ஷரீஆவின் சான்றுகளைத் தரம் பிரித்தே அறிஞர்கள் அணுகி உள்ளனர்.

இஸ்லாமிய ஷரீஆவின் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்ற அல்குர்ஆனிய வசனங்கள் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்பவற்றை அது பொதிந்துள்ள  உள்ளடக்கம் , அதன் தத்துவம், போதிக்க வரும் கருப்பொருள்  செய்திகளின்  தன்மை என்பவற்றைக் கவனத்தில் கொண்டே அறிஞர்கள் அதன் தரத்தையும் சட்டவாக்கத்தையும் அணுகினர். 

ஷரீஆவின் சான்றுகளின் கட்டமைப்பானது 
அகாயித்: நம்பிக்கை கோட்பாடுகள்,
அஹ்காம்: சட்டங்கள்,
ஆகிய  இரு பிரதான கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அகீதாவோடு தொடர்பான  சான்றுகளை அந்த துறை சார் அறிஞர்கள் 
السمعيات/ الغيبيات / القطعيات الأصول/ الثوابت 
போன்ற பெயர்களில் அழைப்பதுடன், அது தொடர்பான சான்றுகளில் மனித
கற்பனைகளைப் புகுத்தாது, வஹியில் வந்ததைப் போன்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதிகள்
என அழைக்கின்றனர். ஒருவர் இதில் தவறான விளக்கம் தருவதை 
كفر
ضلالة
بدعة مكفرة 
போன்ற தரத்தில்  நோக்குவர். 

உதாரணமாக ஈமானில் செயல்கள் சேர்க்கப்பட்டதா ? இல்லையா?
மறுமை நாளில் அல்லாஹ்வைக் காண முடியுமா? அதற்கான ஆதாரங்கள் என்ன? போன்ற விசயங்கள் உள்ளடங்கிய பகுதிகள். 

அதேவைளை,  ஏற்கத்தக்க கருத்து முரண்பாடுகளை கொண்டுள்ள பகுதியினை
الأحكام / الظنيات
எனக் குறிப்பிட்டு அதனை ஃபிக்ஹ் சார்ந்த சட்ட விசயங்களாக நோக்குகின்றனர்.

உதாரணமாக சுபஹ் குனூத், பிறை விவகாரம். இதில் ஹதீஸ் துறை அறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட ஊர்ஜிமான கருத்துப் பின்பற்றுவதை வலியுறுத்துவதை அவதானிக்க முடியும்.

உசூல்  மாறாத அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட விசயங்களை நோக்குவது போன்று கருத்து முரண்பாடுள்ளவைகளை நோக்குவது ஒரு அழைப்பாளரின் தேடல் குறைபாடாகும்.

இதன் ஒரு அங்கமாகவே சர்வதேசப் பிறையா? தேசியப் பிறையா என்ற மாநாடும், கருத்தரங்கும் நோக்கப்படல் வேண்டும்.

இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அகீதா பகுதியை விட்டுக் கொடுக்க முடியாத பகுதியாக இருப்பது போலவே முரண்பாடுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இஜ்மாவாக எட்டப்பட்ட வைகளிலும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக #உழ்ஹிய்யா பிராணி #ஆடு , மாடு. ஒட்டகம் தவிர்ந்த கால்நடைகளில் கொடுக்கலாமா ? என்ற தேடலில்  #சேவலைக் கொடுத்தாலும் போதுமானது என்ற கருத்து சில நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள சான்றின் நம்பகத்  தன்மைக்கு அப்பால் 
 இமாம் நவவி அவர்களின் பின்வரும் கருத்து பற்றி சிந்திக்க வேண்டும்.

((نقل جماعة إجماع العلماء عن أنَّ التضحية لا تصحُّ إلاَّ بالإبل أو البقر أو الغنم؛ فلا يجزىء شيء غير ذلك((    النووي في المجموع   )).

ஆடு , மாடு. ஒட்டகம் தவிர்ந்த கால்நடைகளில் உழ்ஹிய்யா செல்லுபடி அற்றது, அதுவல்லாதவைகளில் கொடுப்பது கூடாது என்ற முடிவான கருத்தை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.(அல்மஜ்மூஃ)

வழமையாக கொடுக்கப்படும் உழ்ஹிய்யா விசயத்தில் மாறுபட்ட கருத்து எழுகின்ற போது சான்றைப் பிரதானப்படுகின்ற இது போன்ற இஜ்மா முடிவிற்கு கட்டுப்படுவது அவசியமாகும்.
 
ஆனால்  கோட்பாடு சார்ந்த அம்சங்களோடு தொடர்பான குர்ஆன், ஹதீஸ்  வசனங்களை ஒருவர் தவறான வியாக்கியானம் செய்வதோ, அவற்றை
மறுப்பதோ ,  அல்லது தவறான வியாக்கியானம் தந்து அவற்றிற்கு இப்படித்தான் என்ற முறைகற்பிப்பதோ மார்க்கம் அங்கீகரிக்காத, அறிஞர்கள் கண்டிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

அதன் காரணமாகவே
لا اجتهاد في مسائل العقيدة 
#அகீதா விசயங்களில் இஜ்திஹாத் இல்லை எனக் கூறுவார்கள்.

அகீதா தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்களின் தலைப்புக்களிலும் அவற்றின் உள்ளடக்கங்களிலும் நாம் சுட்டுகாக்ட்டுகின்ற இந்தப் போக்கு மிகத்  தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அகீதா சார்ந்த கோட்பாடுகளை எழுதிய ஆரம்ப கால அறிஞர்கள் தமது நூல்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் தலைப்பாக:
الأصول 
العقيدة 
التوحيد والسنة 
الفقه الأكبر
الشريعة 
الإيمان 
போன்ற  பெயர்களில் பிரதான தலைப்பிட்டுள்ளதையும்  அவைகளை உள்ளே சென்று வாசித்தால்  அவற்றில் அகீதாவைப் பிரதானப்படுத்தும் தலைப்புக்களைக் காணலாம். 

உதாரணமாக 
حديث الافتراق 
பிரிவு தொடர்பான ஹதீஸின் கீழ்:
الخوارج
القدرية 
المرجئة 
الشيعة 
போன்ற  பிரிவினர் அல்லாஹ் அர்ஷில் இருந்தவனாக ஆட்சி செய்தல், 
النزول 
الرؤية
الشفاعة
نعيم وعذاب القبر
الروح
البعث 
المعاد
النفخ في الصور
போன்ற இன்னோரென்ன அம்சங்களைப் பிரதானப்படுத்தி இருப்பதை அவதானிக்கலாம்.

நூல்களாக எடுத்துக் கொண்டால் இமாம் அபூ உபைத் அல்காஸிம் பின் ஸல்லாம் அல்ஹரவி
 أبو عُبيد القاسم بن سلَّام بن عبد الله الهروي
அவர்களின்
الإيمان 
அல்ஈமான் என்ற 
நூல்,   இமாம் புகாரியின்
خلق أفعال العباد للبخاري
என்ற நூல்,
இமாம்  அபூ நூஐமின்  —  أبو نعيم

 الإمامة والرد على الرافضة
என்ற நூல், இமாம் தாருகுத்னி மற்றும் பலர் எழுதிய 

الرؤية
பிஷ்ருல் முரீசிக்கான  இப்னு குஸைமாவின் மறுப்பு

الرد على بشر المريسي لابن خزيمة
 பகுத்தறிவும் தெளிவான சான்றும் மோதுவதைத் தடுத்தல் என்ற இமாம் இப்னு தைமிய்யாவின்
درء تعارض العقل والنقل لابن تيمية 
நூலோடு மேலும் பல  நூல்களையோ 

இமாம் அஹ்மதின்
أصول السنة لأحمد بن حنبل (ت ٢٤١) 
நூலையோ
உதாரணமாகக் கொள்ளலாம்.
இமாம் அஹ்மத் எழுதிய 
 உசூலுஸ் சுன்னா நூலின் கீழ்காணும் பாடத் தலைப்புக்களைப் அவதானியுங்கள். 

