இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சொல்ல தான் செவிமடுத்ததாக உம்மு குல்தூம் பின்த் உக்பா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:
*(பரஸ்பரம் முரண்பட்டு பிணங்கிக்கொண்ட இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்!”*.
[ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 2692 ]
*✍விளக்கவுரை:*
நேரிய மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம், முரண்பட்டுக்கொண்ட மனிதர்களுக்கிடையில் சமாதான நல்லிணக்கம் ஏற்படுத்துவதைத் தூண்டுவதோடு அதில் ஆர்வமும் ஆசையும் ஊட்டுகிறது. பொய்யைக்கொண்டுதான் அதை சாத்தியப்படுத்த முடியும் என்றிருந்தாலும் அதைச் செய்யுமாறு அது வலியுறுத்துகிறது. இது, பகைமை பாராட்டுவோர் மற்றும் தர்க்கித்துக்கொள்வோரிடையே நலவை ஏற்படுத்துவதோடு பகைமை உணர்வை ஒழித்து, சர்ச்சைகளையும் நீக்கி விடுகிறது என்பதற்காக வேண்டியேயாகும்.
“நலவை வேண்டி நிற்கும் உபதேசம் மூலம் முரண்பட்டுக்கொண்ட மனிதர்களிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவர் பொய்யன் அல்லர்” என நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூற தான் செவிமடுத்ததாக இந்த நபிமொழியில் உம்மு குல்தூம் பின்த் உக்பா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
🔅 *நல்லதைப் புனைந்து சொல்கிறான்:*
*فينمي خيرا:*
தர்க்கித்து முரண்பட்டுக்கொண்டோரிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தத்தக்கதான பேச்சைக் கொண்டுசெல்கிறான் என்பதே இதன் பொருளாகும். உதாரணமாக, முரண்பட்ட இருவரில் ஒருவரிடம் சமாதானத்தை ஏற்படுத்துபவர் சென்று 'உங்களை உங்கள் நண்பர் புகழ்கிறார்!' என்றோ, அல்லது அவ்விருவரிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான நல்ல வார்த்தையையோ அவர் சொல்வதாகும்.
[ Omyma Abdelaziz Mahmoud &
مجموعة طريق التوبة
ஆகிய முகநூல் பக்கங்கள் ]
🎯 عن أم كلثوم بنت عقبة رضي الله عنها، أنها سَمِعْت رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقول :
*« ليس الكَذَّابُ الذي يُصلِحُ بينَ الناسِ، فَيَنمي خَيرًا، أو يقولُ خَيرًا ».*
[ المصدر : صحيح البخاري، رقم الحديث - 2692 ]
*🌷 شرح الحديث 🌷*
حثَّ الشرعُ الحنيفُ على الإصلاحِ
بينَ النَّاسِ ورغَّبَ فيه،
حتَّى وإنْ تحقَّقَ ذلكَ بالكذِبِ
وذلك لِمَا يعودُ بِالمصْلَحةِ على المُتباغِضينَ
والمُتخاصِمينَ وإِخمادِ رُوحِ العَداوَةِ وإِزالةِ الخُصوماتِ.
وفي هذا الحَديثِ تُخبرُ أمُّ كُلثومٍ بِنتُ عُقْبةَ:
أنَّها سمِعتْ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم يقولُ:
ليسَ الكذَّابُ الذي يُصلِحُ بينَ الناسِ
بالنَّصيحةِ التي تَقْتضي الخيرَ.
*🌟 فيَنْمِي خيرًا:*
أي: ينقُلُ كلامًا للإصلاحِ بينَ المُتخاصِمينَ
بأنْ يقولَ لأحدِهِما:
إنَّ صاحِبَهُ يمدَحُهُ ويُثْنِي عليهِ،
أو يقولُ خيرًا يُصلِحُ ما بينَ المُتخاصِمَين.
➖➖➖➖➖➖➖➖➖➖
*✍ தமிழில்*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா