நபியின் மீது நேசம் இருந்தால் அவரின் வழிமுறையையே மதித்துப் பின்பற்றுங்கள்


           இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

            *“ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை கிடைக்கப்பெற்று அதைப் புரிந்துகொண்ட ஒவ்வொருவரும் சமூகத்திற்கு அதைத் தெளிவுபடுத்துவதும் உபதேசிப்பதும் கட்டாயமானதாகும். சமூகத்தில் கண்ணியமிக்கவரின் கருத்து நபியின் வழிமுறைக்கு மாற்றமாக இருப்பினும், நபியின் கட்டளையைப் பின்பற்றும்படியே அவர் அவர்களுக்கு ஏவ வேண்டும். ஏனெனில், நபியின் கட்டளையே (சமூகத்தில்) கண்ணியப்படுத்தப்படுபவரின் கருத்தைவிட கண்ணியப்படுத்தப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் மிகத் தகுதியானதாகும்.*

         *நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும் ஆதாரபூர்வமான சுன்னாவுக்கு முரண்பாடாக நடந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் மறுப்புக் கொடுத்தது இந்த வகையில்தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். மறுப்புக்கொடுத்தலில் சிலபோது கடும்போக்கைக்கூட அவர்கள் கடைப்பிடித்தார்கள். இது, (சுன்னாவுக்கு முரணாக நடந்த) இவர் மீதுள்ள கோபத்தினால் அல்ல! மாறாக, அவர்களிடம் இவர் நேசத்திற்குரியவராகவும், அவர்களின் உள்ளங்களில் கண்ணியத்திற்குரியவராகவுமே இருந்தார். என்றாலும், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அதிக நேசத்திற்குரியவராக இருந்தார்; தூதரின் கட்டளையே அனைவரின் கட்டளையையும்விட அவர்களிடம் உயர்வாக இருந்தது.*

          *ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளையும், அவரல்லாத ஒருவரின் கட்டளையும் ஒரு விடயத்தில் முரண்பட்டால் ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளைதான் முற்படுத்தப்படுவதற்கும், பின்பற்றப்படுவதற்கும் மிக ஏற்றமானதாகும். இதனால்தான் இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்கள்,  தனது கூற்றுக்கு மாற்றமாக ஆதாரபூர்வமான ஹதீஸ் வந்துவிட்டால் குறிப்பிட்ட அந்த ஹதீஸ் பின்பற்றப்பட்டு, தனது கூற்று விட்டுவிடப்பட வேண்டும் என வஸிய்யத் செய்தார்கள்.*

        *இவ்வாறுதான் பெரும் ஷெய்குமார்களும் மார்க்க ஞானமுடையவர்களும்,சத்தியத்தைச் சொல்பவர் சிறியவராக இருந்தாலும் அல்லது பெரியவராக இருந்தாலும் அந்த  சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் செய்பவர்களாகவும், அவரின் கூற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருந்தார்கள்!”*

{ நூல்: 'மஜ்மூஉர் ரசாயில்', 1/245 }


             قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:-

          *[ الواجب على كل من بلغه أمر الرسول وعرفه أن يبيّنه للأمة وينصح لهم. ويأمرهم باتّباع أمره، وإن خالف ذلك رأي عظيم من الأمة، فإن أمر الرّسول صلّى الله عليه وسلم أحق أن يعظم ويقتدى به من رأي معظم.*

         *ومن هنا ردّ الصحابة ومن بعدهم من العلماء على كل من خالف سنّة صحيحة، وربما أغلظوا في الرّدّ، لا بغضا له؛ بل هو محبوب عندهم، معظم في نفوسهم؛ لكن رسول الله صلى الله عليه وسلم أحب إليهم، وأمره فوق أمر كل مخلوق.*

        *فإذا تعارض أمر الرّسول صلى الله عليه وسلم وأمر غيره فأمر الرّسول صلى الله عليه وسلم أولى أن يقدم ويتبع، كما أوصى الشافعي رحمه الله تعالى- إذا صحّ الحديث في خلاف قوله- أن يتبع الحديث ويترك قوله....*

         *وكذلك المشائخ والعارفون كانوا يوصون بقبول الحق من كل من قال الحق صغيرا أو كبيرا، وينقادون لقوله]*

{ مجموع الرسائل ، ١/٢٤٥ }

➖➖➖👇👇👇👇➖➖➖

❇👉🏿  அல்லாஹ் கூறுகிறான்:- *“(நமது தூதராகிய) அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்!”* (அல்குர்ஆன், 24:63)

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم