நம் சிந்தனைக்கான அருள்மறை வசனங்கள்
அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு ஒட்டகம் படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!
ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88: 17)
இந்த பிரபஞ்சத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த ஒட்டகம் ஒன்றே போதும். அதை நிரூப...ிக்க, பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்...கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது. உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும்.
குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும். ஒட்டகம் ஒரு மாதம் நீர் அருந்தாமல் இருந்தால் கூட உடல் எடை 3மூமட்டும் குறையும். சாகாது. ஆனால் மனிதர்களுக்கு 72 மணி நேரம் நீரில்லாமல் போனால் உடல் எடையில் 8மூ குறைந்து மரணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து விடும். மனிதர்களுக்கு உடல் எடையில் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிந்துவிடும் ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள் கடுமையான வெப்ப காலங்களில் உண்பதைக் குறைத்துக் கொண்டு உடலை இதமாக வைத்துக்கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக்கொள்ளும். நிழல் இ;ல்லையென்றால் சூரியனை நோக்கி ஒடலை வைத்துக் கொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடலில் படும்படியாக அதன் உடலமைப்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவிலான அதன் உடலமைப்பாகும். ஒட்டகங்கள் கூட்டங்களாக ஆகிக் கொண்டு ஒன்றை ஒன்று நெருக்கிக் கொள்ளும் அது எதற்காக என்றால் உடல் சூட்டை சுற்றும் புற காற்றின் சூட்டை விட குறைவாக வைத்துக் கொள்வதற்காகவாகும். ஆதன் சூட்டை வியர்வையின் உதவியில்லாமல் வெளியேற்ற உதவுவதோடு வெளி சூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதாவது ரோமமும், தோலும் சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது. வெயிலின் வெப்பம் 150 டிகிரி என்றால் அதன் தோல் சூடு 75 டிகிரியாக இருக்கும்.
மற்ற மிருகங்கள் குளம்புகளைக் கொண்டு நடக்கும். ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குளம்புகளைக் கொண்டு நடக்கும். (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்) அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது. (நாம் ஒரு சில அடிகள் பாலைவனத்து மணலில் நடந்தாலே போதும் நாக்கு தள்ளி விடும்.) பிராணிகள,; மனிதர்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Anklejoint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது.
எங்கேயாவது தூரத்தில் உணவோ, நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமில்லாமல் தேடுவதற்கும் மரங்களில் உயரத்தில் உள்ள இலைகளை மேய்வதற்கும் அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12 அடி உயரத்தில் தலை இருக்கும்) மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் சிதறும் அதைக்கூட சிதற விடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம். பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம். எந்த அளவிற்கு என்றால் அதன் உதட்டில்பட்டு முட்களே உடைந்து விடும். மேலும் விசே~ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது. சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், நான் புலி, பசித்தாலும் புல்லை தின்னமாட்டேன் என்று பிடிவாதம பிடிக்காது. உணவு பஞ்சம் என்றால் எலும்பு, மீன் இறைச்சி, தோல், சில சமயங்களில் எஜமானனின் கூடாரத்தையே தின்று விடும் பரிணாம வளர்ச்சியா? படைக்கப்பட்டதா? எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் வார்த்தைகள் விபரமற்ற பிதற்றல்களாக ஆகிவிடுவதை எளிதில் உணரலாம்.