அல்காமா (ரலி)

வரலாற்றில் ஓர் நாள்

மரணப் படுக்கையில் கிடக்கின்றார் அல்காமா! ஏன்ற நபித்தோழர். துடிக்கும் நெஞ்சுடன் சாகும் தருவாயில் கிடக்கும் கணவனுக்கு கலிமா (இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை| முஹம்மது (ஸல்) இறைவனின் தூதராவார் என்கிற சத்தியப் பிரகடனம்) சொல்லத் தூண்டுகிறார், அல்காமாவின் மனைவி.

ஆனால் அல்காமாவின் நா எழ மறுக்கின்றது. துடிக்கின்றார். சுழகும் தறுவாயில் சத்தியப் பிரகடனத்தைச் சொல்ல முடியாத வேதனையைக் கண்களில் காட்டுகிறார்.

தொழுகை, நோன்பு என்று பேணுதலுடன் வாழ்ந்த கணவனுக்கா இந்த நிலைமை?  நேஞ்சம் பதைத்த அல்காமாவின் மனைவி, அண்ணல் நபியிடம் சென்று தகவல் கொடுக்கின்றார்.

இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி), சுஹைப் (ரலி), அம்மார் (ரலி) ஆகியோரை அழைக்கின்றார். அல்காமாவிடம் செல்லுங்கள். அவருக்குக் கலிமாச் சொல்லிக் கொடுங்கள். மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் அல்காமாவிற்கு கலிமாவைச் சொல்லும்படித் தூண்டுகின்றார்கள். அவரது நாவு அப்பொழுதும் எழவில்லை. மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு செய்தி பறக்கின்றது. அல்காமாவின் பரிதாப நிலையை கேள்விப்பட்ட அண்ணலார் (ஸல்)அவர்கள் கேட்கின்றார்கள் :

அல்காமாவின் பெற்றோர்கள் யாராவது உயிருடன் இருக்கின்றார்களா? ஆம்! வயதான தாய் மட்டும் இருக்கின்றார்கள் எனப் பதில் வருகின்றது. அவரை வர முடிந்தால் வரச் சொல்லுங்கள். அல்லது நானே அவரது வீட்டிற்கு வருகின்றேன்.

அந்த மூதாட்டியின் முகத்தில் பிரமிப்பு! அண்ணல் நபி (ஸல்) அவர்கள், என்னைத் தேடி வருவதா? நூன் தான் அவரிடத்தில் செல்ல வேண்டும், என்று சொல்லிய வண்ணம் கைத்தடியை எடுத்துக் கொண்டு நபிகளாரைப் பார்க்கப் புறப்படுகின்றார்.

மூதாட்டியிடம், உண்மையைச் சொல்லுங்கள். அல்காமா எப்படிப்பட்டவர்? ரோம்பவும் நல்ல பிள்ளை. தோழுகையாளி, நோன்பாளி, இறைவழியில் செலவழிப்பவன். உங்களுடன் அவர் எப்படி நடந்துகொண்டார்?

இறைவனின் தூதரே! ஏனக்கு அவனைப் பிடிக்காது. அவன் மீது எனக்குக் கோபம்,

அது ஏன்!? இறைத் தூதரே! ஆவன் ரொம்பத் தங்கமான பையன் தான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு என்னை மதிக்காமல் மனைவி பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட்டான். அதனால் எனக்கு அவன் மீது அளவு கடந்த கோபம்.

அண்ணலார் சொன்னார்கள் : அல்காமாவின் அன்னையின் கோபம் தான் அவரைக் கலிமாச் சொல்லவிடாமல் தடுக்கின்றது.

பிறகு அண்ணல் நபி (ஸல்), பிலால் (ரலி) அவர்களை அழைக்கின்றார்கள். விறகுக் கட்டைகளை சேர்த்து எரிக்கச் சொல்கின்றார்கள். அல்காமாவின் தாய் கேட்கின்றார். இறைவனின் தூதரே! ஏன்ன செய்கின்றீர்கள்?

நான் அல்காமாவை உங்கள் கண் முன்னாலேயே எரிக்கப் போகின்றேன்.

ஆ! இறைவனின் தூதரவர்களே! ஏன்ன கொடுமை இது! என் கண் முன்னாலேயே என் மகன் எரிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது என்று அல்காமாவின் தாய் படபடவெனச் சொல்கின்றார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், நீர் உம் மகனை மன்னிக்கா விட்டால், இறைவன் அவனை நரக நெருப்பில் தான் வீசுவான். இறைவனுடைய தண்டனை கடுமையானது. நிரந்தரமானது. வாழ்நாள் முழுவதும் அல்காமா செய்த இறைவவழிபாடுகள், தொழுகைகள், நோன்பு எதுவுமே அவனுக்குப் பயன் அளிக்காது. நீர் மன்னித்தால் தான் இறைவனும் அல்காமாவை மன்னிப்பான் என்கிறார்.

அல்காமாவின் தாய் உடனே எழுந்து நின்று விடுகிறார். ஓ! இறைத்தூதரே! இறைவன் மீது சத்தியமாக, நான் அல்காமாவை மன்னித்து விட்டேன் என்கிறார். அல்காமா அந்தக் கனமே சத்தியக் கலிமாவைச் சொல்கின்றார். அன்றைய தினமே அவரது உயிர் பிரிந்து விடுகின்றது. அவரது இறுதித் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களே நடத்தினார்கள். அன்னையின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்று முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றார்.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடையதாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக் என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."" (31:14)
Previous Post Next Post