذاتية، وأن نربّيه على الرقابة؛ لأن فعل المعاصي حال خلوته سيجعل استقامته مجروحة!
وكذلك عند حدوث الأزمات يتربى على أن يصبر وأن يحتسب، وأن يقول: *« إنّا للّه وإنّا إليه راجعون »*. وإذا لم يتربّ على هذا المعنى فستكون تلك الأزمات سبب سقوطه؛ لأن أغلب الناس عند العافية يظهر عليهم حسن السمت والاستقامة، ولكن عند الأزمات يظهر وجه آخر وسلوك آخر. وصدق من قال: *« الفتن كاشفة »*.
[ مجلة الفرقان، العدد - ٩٢٧، التاريخ ٢٠١٧/٨/٧م ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா