அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"தவ்பா செய்பவர் (அவ்வாவ்) தவிர, மற்றவர்கள் லுஹா (முற்பகல்) தொழுகையைப் பேணமாட்டார்கள்; இதுவே 'அவ்வாவீன்' (தவ்பா செய்பவர்களின்) தொழுகையாகும்."
ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஃ (7628)
இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் கூறுகிறார்கள்:
"லுஹா தொழுகை என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத் (ஸுன்னத்து முஅக்கதா) ஆகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி) அவர்கள் இதைத் தாங்களும் தொழுதுள்ளார்கள், தங்கள் தோழர்களுக்கும் இதைப் பரிந்துரைத்துள்ளார்கள்."
மஜ்மூஉல் ஃபதாவா (11/389)