இது வரை ஏற்பட்டு உள்ள அடையாளங்கள்
1. மகளின் தயவில் தாய் இருப்பாள்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் ! பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள் . இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 50 )
2. பின் தங்கியவர்கள் உயர் நிலை அடைதல்
கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல் .
3. விபச்சாரமும் , மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும் , மதுவும் பெருகி விடும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 50 )
( நூல் : ஸஹீஹ் புகாரி : 80 )
4. தகுதியற்றவர்களிடம் பொறுப்பு இருக்கும்
ஆட்சியதிகாரம் , நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 6496 )
5. பாலை வனம் சோலை வனமாகும் அரபுப் பிரதேசம் நதிகளும் , சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் )
6. காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது .
( இன்றைய ) ஒரு வருடம் ( அன்று ) ஒரு வாரம் போலாகி விடும் . ( இன்றைய ) ஒரு வாரம் ( அன்று ) ஒரு நாள் போலாகும் . ( இன்றைய ) ஒரு நாள் ( அன்று ) ஒரு மணி நேரம் போல் ஆகும் . ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் !
( நூல் : திர்மிதீ : 2254 )
7. கொலைகள் பெருகி விடும்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் ஆகும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 1036 )
8. நில அதிர்வுகளும் , பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகமாகும் வரை கியாம நாள் ஏற்படாது !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 1036 )
9. பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் !
( நூல் : நஸயி : 682 )
10. நெருக்கமான கடைவீதிகள் ஏற்படும்
நெருக்கமான கடை வீதிகள் ஏற்படும் கடைகள் பெருகி அருகருகே அமைவதும் , நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் ஆகும் !
( நூல் : அஹ்மத் : 10306 )
11. பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும் .
( நூல் : ஸஹீஹ் புகாரி : 81 )
12. ஆடை அணிந்தும் நிர்வாணிகள்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் !
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம்: 3971 )
13. தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று !
( நூல் : ஹாகிம் : 493 )
14. மரணிக்க ஆசைப்படுதல்
கபூரில் உள்ளவரை பார்த்து நானும் இது போன்று இருந்து இருக்க கூடாதா ! என்று எண்ணம் தோன்றும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 7115 )
15. முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 7121 )
16. பேச்சைத் தொழிலாக்கி அதன் மூலம் சாப்பிடுவார்கள்
தங்கள் நாவுகளை ( மூல தனமாகக் ) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது !
( நூல் : அஹ்மத் : 1511 )
17. அமல்கள் குறையும் - கஞ்சத்தனம் ஏற்படும் காலம் சுருங்கிவிடும் !
அமல் குறைந்துபோய்விடும் ! மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 7061 )
18. ஹலால் - ஹராம் தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் ( இனி ) வரும் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 2059 )
19. காரணம் இன்றி கொலை
கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது . கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது !
( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 5574 )
20. புதிய வகை நோய்
புதிய வகை நோய் வந்து அதிகமானோர் மரணம் அடைவார்கள் : ஆடுகளுக்கு வருகிற ( ஒரு வகை ) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் ( அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள் )
( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )
21. நபி ( ஸல் ) அவர்களின் மரணம்
என்னுடைய மரணம் ஏற்பட்டு விட்டால் கியாமத் நாளை எதிர்பாருங்கள் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )
22. உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி .
( நூல் : அஹ்மத் : 11365 )
இது வரை நிகழாத அடையாளங்கள்
23. மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்குமிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது . அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும் . இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள் .
( நூல் : புகாரி : 3609 )
24. யூதர்கள் உடன் போர்
நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 2926 )
25. கஃபா சேதப்படுத்தப்படுதல்
அபிஸினியாவைச் சேர்ந்த , மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள் .
( நூல் : ஸஹீஹ் புகாரி : 1596 )
26. யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் ( ஃபுராத் ) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும் . அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் !
( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 7119 )
27. கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 3517 )
28. அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது !
( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 5580 )
29. வாரி வழங்கும் கலீஃபா
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா ( ஆட்சியாளர் ) தோன்றுவார் . அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார்
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் )
30. செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ! எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் அதனை அற்பமாகக் கருதுவார் !
( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )
31. தர்மப் பொருள்
தம் தர்மப் பொருளை பெற யாரும் இருக்க மாட்டார்கள் !
( நூல் : ஸஹீஹ் புஹாரி : 7120 )
32. பைத்துல் முக்கதிஸ்
இறுதி நாளின் அடையாளம் பைத்துல் முக்கத்திஸ் வெற்றி கொள்ளப்படும் !
( நூல் : ஸஹீஹ் புஹாரி : 3176 )