நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஒரு நாளில் நூறு முறை,
'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்'
(அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்)
என்று கூறுகிறாரோ, அவருக்கு:
பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமான கூலி கிடைக்கும்.
நூறு நன்மைகள் எழுதப்படும்.
நூறு தீமைகள் அழிக்கப்படும்.
அந்த நாள் மாலை வரை ஷைத்தானிடமிருந்து அவர் பாதுகாப்பாக இருப்பார்.
அவர் செய்ததை விட அதிகமாகச் செய்தவரைத் தவிர, அவரை விடச் சிறந்த செயலை வேறெவரும் செய்ய முடியாது.
(நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்)
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"இதை பகலின் ஆரம்ப நேரத்தில் தொடர்ந்து (ஒரே அமர்வில்) ஓதுவதே சிறந்தது. அப்போதுதான் அது அந்த முழு நாளும் அவருக்குப் பாதுகாப்பாக அமையும்."
ஆதாரம்: ஷர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம்
அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்வோமாக...
அல்லாஹ் நம்மை அனைவரையும் பாதுகாத்து, நன்மைகளில் நிலைத்திருக்க அருள் புரிவானாக. ஆமீன்