١٧ ١ - الْإِيمَان بِالْقدرِ خَيره وشره
٢٢ ٢ - (وَالْقُرْآن كَلَام الله وَلَيْسَ بمخلوق)
٢٣ ٣ - وَالْإِيمَان بِالرُّؤْيَةِ يَوْم الْقِيَامَة
٢٣ ٤ - وَأَن النَّبِي قد رأى ربه
٢٥ ٥ - وَالْإِيمَان بالميزان
٢٨ ٦ - وَأَن الله تَعَالَى يكلمهُ الْعباد يَوْم الْقِيَامَة لَيْسَ بَينهم وَبَينه ترجمان
٢٩ ٧ - وَالْإِيمَان بالحوض
٣٠ ٨ - الْإِيمَان بِعَذَاب الْقَبْر
٣٠ ٩ - وَأَن هَذِه الْأمة تفتن فِي قبورها
٣٢ ١٠ - وَالْإِيمَان بشفاعة النَّبِي ﷺ
٣٣ ١١ - وَالْإِيمَان أَن الْمَسِيح الدَّجَّال خَارج مَكْتُوب بَين عَيْنَيْهِ كَافِر
٣٤ ١٢ - وَأَن عِيسَى ابْن مَرْيَم ﵇ ينزل
٣٤ ١٣ - وَالْإِيمَان قَول وَعمل يزِيد وَينْقص
٣٥ ١٤ - وَخير هَذِه الْأمة بعد نبيها
٤٢ ١٥ - والسمع وَالطَّاعَة للأئمة وأمير الْمُؤمنِينَ
٤٣ ١٦ - والغزو مَاض مَعَ الإِمَام إِلَى يَوْم الْقِيَامَة
٤٣ ١٧ - وَقِسْمَة الْفَيْء وَإِقَامَة الْحُدُود إِلَى الْأَئِمَّة
٤٤ ١٨ - وَدفع الصَّدقَات إِلَيْهِم جَائِزَة نَافِذَة
٤٤ ١٩ - وَصَلَاة الْجُمُعَة خَلفه وَخلف من ولاه جَائِزَة بَاقِيَة تَامَّة
٤٥ ٢٠ - وَمن خرج على إِمَام من أَئِمَّة الْمُسلمين
٤٦ ٢١ - وَلَا يحل قتال السُّلْطَان وَلَا الْخُرُوج عَلَيْهِ لأحد من النَّاس
٤٧ ٢٢ - وقتال اللُّصُوص والخوارج جَائِز
٥٠ ٢٣ - وَلَا نشْهد على أهل الْقبْلَة بِعَمَل يعمله بجنة وَلَا نَار
٥١ ٢٤ - وَمن لَقِي الله بذنب يجب لَهُ النَّار تَائِبًا غير مصر عَلَيْهِ فَإِن الله يَتُوب عَلَيْهِ
٥١ ٢٥ - من لقِيه وَقد أقيم عَلَيْهِ حد ذَلِك الذَّنب فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَته
٥٢ ٢٦ - وَمن لقِيه مصرا غير تائب من الذُّنُوب الَّتِي اسْتوْجبَ بهَا الْعقُوبَة فَأمره إِلَى الله
٥٣ ٢٧ - وَمن لقِيه من كَافِر عذبه وَلم يغْفر لَهُ
٥٣ ٢٨ - وَالرَّجم حق على من زنا وَقد أحصن إِذا اعْترف أَو قَامَت عَلَيْهِ بَينته
٥٤ ٢٩ - وَمن انْتقصَ أحدا من أَصْحَاب رَسُول الله
٥٥ ٣٠ - والنفاق هُوَ الْكفْر أَن يكفر بِاللَّه ويعبد غَيره وَيظْهر الْإِسْلَام فِي الْعَلَانِيَة
٥٦ ٣١ - (ثَلَاث من كن فِيهِ فَهُوَ مُنَافِق) على التَّغْلِيظ نرويها كَمَا جَاءَت
٥٩ ٣٢ - وَالْجنَّة وَالنَّار مخلوقتان
٦٠ ٣٣ - (وَمن مَاتَ من أهل الْقبْلَة موحدا)
٣ - وَالْإِيمَان بِالرُّؤْيَةِ يَوْم الْقِيَامَة
صَاحبه وَإِن أصَاب بِكَلَامِهِ السّنة من أهل السّنة حَتَّى يدع الْجِدَال ويؤمن بالآثار
٢ - (وَالْقُرْآن كَلَام الله وَلَيْسَ بمخلوق)
وَلَا يصف وَلَا يَصح أَن يَقُول لَيْسَ بمخلوق قَالَ فَإِن كَلَام الله لَيْسَ ببائن مِنْهُ وَلَيْسَ مِنْهُ شَيْء مخلوقا وَإِيَّاك ومناظرة من أخذل فِيهِ وَمن قَالَ بِاللَّفْظِ وَغَيره وَمن وقف فِيهِ فَقَالَ لَا أَدْرِي مَخْلُوق أَو لَيْسَ بمخلوق وَإِنَّمَا هُوَ كَلَام الله فَهَذَا صَاحب بِدعَة مثل من قَالَ هُوَ مَخْلُوق وَإِنَّمَا هُوَ كَلَام الله لَيْسَ
بمخلوق

٣ - وَالْإِيمَان بِالرُّؤْيَةِ يَوْم الْقِيَامَة كَمَا رُوِيَ عَن النَّبِي ﷺ من الْأَحَادِيث الصِّحَاح

٤ - وَأَن النَّبِي قد رأى ربه فَإِنَّهُ مأثور عَن رَسُول الله ﷺ صَحِيح رَوَاهُ قَتَادَة عَن عِكْرِمَة عَن ابْن
عَبَّاس وَرَوَاهُ الحكم بن إبان عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس وَرَوَاهُ عَليّ بن زيد عَن يُوسُف بن مهْرَان عَن ابْن عَبَّاس والْحَدِيث عندنَا على ظَاهره كَمَا جَاءَ عَن النَّبِي ﷺ وَالْكَلَام فِيهِ بِدعَة وَلَكِن نؤمن بِهِ كَمَا جَاءَ على ظَاهره وَلَا نناظر فِيهِ أحدا
٥ - وَالْإِيمَان بالميزان يَوْم
الْقِيَامَة كَمَا جَاءَ (يُوزن العَبْد يَوْم الْقِيَامَة فَلَا يزن جنَاح بعوضة)
ويوزن أَعمال الْعباد كَمَا جَاءَ فِي الْأَثر وَالْإِيمَان بِهِ والتصديق بِهِ والإعراض عَن من رد
ذَلِك وَترك مجادلته

٦ - وَأَن الله تَعَالَى يكلمهُ الْعباد يَوْم الْقِيَامَة لَيْسَ بَينهم وَبَينه ترجمان والتصديق بِهِ
٧ - وَالْإِيمَان بالحوض وَأَن لرَسُول الله حوضا يَوْم الْقِيَامَة يرد عَلَيْهِ أمته عرضه مثل طوله مسيرَة شهر آنيته كعدد نُجُوم السَّمَاء على مَا صحت بِهِ الْأَخْبَار من غير وَجه
٨ - الْإِيمَان بِعَذَاب الْقَبْر

٩ - وَأَن هَذِه الْأمة تفتن فِي قبورها وتسأل عَن الْإِيمَان وَالْإِسْلَام
ஆகிய தலைப்புக்களில் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இங்கு தலைப்பிறை வால்பிறை என்ற ஒன்றைப் பார்க்க முடியாது. 

அதே வேளை, சுன்னாவுக்கு முரணான கருத்துக்களை  அந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் தனியான நூல்களிலோ, அல்லது ஒரு நூலின் பொதுத் தலைப்புக்களில் ஒன்றாகவோ அவர்கள் விளக்கிடத் தவறியதுமில்லை. 

உதாரணமாக இமாம் இப்னு வல்லாஹ் அவர்களின் 
البدع والمحدثات لابن وضاح 
என்ற நூல், 
நூல், —  أبو بكر الطرطوشي இன்
الحوادث والبدع
போன்ற நூல்கள் பித்ஆ தொடர்பான விசயங்களை  உள்ளடங்கியதாக இருப்பதைக் காணலாம்.

அவ்வாறே, இமாம் ஷாஃபி மத்ஹப் அறிஞரான அஹ்மத் இப்னு ஹஜர் அல்ஹஸமீ அல்மக்கீ அவர்கள் எழுதிய 
الزواجر عن اقتراف الكبائر
நூலில் கப்ருகள் கட்டி செய்யப்படுகின்ற ஷிர்க்கான பித்அத்தான காரியங்களை மிகத் தெளிவான பாவமாக தீர்ப்பளித்துள்ளதைப் பார்க்கின்றோம்.

குறித்த நூலில் :  தொண்ணூற்றி  மூன்றாவது பெரும் பாவம் முதல் தொண்ணூற்றி எட்டு,  ஒன்பதாவது பாவம் எனத் தலைப்பிட்டு #கப்ரு கட்டி அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றப்படும் தற்கால கொடுமைகளை விபரித்து #வழிகெட்ட சூபிஸ #தரீக்காகளுக்கு பின்வரும் அடிப்படையில் சாட்டை அடி கொடுத்து அப்பவே தன்னை பெரிய வஹ்ஹாபியாக  நிரூபித்திருப்பதைக் காணலாம்.  
இமாம் அவர்களின் தீர்ப்பை மிக நிதானமாக வாசிக்கவும் .
 
[الْكَبِيرَةُ الثَّالِثَةُ وَالتِّسْعُونَ حَتَّى الثَّامِنَةُ وَالتِّسْعُونَ اتِّخَاذُ الْقُبُورِ مَسَاجِدَ وَإِيقَادُ السُّرُجِ عَلَيْهَا]
(الْكَبِيرَةُ الثَّالِثَةُ وَالرَّابِعَةُ وَالْخَامِسَةُ وَالسَّادِسَةُ وَالسَّابِعَةُ وَالثَّامِنَةُ وَالتِّسْعُونَ: اتِّخَاذُ الْقُبُورِ مَسَاجِدَ، وَإِيقَادُ السُّرُجِ عَلَيْهَا، وَاِتِّخَاذُهَا أَوْثَانًا، وَالطَّوَافُ بِهَا، وَاسْتِلَامُهَا، وَالصَّلَاةُ إلَيْهَا) أَخْرَجَ الطَّبَرَانِيُّ بِسَنَدٍ لَا بَأْسَ بِهِ عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ ﵁ قَالَ: «عَهْدِي بِنَبِيِّكُمْ قَبْلَ وَفَاتِهِ بِخَمْسِ لَيَالٍ فَسَمِعْته يَقُولُ: إنَّهُ لَمْ يَكُنْ نَبِيٌّ إلَّا وَلَهُ خَلِيلٌ مِنْ أُمَّتِهِ وَإِنَّ خَلِيلِي أَبُو بَكْرٍ بْنُ أَبِي قُحَافَةَ، وَإِنَّ اللَّهَ اتَّخَذَ صَاحِبَكُمْ خَلِيلًا، أَلَا وَإِنَّ الْأُمَمَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ وَإِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ، اللَّهُمَّ إنِّي بَلَّغْتُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ اللَّهُمَّ اشْهَدْ ثَلَاثَ مَرَّاتٍ» الْحَدِيثَ.
وَالطَّبَرَانِيُّ «لَا تُصَلُّوا إلَى قَبْرٍ، وَلَا تُصَلُّوا عَلَى قَبْرٍ»

அவ்வாறே இமாம் புகாரி அவர்கள் தனது ஸஹீஹில் 
ஹனஃபி மத்ஹபின் கருத்தையும் போக்கையும்  மறுதலித்து 
 كتاب الحيل 
தந்திரங்கள் என்று அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டு தனியான அத்தியாயமாக எழுதி இருப்பதையும்,

தொழுகையில் இரு கைகைளையும் #உயர்த்துவதை பாவம் போல கருதுகின்ற ஹனஃபிகளுக்கு  மறுப்பாக 
كتاب رفع اليدين في الصلاة
எனத் தலைப்பிட்டு  தொழுகையில் நான்கு 
நிலைகளில் இரு கைகளையும் உயர்த்துவதுதான் நபிவழித என நிரூபித்து எழுதிய நூலையோ எடுத்து நோக்கலாம்.

இந்தப்பகுதி தஃவாக் களத்தில் இஜ்திஹாத் சார்ந்த விசயங்களை அடிப்படயான உசூல் சார்ந்தவையாக மாற்றியமைத்து சமூகத்தை பிளவுபடுத்துவதோடு,   பிறரின் ஆதாரபூர்வமான கருத்துக்களைக் புறம் தள்ளி   கொச்சைப்டடுத்துவோரின் மூர்க்கத்தனமான  போக்கை மறுதலிக்க எழுதிய வரிகளாகும்.

نسأل الله أن يلهمنا رشدنا 
அல்லாஹ் நமக்கு மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி 
أحدث أقدم