கோள்' செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு


             “ஸாலிஹான நல்ல  மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்: *'மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய்.*

*01)* எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்!

*02)* வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்!

*03)*  எனது உள்ளத்தில் உன்னைப் பற்றி இருந்த (நல்ல) இடத்தைப் பாழாக்கி விட்டாய்!”

           இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: *“புறம்பேசுதல் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ் மீது ஆணையாக! நெருப்பு விறகைச் சாப்பிடுவதை விட,  நன்மைகளை அழிப்பதில் இது மிக வேகமானதாகும்!”*

{ நூல்: الغيبة والنّميمة , பக்கம்: 163 }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

         [ جاء رجل بنميمة إلى أحد الصالحين، فقال له: *جئتني بثلاث جنايات :-*

*الأولى:* باعدت بيني وبين أخي.

*الثاني:* وشغلت قلبي الخالي.

*الثالث:* وأفسدت مكانتك في قلبي.

             وقال الإمام الحسن البصري رحمه الله تعالى: *[ إيّاكم والغيبة! والذي نفسي بيده لهي أسرع في الحسنات من النار في الحطب ]*

{ الغيبة والنّميمة، ص - ١٦٣ }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post