கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி 'பாத்திமா பின்த் அப்துல் மலிக் (ரஹ்)' கூறுகின்றார்கள்:-
“கலீபா உமரை விட அதிகமாகத் தொழுது, நோன்பு நோற்கக்கூடிய வேறொருவரையோ, அவரைவிட தனது இரட்சகனை அதிகம் அஞ்சி நடக்கும் வேறு எவரையோ நான் கண்டதில்லை! இஷாத் தொழுகையை அவர்கள் தொழுதுவிட்டு, அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும் வரை அழுதவர்களாகவே அமர்ந்துகொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும்வரை அழுதுகொண்டே இருப்பார்கள்!.*
*படுக்கை விரிப்பில் என்னோடு அவர்கள் இருந்துகொண்டு மறுமை விடயம் குறித்துச் சிந்தித்து, தண்ணீருக்குள் விழுந்த சிட்டுக்குருவி பதறித் துடிப்பது போல் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். அவர் அழுது உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரின் மீது நான் இரக்கப்பட்டு போர்வையொன்றை அவருக்கு மேல் போட்டு, “எமக்கும் இந்த ஆட்சிக்குமிடையில் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா?!” ௭ன்று சொல்லிக்கொள்வேன். அல்லாஹ் மீது ஆணையாக! ஆட்சிக்குள் நாம் புகுந்து கொண்ட நாள் முதல் மகிழ்ச்சியை நாம் கண்டதே இல்லை!.*
{ நூல்: 'அல்பிbதாயா வந்நிஹாயா' லில்ஹாபிfழ் இப்னு கஸீர், 10/204 }
قالت إمرأة عمر بن عبدالعزيز فاطمة بنت عبد الملك:
*[ ما رأيت أحدا أكثر صلاة وصياما منه، ولا أحدا أشدّ فرقا من ربّه منه. كان يصلّي العشاء ثم يجلس يبكي حتى تغلبه عيناه، ثم ينتبه فلا يزال يبكي حتى تغلبه عيناه...*
*قالت: ولقد كان يكون معي في الفراش فيذكر الشيئ من أمر الآخرة فينتفض كما ينتفض العصفور فى الماء، ويجلس يبكي فأطرح عليه اللّحاف رحمة له وأنا أقول « ياليت كان بيننا وبين الخلافة بعد المشرقين! » ، فوالله ما رأينا سرورا منذ دخلنا فيها ]*
{ البداية والنهاية للحافظ ابن كثير ، ١٠ / ٢٠٤ }
➖➖➖➖➖➖➖➖➖➖
இமாம் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அறிஞர்களை ஒன்றுகூட்டுபவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் சேர்ந்து மரணம், விசாரணைக்காக எழுந்து நிற்றல், மறுமை வாழ்க்கை ஆகியவை குறித்து நினைவூட்டல் செய்துகொண்டு மரணித்த ஒருவரின் உடல் (ஜனாஸா) ஒன்று தமக்கு முன்னால் இருப்பது போல அழுதுகொண்டிப்பார்கள்!”*
{ நூல்: 'அத்தஸ்கிரா பிஅஹ்வாலில் மவ்தா வஉமூரில் ஆஹிரா', பக்கம்: 125 }
قال الإمام التيمي رحمه الله تعالى:
*[ وكان عمر بن عبدالعزيز رحمه الله تعالى عنه يجمع العلماء فيتذاكرون الموت،والقيامة،والآخرة . فيبكون حتى كأن بين أيديهم جنازة! ]*
{ التذكرة بأحوال الموتى وأمور الآخرة ، ص - ١٢٥ }
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா