تاريخ الاحتفال بالمولد النبوي
பித்அத்கள்.. தோற்றமும் பின்னணியும்,விளைவுகளும்" என்ற எனது நூலிலிருந்து ஓரு பகுதி.
பூமான் நபியின் புகழ்பாடும் மீலாத் விழாவும் மௌலூதுகளும் உருவானதன் பிற்புலம் ...
நாமெல்லாம் அல்லாஹ்வை ஒரே இரட்சகனாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும் நபியாகவும் வழிகாட்டி யாகவும் ஏற்றுக் கொண்டுள்ளோம். நபியவர்களை எங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கின்றோம். அவ்வாறு நேசிப்பது கடமை, அவர்களை நேசிக்காத யாரும் முஸ்லிமாக இருக்கவே முடியாது என்று ஈமான்-விசு வாசம் கொண்டுள்ளோம். அவர்களது ஸூன்னாவை வாழ்வின் அனை த்து பகுதிகளிலும் அமுல்ப்படுத்துவதிலேயே உண்மையான மஹப்பத் தும் ஈருலக வெற்றியும் தங்கியுள்ளது என்பது முஸ்லிம்களான எம் அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அவ்வாறே நபியவர்களுக்கு உறுதுணையாக தோள்கொடுத்து தீனுக்கா க உழைத்த உத்தம ஸஹாபாக்கள் அத்தனை பேரையும் நாம் நேசிக் கின்றோம். மதிக்கின்றோம். அவர்களையும் நேர்வழியின் முன்னோடிக ளாகவும் குர்ஆன் ஹதீஸூக்கு செயல்வடிவம் கொடுத்த உத்தமர்களாக வும் மதிக்கின்றோம்.
ஆனால் இங்கு நமது சமூதாயத்தில் காணப்படும் பிரச்சினை நபியவர் களை நேசிப்பது எப்படி ? என்பதுதான்.
நமது முஸ்லிம் சமூகத்தின் கணிசமான பகுதியினர் இன்று நபியவர் களை நேசிக்கின்றோம்;, அந்த நேசத்தை வெளிப்படுத்துகின்றோம் என் று சொல்லிக்கொண்டு மீலாத் விழா என்ற பெயலில் நபியவர்கள் புகழ் பாடி மவ்லூது வைபவங்கள், சந்தணக்கூடு, அலங்காரங்கள் கொண்டா ட்டங்கள், வீதிஊர்வலங்கள் மேடைக்பேச்சுக்கள், விருந்து , நார்சா என்று இரு பெருநாள்த் தினங்களை விடவும் கோலாகலமாக மீலாத் விழாவைக் கொண்டாடி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதிலும் மிகவும் மனவேதனைக்குரிய விடயம் யாதெனில் இவை அனை த்தையும் இவர்கள் இபாதத் என்ற எண்ணத்தில் அல்லாஹ்விடத்தில் நன்மையையும் அவனின் அருளையும் றஹ்மத்தையும் பெற்றுத்தரும் என்ற எண்ணத்தில் இவர்கள் செய்வதுதான்.
எனவே இது இபாதத்தாக இருந்தால் நபியவர்கள் அதைப்பற்றி ஏதா வது சொல்லியிருக்கின்றார்களா? அல்லது ஸஹாபாக்களாவது இப்படி யானதொரு விழாவை எடுத்திருக்கின்றார்களா? என்பதை வரலாற்று ரீதி யாக ஆராந்து பார்ப்பது பொருத்தமானதாகும்.
நபியவர்களின் வரலாற்றுக் காலத்தையோ ஸஹாபக்கள் தாபியீன்கள் தபஉதாபியீன்களின் காலத்து வரலாற்றையோ ஆராய்ந்து பார்க்கும் போ தோ இஸ்லாமிய வரலாற்றின் முதல் 350 வருடங்கள் வரைக்கும் வர லாற்றை வடிகட்டித் தேடிப்பார்த்த போதும் அக்காலப்பகுதிகளில் வாழ் ந்த எந்த உலமாக்களோ, ஆட்சியாளர்;களோ இப்படியொரு மௌலீது-மீலாது விழாவைப்பற்றிப் பேசியதாகவோ அனுஸ்டித்ததாகவோ ஏன் ? பாமர மக்களிடத்தில் கூட இப்படியொரு நடைமுறை பற்றிப் பேசப்பட்ட தாகவோ அப்படியொரு சொல்ப்பிரயோகம் அறிமுகமாகி இரு ந்ததா கவோ கூட எவ்வித வரலாற்று தரவுகளும் இல்லை.
இமாம் ஸகாவி (றஹ்) அவர்கள் இதுபற்றிக் குறிப்பிடும்போது...
மௌலிது சரீப் பாராயணம் செய்யும் நடைமுறை இஸ்லாமிய வரலாற் றில் சிறந்த காலப்பகுதியென நபியவர்களால் விதந்துரைக்கப்பட்ட முத ல் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியிலும் வாழ்ந்த ஸலபுகள்-முன்னோ டி அறிஞர்களிடம் அறிமுகமாகியிருந்ததாக எவ்வித ஆதாரமும் இல் லை. மாறாக அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலேயே அது அறிமுகமா னது. சுபுலுல் ஹூதா 1-439 سبل الهدى للإمام السخاوي
அப்படியெனில் இந்த மௌலூது மீலாதுக் கொண்டாட்ட நிகழ்வு எங்கு எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ? என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகும். ஆமாம்! இதற்கான விடையை புகழ்பெற்ற ஸூன்னத் வல்ஜமாஅத் வரலாற்றாசிரியரான இமாம் மக்ரீஸி(றஹ்) அவ ர்கள் தனது நூலில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்..
'நான்காம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இஸ்லாமிய நிலங்கள் சிலவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பாத்திமிய்ய ஆட்சியாளர் களே இந்தக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். பாத்திமிய்ய ஆட்சியாளர்கள் வருடம் முழுவதும் பல்வேறு மௌலீது நிகழ்வுகளை யும் கொண்டாட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர். அவைகளாவன முஹர்ரம் - புதுவருடக் கொண்டாட்டம் , ஆங்கிலேய சீசர் வருட முதல் நாள் கொண்டாட்டம், ஆஸூரா பெருநாள், நபிகளார் பிறந்த மீலாத் பெருநாள், அலி(றழி) பிறந்த தின கொண்டாட்டம், அவ்வாறே ஹஸன், ஹூஸைன், பாத்திமா(றழி), அல் கலீபத்துல் ஹாளிர் பிறந்த தின கொண் டாட்டங்கள், றஜப் மாத ஆரம்ப மற்றும் றஜப் நடுப்பகுதி கொண்டாட்டங் கள், றமழானை வரவேற்கும் நிகழ்வு, றமழான் முதல்நாள் நிகழ்வு , றமளான் நடுப்பகுதி, றமழான் இறுதிப்பகுதியில் றமழானை வழியனுப்பும் கொண்டாட்டம், ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா பண்டிகைகள், அல் கதீர் பண்டிகை ( சீஆக்களின் 12ம் இமாம் தலைமறைவான நாள்) மாரி கால ,கோடைகாலப் பண்டிகைகள் பத்ஹூல் கலீஜ் பண்டிகை (வளை குடா வெற்றிப்பண்டிகை,) நைரூஸ், கத்தாஸ், யேசு பிறப்பு ஆகிய கிருஸ் த்தவர்களின் மூன்று பண்டிகைகள், மற்றும் பல பண்டிகைகளை இவ ர்கள் அறிமுகம் செய்து மக்களை அவற்றைக் கொண்டாடுமாறும் பணித்தனர். நூல்: அல்குதத் 1-490.
மற்றொரு நூலில் இமாம் மக்ரீஸிய் குறிப்பிடுகையில்..
ஹிஜ்ரி 394ல் பாத்திமிய்ய ஆட்சியாளர் நபியவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு றபீஉல் அவ்வல் மாத ஆரம்பத்திலேயே வீதிகளில் விளக் கேற்றி எகிப்து நகரை அலங்கரிக்குமாறு மக்களை நிர்ப்பந்தித்தார். المقريزي في إتعاظ الحنفاء (2ஷ48)
517ல் றபீஉல் அவ்வல் மாதத்தில் மீலாத் விழாக் கொண்டாடுவது அரச சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் வாழ்ந்தவர் களில் ஒருவரான இமாம் துர்குமானி அவர்கள் இது பற்றிக் குறிப்பிடு கையில்..
மிகப் பெரும் பித்அத்தும் கேவலமான கொடுமையான நிகழ்வும் யாதெ னில் கிருஸ்த்தவர்களின் பண்டிகைகளான நைரூஸ்-இயேசு பிறந்தநாள் போன்ற பண்டிகைகளை பாத்திமிய்ய ஆட்சிக்காலத்தில் நமது முஸ்லிம் களும் சேர்ந்து கொண்டாடி அவற்றுக்காக செல்வத்தை செலவு செய்த மைதான். இந்தச்செலவினால் இவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடை க்கப் போவதில்லை. மாறாக இம்மையிலும் மறுமையிலும் அதன்தீங்கு அவர்களை வந்தடைந்தே தீரும். கிருஸ்த்தவர்கள் அனுஸ்டிக்கும் இயே சு பிறந்த தினத்தை ஒரு முஸ்லிம் கொண்டாடுவதை விட மிகப் பெரும் துர்ப்பாக்கியமும் தலைகுனிவும் வேறென்ன இருக்க முடியும்.? ஹனபி மத்ஹபு உலமாக்கள் வழங்கியுள்ள பத்வாவின்படி மேற்படி இயேசு கிரு ஸ்த்து பிறப்புக்கு விழாவெடுக்கும் முஸ்லிம்கள் தவ்பாச் செய்து மீளாத பட்சத்தில் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையில் அவர்கள் காபிர்களாவார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள்.
اللمع في الحوادث والبدع (1ஃ293-316
இதன்படி பார்க்கும்போது மீலாத் விழாக்கொண்டாடும் வழக்கமும் மௌ லூது வைபவங்கள் நிகழ்த்தும் நடைமுறைகளும் சீஆ ஆட்சியாளர்க ளான பாத்திமிய்யாக்களின் ஆட்சிக்காலத்திலேயே அரங்கேற்றப்பட் டன என்பதை சந்தேகத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகின்றது.
இந்த பாத்திமிய்ய ஆட்சியாளர்கள் யார்? அவர்களின் பூர்வீகமென்ன? அவர்களின் கொள்கை குறிக்கோள் என்பது பற்றி இஸ்லாமிய அறிஞர் கள் சொன்ன கருத்துக்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்திருப்பது அவசி யாகும்.
இமாம் இப்னு ஸாம்மா (றஹ்); தனது நூலில் இதுபற்றிக் கூறும் போது..
'இந்த பாத்திமிய்யா சீஆக்கள் தம்மை பாத்திமா நாயகியின் பரம்பரை யில் பிறந்த கண்ணியமானவர்கள் என்று மக்களுக்குக் காட்டிக் கொண் டார்கள். அதைக் காட்டித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்து ஆட்சியை அமைத்தனர். எனினும் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் குறிப் பிடும் போது இவர்கள் கண்ணிவான்களுமில்லை, பாத்திமா நாயகியின் வம்சத்துக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. மாறாக இவர் கள் பனூ உபைத் பரம்பரையில் உதித்தவர்கள், இந்த உபைத் என்பவரின் தந்தை நாஸ்திகராகவும் கத்தாஹ் என்ற மஜூஸி-நெருப்பு வணங்கிக ளில் பரம்பரையைச் சேர்ந்தவருமாவார். அவ்வாறே இன்னும் சிலர் அவர் சிரியா நாட்டைச் சேர்ந்த இரும்புத் தொழில் செய்யும் ஒரு யூத னாவார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த யூதனின் அல்லது நெருப்புவணங்கியின் மகனான உபைத் என்ப வன் முதன் முதலில் மொரோக்கோ நாட்டிற்குள் பிரவேசித்து தன் பெயர் அப்துல்லாஹ் என்றும் தன்னை அலி(றழி)யின் அலவி பரம்பரையில் பாத் திமா நாயகியின் வம்சத்தில் பிறந்தவன் என்று பிரகடனப்படுத்தினான். ஆனால் பரம்பரை அறிவியல் பற்றிய அறிஞர்கள் இவனுக்கும் அலவிய் யா பரம்பரைக்கும் எவ்வித தொடர்புமில்லை என உறுதிப்படுத்துகின்ற னர். உண்மையில் அப்துல்லாஹ் பின் சபஉவைப் போன்று இவனும் யூதர்களின் ஒரு கைக்கூலி. அப்துல்லாஹ் பின் சபஉ என்ற பெயர் கொடு த்து யூதர்கள் அவனை முஸ்லிம் உம்மதுக்குள் புகவைத்து உதுமான் (றழி)யின் ஆட்சியைக் கவிழ்த்து அலி(றழி)யின் ஆட்சியில் அவர்களை ஆதரிப்பதாகக் கூறியே சதிசெய்து ஆட்சியைச் சின்னாபின்னமாக்கிய யூதர்கள் உபைத் என்பவனை வைத்து சீஆக்களுக்கென ஒரு தனியான ஆட்சியை உருவாக்கி அவ்வரசை வைத்தே இஸ்லாமிய சாம்ராஜியத்தை வீழ்த்தி சீஆ சாம்ராஜியத்தை உருவாக்கி தம்சொற்படி அவர்களை இய க்கி இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தை அழிப்பதே இந்த அநி யாயக்கார யூதர்களின் திட்டம்.
பின்னர் அவர்களின் திட்டப்படி உபைதின் ஆதிக்கம் கொஞ்சங்கொஞ்ச மாக அங்கு தழைக்க ஆரம்பிக்கின்றது. அங்கு ஒரு சிற்றரசை ஏற் படுத் திக் கொண்டு தன்னை எதிர்பார்க்கப்படும் மஹ்தி(அலை) எனப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தான். இவன் ஒரு மோசமாக ஸின்தீக்காக- நயவஞ்சகனாகவும் இஸ்லாத்தின் எதிரியாகவும் சீஆக் கொள்கையில் ஊறியவனாகவும் தன் உண்மையான கொள்கையை வெளிப்படுத்தாமல் மறைத்தும் வந்தான். அவ்வாறே இஸ்லாமிய சட்டதிட்டங்களை மக்க ளின் நடைமுறை வாழ்விலிருந்து நீக்கவேண்டும் என்ற கெட்டஎண்ணம் இவனிடமிருந்தது. இதனாலேயே ஸூன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பலரை வேண்டுமென்றே பல்வேறு காரணங்களைக் கூறி சிறையில டைத்துப் படுகொலை செய்தான். இவனது குறிக்கோள் முஸ்லிம்கள் மார்க்கச் சட்டங்களை உதறிவிட்டு மிருகங்களைப் போல நினைத்தபடி ஒழுக்கச் சீர்கேடுகளிலும் அனாச்சாரங்களிலும் தாராளமாக ஈடுபட வேண்டும் என்பதே!.
இவனையடு;த்து ஆட்சிக்கு வந்த இவனது வழித்தோன்றல்களும் இவன் வழியிலேயே ஆட்சியைத்; தொடர்ந்தனர். சீஆக் கொள்கையை பிர ச்சாரம் செய்வதற்கென்றே இவர்கள் பல பிரச்சாரகர்களை வைத்திரு ந்தனர். அவர்கள் பல்வேறு தவறான தகவல்களை மக்களுக்கு போதித்து தமது சீஆக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த னர். இவர்களுடைய ஆட்சிக்காலம் முழுக்க இந்த முஸீபத் தொடர்ந் தது. இதனால் சீஆ-றாபிழாக்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்க ளின் ஆதிக்கம் வேரூண்ட ஆரம்பித்தது. (-دولة فاطمية- البدع الحولية299முதல் 567 வரை)
இவர்களது ஆட்சியில் மொத்தம் 14 கலீபாக்கள் ஆட்சி செய்தனர். அக் காலப்பகுதியில் மக்கள் சொல்லொன்னா துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர். பல்வேறு வரிகள் மக்கள்மீது திணிக்கப்பட்டன.
நாட்டின் வளங்களையெல்லாம் இவர்கள் உறுஞ்சிக்குடித்து கபளீகரம் செய்து வந்தனர் .
அல்முஇஸ் லிதீனில்லாஹ் என்பவனின் ஆட்சியில் இவர்களின் ஏவலா ளர்கள் இஸ்லாமிய அறிஞர்களையும் உலமாக்களையும் அவர்களது வீடுகளுக்குச் சென்று படுக்கையில் வைத்தே அவர்களை வெட்டிக் கொலைசெய்தார்கள். அம்மன்னன் குத்பாக்களில் தன்மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று உலமாக்களை நிர்ப்பந்தித்தான். தன்னை ஹதீஸ்களில் சொல்லப்பட்ட மஹ்தி என்று வாதிட்டதுடன் அனைவரும் தன்னை மஹ்தி என்ற புனைப் பெயர் கூறியே அழைக்க வேண்டுமென் றும் நிர்ப்பந்தித்தான். சீஆக்கொள்கையை ஏற்காமல் எதிர்க்கும் முஸ் லிம்களையும் உலமாக்களையும் எதிர்க்க ரோம மற்றும் பிரான்ஸ் படை களின் உதவியை நாடினான். அவர்கள் பலதடவைகள் நாட்டுக்குள் பிரவேசித்து ஸூன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு அட்டூ ழியங்கள் செய்து பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்து , பெண்களைக் கற்பழித்து மானபங்கப்படுத்தியும் செல்வர். சர்வாதிகாரி போல் ஆட்சி செய்த அவன் தனது ஏவலாளர்களை ஒரு கட்டத்தில் தன் னையே கடவுள் என்று நம்பவேண்டும் என்றும் கட்டளையிட்டான். என வே அவனது ஆதரவாளர்களில் சிலர் அவனை வலதுல்லாஹ், அல்லா ஹ்வின் மகனே! என்றும், மற்றும் சிலர், றஸூலுல்லா அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் அத்தாட்சியே! என்றும் மற்றும்சிலர் அல்லா ஹ்வே! எங்களைப் படைத்தவனே! எங்களுக்கு றிஸ்கு அளிப்பவனே! என்றெல்லாம் புகழத் தொடங்கினார்கள். அவனையடுத்து அவனது மக ன் அல்காயிமு பிஅம்ரில்லாஹ் என்ற சீஆக் கொள்கைப் பித்தன் ஆட் சிக்கு வந்ததும் தந்தையை விட ஒருபடி மேலே சென்று மஸ்ஜித்களிலும் கடைத் தெருக்களிலும் ஸஹாபாக்களை மட்டுமின்றி நபியவர்களையும் சபிக்குமாறும் ஏசித் தூற்றுமாறும் கட்டளையிட்டான். நபியவர்கள் ஆயி ஸா(றழி)யை மணமுடித்த காரணத்தினால் அவர்களும் சபிக்கப்பட்டவ ராகி விட்டார்கள் என்பது இவனது வாதமாகும்.
ஏனைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அப்போது இவர்களை எதிர்க்க சக்திபெற்றிருந்தால் அத்தனைபேரும் ஒன்று சேர்ந்து எகிப்தை முற்று கையிட்டு இந்த பாத்தினிய்யா சீஆக்களை அழித்தொழித்திருப்பார்கள். இவர்கள் அல்லாஹ்வின் விரோதிகள் இஸ்லாத்தின் எதிரிகள். இவர்கள் நயவஞ்சகர்களாயிருந்து பின்னர் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததும் மறை த்து வைத்திருந்த நயவஞ்சகத்தனத்தையும் பகைமையையும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெளிப்படுத்தி முஸ்லிம் உம்மத்தை துவம்சம் செய் தவர்கள். காபிர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அன் று ஏற்பட்ட பாதிப்பை விட இவர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புதான் மிகக் கடுமையானது என குறிப்பிடுகிறார்கள்.
ص 200- 202; روضتين في أخبار الدولتين لأبي شامة
.
இமாம் இப்னு ஸாமா அவர்கள் ஹிஜ்ரி 599-665 காலப்பகுதியில் வாழ் ந்தவர்கள். பாத்திமிய்யா ஆட்சிக்காலப்பகுதிக்கு மிக நெருக்கமான கால த்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் தனது காலத்திலும் அதற்கு முன்னரும் பாத்திமிய்யாக்கள் எனும் பெயரில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த சீஆக் களின் அட்டூளியங்களை கண்ணால் கண்டு, கேட்டு தனது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
எனவே நபியவர்களைப் புகழ்தல் எனும் போர்வையில் மௌலீது – மீலாது விழாவெடுக்கும் பழக்கம் நபியவர்கள் காலத்திலோ ஸஹாபாக் கள் தாபியீன்கள் அதற்கடுத்த தலைமுறையினர் காலத்திலோ அறி முகமாகியிருக்கவில்லை. மாறாக அது உருவானதே நபியவர்கள் சிறப் பித்துக் கூறிய காலத்துக்குப் பின்னரே , அதை விடப் பெரியகொடுமை அதை உருவாக்கியவர்கள் யூத - மஜூஸிப் பரம்பரையில் உதித்த இஸ் லாம் என்ற பெயரிலேயே இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைத்த- பாத் திமிய்யாக்கள் எனத் தம்மை அறிமுப்படுத்திய சீஆக்களாவார்கள். இவ ர்கள் யூதர்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அவர்களின் வழி காட்ட லின்படியே ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்பதற்கு யூத கிருஸ்தவர் களோடு அக்காலகட்டத்தில் இவர்கள் எவ்வளவு விசுவாசத்தோடு நன்றியோடு நடந்து கொண்டார்கள் என்பதே தக்க சான்றாக இருக் கின்றது.
எனவே யூத-கிருஸ்த்தவர்களோடும் நெருப்பு வணங்கிகளோடும் கை கோர்த்து அவர்களின் மகுடிக்கு ஆடும் பாம்பாக செயற்பட்டு, இஸ்லா த்தின் பெயரிலேயே இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்த சீஆக்களையா நாம் பின்பற்றுவது? அவர்களா எமக்கு எமது மார்க்கத் தைச் சொல்லி த்தருவது? எமது உயிலிலும் மேலான நபியவர்களுக்கு பிறந்த தினம் கொண்டாடும் இதே சீஆக்கள்- நமது நபியவர்களை சாப மிடுட்டு அவர்கள் சுவனம் சென்றாலும் அவர்களின் அந்தரங்க உறு ப்பு ஆயிஸா (றழி) யை மணமுடித்ததால் நரகமே செல்லுமென நாக் கூசாது சொல்லும் இவர்களா நபியவர்களை நேசிப்பவர்கள்? இஸ்லா த்தின் காவலர்களான ஓட்டுமொத்த ஸஹாபாக்களையும் பார்த்து வழி கெட்ட முனாபிக்கள், துரோகிகள் என்று தூற்றும் இவர்களா இஸ் லாத்தை நேசிப்பவர்கள்? , இல்லை இவர்கள் யூதர்களின் கைக்கூலி கள். யூதர்கள் இவர்களைப் பிரசவித்த தாய். கிருஸ்த்தவர்கள் இவர்களை வளர்த்துவிட்ட தந்தை, நெருப்பு வணங்கிகள் இவர்களின் உடன்பிற ப்புக்கள் . இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடை யாது. முஸ்லிம் சமூகத்தைப் பிரித்துக் கூறுபோடுவதில் நேரடியாகத் தலையிட்டு வெற்றி காண முடியாது என்று ஆனபோது முஸ்லிம்களை வைத்தே அவர்களைப் பிரித்துக் கூறு போடும் யூததிட்டத்தை செய ற்படுத்துமுகமாக சூட்சமமாக யூதர்களால் உருவாக்கப்பட்டவர்களே சீஆக்கள் என்பதை தெட்டத்தெளிவாக நாம் விளங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அன்பின் சகோதர முஸ்லிம்களே! எம் அனைவரின் மிகப் பெரிய இலட் சியம் நாம் மறுமையில் வெற்றிபெற்று சுவனம் செல்லவேண்டும். இதற்கு வழிகாட்டவே அல்லாஹ் எமக்கு நபியை அனுப்பினான். அந்த நபி காட் டிய வழியில் நடந்தால் சுவனம் கிடைக்கும் என்பதை நீங்கள் நம்புகின் றீர்களா இல்லையா? நம்பாதவர் முஸ்லிமாக இருக்க முடியாது . அவ்வா று நம்புபவர் நபியவர்களின் வழிகாட்டலிலோ ஸஹாபாக்களின் வாழ் விலோ இப்படியொரு மீலாத்- மௌலீது பிறந்ததின விழாவைக் கொண் டாடியிருக்கின்றார்களா? வழிகாட்டியிருக்கின்றார்களா? என்ற கேள்வி க்கு விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். ஆம் என்றால் அதை ஆதா ரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதன்பின் நாம் எல்லோருமாக கோலா கலமாக அதைக் கொண்டாடலாம்.
மீலாத் விழாவை சரிகாணும் ஒருசில அறிஞர்கள் கூட நபியவர்களோ ஸஹாபாக்களோ இதனைச் செய்யவில்லை என்ற கருத்தில் உடன் பட்டுள்ளனர். எனவே இது நபிவழியில்லை என்பதே முடிவாகும் . நபிய வர்கள் காட்டித்தந்த எத்தனையே சுன்னத் வழிமுறைகள் எடுத்து நடப்பாரின்றி கிடக்கும் நிலையில் நாமாக புதிய புதிய அனுஸ்டான ங்களை உருவாக்குவதன் அவசியம்தான் என்ன?
எனவே நாம் சுவனம் செல்ல நபியவர்களின் வழிகாட்டல் போதாதா? அப்படியாயின் அவர்களின் வழிகாட்டல்களை மட்டும் முடிந்தளவுக்கு எடுத்து நடப்பதில் எமக்கு என்ன பிரச்சினை? எதற்காக நாம் அவர்கள் சொல்லாத-செய்யாதவற்றில் ஈடுபட்டு எம்மைப் பிரச்சினைக்குள் சிக்க வைக்க வேண்டும்? நாளை அல்லாஹ் எம்மிடத்தில் விசாரணை செய் யும்போது நாம் நபிவழிப்படி செய்தவை மாத்திரமே நற்செயலாகக் கொ ள்ளப்படும். ஏனெனில் நபியவர்கள் 'எமது கட்டளையின்றி யார் எந்த அமலைச் செய்தாலும் அது மறுக்கப்பட வேண்டியதாகும். என்று சொல்லி விட்டார்கள். (நூல்:முஸ்லிம்) . எனவே மீலாத் விழாவெடுப்ப தால் நன்மை கிட்டும் அதன் மூலம் நாம் சுவனம் செல்லலாம் என்று கரு துபவர் மறுமையில் நஸ்டமடைவதும் கைசேதப்படுவதும் உறுதி. இன்று திருந்த நினைத்தால் அல்லாஹ்வின் மன்னிப்பின் வாசலும் நபி வழி காட்டலும் தாராளமாக உள்ளது. பிடிவாதமாக இருப்பவர் மறுமையில் தனது நிலை அறிந்தவுடன் திருந்த நினைப்பார். சந்தர்ப்பம் கேட் டுத் துடி ப்பார். ஆனால் எதுவும் நடக்காது. காலம் கடந்து விட்டது. இவ ர்களைப் பற்றித்தான் அல்லாஹூத்தஆலா அல்குர்ஆனில்....
'நபியே! அமல்கள் செய்தும்; மிக நஸ்டமடைந்தோர் யாரென நான் அறி வித்துத் தரட்டுமா? அவர்கள்தான் உலக வாழ்வில் தாம் செய்த முயற்சி (அமல்) கைகூடாமல் போனவர்கள். அவர்கள் தாம் நல்லவற்றையே செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அவர்களின் றப்பான அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனை சந்தி ப்பதையும் மறுத்தவர்கள். எனவே அவர்களின் அமல்கள் அழிந்து விட்ட ன. எனவே நாம் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பெறுமதியையும் அளிக்க மாட்டோம். (ஸூரத்துல் கஃப் 104)
அவர்கள் செய்த அமல்களை நாம் எடுத்துப் பார்த்தோம். பின்னர் அவற்றை நாம் பரத்தி வீசியெறியப்பட்ட புழுதியாக ஆக்கிவிட்டோம். ஸூரா புர்கான் : 23 )
அன்றைய தினம் அநியாயக்காரன் தனது இரு கைகளையும் கடித்துக் கொண்டே என் வழியையும் நபியுடன் நான் ஆக்காமல் போய்விட்டே னே! இன்ன நபரை நான் நண்பனாக ஆக்காமல் இருந்திருக்க வேண் டுமே! என்னிடம் நேர்வழி வந்தும் கூட அதைவிட்டும் என்னை வழி கெடு த்து விட்டானே! என்று கைசேதப்படுவான். சைத்தான் மனிதர்களுக்கு மிகப் பெரியசதிகாரனாக இருக்கின்றான். ( புர்க்கான்: 27-29)
மீலாத் விழா கொண்டாடுவது இஸ்லாத்துக்கு விரோதமான பாவச் செயலா?.
நபியவர்களின் மீது அன்பு வைத்திருக்கின்றோம் என்ற பெயரில் அவர்க ளின் பிறந்த தினத்தில்; விழாவெடுத்து கொண்டாடுவதும் அவர்களின் பெயரில் மௌலூது ஓதுவதும் இன்று முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரா ரினால் மார்க்கக் கடமை – நன்மையையும் பரக்கத்தையும் பெற்றுத்தரும் இபாதத் , புனித காரியம் என்ற நம்பிக்கையில் ஆண்டாண்டு காலமாக நடாத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் உண்மையிலிவை மக்களை இஸ்லாமிய போதனைகள் வழிகாட் டல்களை விட்டும் தூரப்படுத்துவதற்காக சீஆக்களால் புகுத்தப்பட்ட கைங்கரியம் என்பதை வரலாற்று ரீதியாக ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளமை பெரும்பாலானோருக்குத் தெரியாது. அவ்வாறே இந்த மீலாத்விழாக் கொண்டாட்டமும், மௌலூது வைபவங்களும் இஸ் லாத்துக்கு எதிரான பாவகாரியங்களில் ஒன்றாகும், இதைச் செய்வதால் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக வேண்டி ஏற்ப டும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அதுவொரு பாவச்செயல் தா ன் என்பது கீழே பல்வேறு கோணங்களில் எடுத்து விளக்கப்படுகின்றது. அதனைப் படித்த பின்பு நீங்கள் ஒரு நடுநிலைவாதியாக அல்லா ஹ்வை யும் றஸூலையும் விசுவாசங் கொண்ட, அவ்விருவரையும் நேசிப்பவராக இருந்தால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
அதற்கான காரணத்தை சுருங்கக் கூறின் அவ்வாறு விழாக் கொண்டாடு வது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம்பெறாத, ஸஹாபாக்கள் தாபியீன் கள், தபஉ தாபியீன்களில் யாரும் செய்திராத , இஜ்மா, சரியான கியாஸ் ஆதாரங்கள் கூட இல்லாத, நான்கு மத்ஹபுடைய இஸ்லாமிய அறிஞர்க ளில் யாருமே கூறிடாத, பகுத்தறிவுக்கோ, இயல்பான மனித சிந்தனை க்கோ பொருந்திவராத ஒரு அனுட்டானமாகும்.
அது எப்படியென்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1-நபியவர்கள் தனக்குப் பிறந்தநாள் கொண்டாடும் பாரம்பரியத்தை தன் வாழ்வில் ஒருபோதும் செய்ததில்லை. அது ஒரு இபாதத்தாக இருந்திருப் பின் நிச்சயம் நபியவர்கள் செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் சொல்லியாவது இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு விடயத்தை இபாதத் -வணக்கம் என்று நிர்ணயம் செய்யும் அதிகாரம் அல்லாஹ்வையும் நபி யையும் தவிர வேறு எவருக்குமில்லை. எனெனில் அல்லாஹ் 'றஸூல் உமக்கு கொண்டு வந்ததை எடுத்துக் கொள்ளுங்கள் தடுத்தவற்றை விட் டுவிடுங்கள்' என்றும் நபியவர்கள் ' யாராவது எமதுகட்டளை இன்றி ஒரு அமலை செய்தால் அது மறுக்கப்பட வேண்டியதாகும் என்று கூறியுள் ளார்கள். ( புகாரி:2571 முஸ்லிம்: 3339)
சரி குறைந்த பட்சம் மீலாத் விழாவெடுப்பது ஒரு இபாதத் இல்லாவிடி னும் அதுவொரு நல்ல காரியம் என்றாவது சொல்ல முடியுமா? என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் நபியவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற ஸஹாபாக்கள் சமூகம்தான் நல்லவற்றைத் தேடித் தேடிச் செய்வதில் எம் மை விடவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள். அதனால் தான் நபியவர்கள் மக்களில் சிறந்த தலைமுறையினர் எனது காலத்த வர்கள் (முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள். எனவே நபியவர்கள் மீது நம் மை விட பன்மடங்கு அன்பு வைத்திருந்த - தம் உயிர்களையே நபிக்காக தியாகத் செய்யத் துணிந்த அந்த உத்தம சஹாபக்கள் பிறந்தநாள் கொண்டாடுவது மார்க்கத்தில் சுன்னத்தாக என்ன? அனுமதிக்கப்பட்டி ருந்தால் கூட நிச்சயம் அதை செய்தேயிருப்பார்கள். எனவே மவ்லூது மீலாது விழாக்கள் இபாதத்தாகவோ ஏன்? ஒரு நல்ல காரியமாகவோ கூட இருக்க முடியாது என்பதை இதிலிருந்து சந்தேகத்துக்கிடமின்றி அறிய முடிகின்றது. எனவே நபியவர்களோ ஸஹாபாக்களே செய்திராத சொல்லித்தராத ஒரு காரியத்தை நாம் இபாதத் என்ற பெயரில் எப்படிச் செய்ய முடியும்? அதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது?.
2 – மீலாது விழா மற்றும் ஏனைய மௌலூது விழாக்களை நடத்துபவர்
மார்க்கத்தில் கையாடல் செய்தவராக ஆகிவிடுகின்றார்.
'மக்களே மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களைச் செய்வ தை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். ஏனெனில் அவ்வாறு உருவாக் கப்பட்டவைகள் அனைத்துமே பித்அத்- மௌட்டீகமாகும். பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்துக்கே இட்டுச்செல்லும்'(அஹ்மத்-இப்னுமாஜஃ) என்ற நபியவர்களின் பொன் மொழியை உதாசீனம் செய்தவராக மாறுகின்றார். அந்த வகையில் நபி யவர்கள் காட்டித்தராத இந்தச் செயல் ஒருவரை படிப்படியாக நரகிற்கு இழுத்துச் செல்லும் தீய செயலே என்பது நிரூபணமாகின்றது.
3 – நபியவர்கள் நம் மத்தியில் மவ்லூது கூடுமா? கூடாதா? என்ற சர்ச்சை ஏற்பட்டால் தீர்வு என்னவென்பதை அன்றே சொல்லி விட்டுச் சென்றது தான் அதிசயம் . நீங்கள் ஒரு விடயத்தில் கருத்துவேற்றுமைப்பட்டால் அல்லாஹ்-றஸூலின் பக்கம் அவ்விடயத்தைக் கொண்டுவாருங்கள் என் பதே அக்கட்டளை . நபியவர்கள் என்ன கூறியுள்ளார்கள். ஆம்! நபிய வர்கள் கூறியுள்ளார்கள்.. ' எமது மார்க்கத்தில் யார் அதில் இல்லாத ஒன்றை உருவாக்குவாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும் . (புகாரி) . எங்களது கட்டளை இல்லாது யார் எந்த அமலை உருவாக்கி னாலும் அது மறுக்கப்பட வேண்டியதாகும். (முஸ்லிம்) என்று கட்ட ளையிட்டு இருக்கின்றார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி மீலாத் விழா-மௌலூது விழாக்கள் கொண்டாடுமாறு நபியவர்களின் கட்டளை யோ அனுமதியோ இருக்கின்றதா? என்றால் அதை ஆதரிப்போர் கூட ஏற்றுக்கொண்ட பதில் 'இல்லை' என்பதே! அப்படியெனில் எப்படி இதை இபாதத் என்றோ நல்லகாரியம் என்றோ சொல்ல முடியும்?.
4 –அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.. இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களது மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட் டேன் , மேலும் எனது அருட்கொடைகளையும் நிறைவுசெய்து விட்டேன். சமயங்களில் இஸ்லாத்தை நான் பொருந்திக் கொண்டேன். ( 07: 45)
எனவே மீலாது-மௌலூதுகளும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்று வாதிடுபவர் மேற்படி வசனத்தைப் பொய்யாக்கியவராக கருதப்படுகி ன்றார். காரணம் அல்லாஹ்வே மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்க இவரோ இல்லையென மறுத்தவராகக் கருதப்படு கின்றார். ஏனென்றால் இவர் மௌலூதும் மீலாதும் மார்க்கம் என்றல் லவா சொல்கின்றார். அவ்வாறில்லையெனில் அவர் ஒன்று இந்த வசன த்தை ஏற்பதாயின் மௌலூத்தை மறுக்க வேண்டும். மௌலூத்தும் மார் க்கம்தான் என்றால் அல்லாஹ் மார்க்கத்தை பூரணப்படுத்தியதாகச் சொன்னது உண்மையல்ல? என்று சொல்வதாகத்தான் கருத வேண்டும்.
அவ்வாறே மௌலூதும் மீலாதும் மார்க்கம்தான் என்று வாதிடுபவர் அல் லாஹ்வும் றஸூலும் மார்க்கத்தை சரிவரப் பூரணப்படுத்தாமலேயே-மௌலூது மீலாது பற்றி சொல்லாமலேயே மார்க்கம் பூரணமாகி விட் டதாக சொல்லிவிட்டதாகவும் , தானே இவ்வாறு கூறாது விடுபட்ட மார் க்க விடயங்களைக் கண்டுபிடித்துத் தந்ததாகவும் சொல்வதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே அவர் இவ்வசனத்தின் கருத்தை ஏற்றுக் கொள் வதாயின்-அல்லாஹ்வும் றஸூலும் மார்க்கத்தில் எதையும் மறைக்கவில் லை, மறக்கவில்லை என்று நம்புபவராயின் மௌலூதும் மீலாதும் மார் க்கமில்லை என்பதை ஏற்றுக் கொள்வதுடன் அவற்றுக்கும் இஸ்லாத்தி ற்கும் சம்பந்தமில்லை. அவை பாவகாரியத்திலேயே சாரும் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.
5– மீலாத்தையும் மௌலூத்தையும் மார்க்கம் என நம்புபவரை நபியவர் கள் தனது அமானத்தான அல்லாஹ்விடமிருந்து பெற்ற மார்க்கத் தூதுப் பணியை சரிவர நிறைவேற்றவில்லையென்று சந்தேகிப்பவராக கருத வேண்டியுள்ளது. ஏனெனில் அல்லாஹ் மௌலூது பற்றிச் சொன்ன விட யத்தை நபி சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்கள் என்று இவர் சொல் லாமல் சொல்கின்றார். இதைத்தான் இமாம் மாலிக்(றஹ்) அவர்கள் குறிப்பிடும்போது.. யார் மார்க்கத்தின் பெயரால் ஒரு பித்அத்தை உருவா க்கிவிட்டு அது நற்காரியமே என்று கருதுகின்றானோ அவர் நபியவர்கள் தனது தூதுச் செய்தியை எத்தி வைப்பதில் மோசடி செய்து விட்டதாக நம்புவதாகவே கருத வேண்டியுள்ளது . ஏனெனில் மார்க்கத்தைப் பூர்த்தி யாக்கி விட்டதாக அல்லாஹ் கூறுகின்றான். பூர்த்தியாக்கப்பட்ட மார்க் கத்தில் இப்படியொரு விழாவெடுப்பது பற்றியோ மௌலூது பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. மௌலூத்-மீலாத் மார்க்கமெனில் அது பற்றிய செய்திகள் எங்கே போயின?
6– மௌலூத்தையும் மீலாத் விழாவெடுப்பபதையும் மார்க்க அனுட் டானமென்று நம்புபவர் மார்க்கத்தில் ஒரு கட்டாயக் கடமையை நிறை வேற்றும் வழிமுறையைத் திருபுபடுத்தியதுடன் முன்னோர்களான ஸஹா பாக்களையும் குறைகூறியவராவார். எப்படியெனில் நபியவர்களை நேசிப் பது அனைவரினதும் கடமை. அவர்களை நேசிப்பதானது அவர்களை யும் அவர்கள் கொண்டுவந்த அல்குர்ஆனையும் பின்பற்றி நடப்பதினா லேயே நிறைவேறுவதாக அல்குர்ஆன் கூறுகின்றது. அப்படியிருக்க மௌலூது ஓதி மீலாது விழாக் கொண்டாடுவதனாலேயே நபியவர்கள் மீதான நேசம் நிரூபணமாகின்றது என்ற தப்பான கருத்தை சமூகத்தில் இவர்கள் விதைத்து நபியவர்களை நேசிப்பவர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டியதில்லை, அல்லது பின்பற்றினால் மட்டும் போதாது மாறாக அவர்கள் பெயரில் மௌலூத்தும் ஓதி மீலாது விழாவும் எடுப்பதுதான் அவர்களை உண்மையாக நேசித்தமைக்கான அடையாளம் என்று இவர் கள் நம்புவதால் இஸ்லாத்தில் நபியை ஒருவர் நேசிப்பதற்கான முறை மையையே மாற்றி திரிபுபடுத்தி விட்டதாக கருத வேண்டியுள்ளது. இவர்க ளின் கருத்தின்படி பார்த்தால் ஸஹாபாக்கள் தாபியீன்கள் எல்லாம் நபிய வர்களை நேசிக்காது அவர்களை வெறுத்தவர்கள் என்று கூறவேண்டி யேற்படும். ஏனெனில் அவர்களெல்லாம் மௌலூது ஓதவில்லையே! மீலாது விழாக் கொண்டாடவில்லையே!
7– மீலாத் விழாக் கொண்டாடுவது கிருஸ்த்தவர்களுக்கு ஒப்பாகி அவர் களது அனுட்டானங்களைப் பின்பற்றி நடப்பதாகவே அமையும் . ஏனெ னில் அவர்கள்தான் இயேசுவுக்கு(ஈஸாஅலை) பிறந்தநாள்- கிறிஸ்மெஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கத்தை முதன்முதலில் அறிமுகம் செய்த னர். அதைப் பார்த்து நகல் செய்தே சீஆக்களான பாத்திமிய்யா ஆட்சி யாளர்கள் நபியவர்கள் பெயரிலும் மீலாத்விழா எடுக்கும் வழக்கத்தை எகி ப்தில் முதன்முதலாக உருவாக்கினர். ( அல்பிதஉல் ஹவ்லிய்யா 456)
8- பெருநாள்கள் எத்தனை?. இஸ்லாத்தில் நபியவர்கள் இரண்டு பெரு நாட்களை அறிமுகப்படுத்தியிருக்க மூன்றாவது பெருநாளாக மீலாது வி ழாவைக் கொண்டாடுவதானது அல்லாஹ் -றஸூலின் கட்டளையை உதாசீனம் செய்து விட்டு அதிகப்பிரசங்கித்தனமாகவும் தன்னிச்சையாக வும் மார்க்கத்தில் சட்டம் அமைக்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்து இஸ்லாத்தில் கையாடல் செய்த பாரிய குற்றத்துக்குரிய செயலாகிள்றது.
9 – நபியவர்களைப் புகழ்ந்து மௌலூது ஓதுவதும் மீலாது விழாக் கொண்டாடுவதும் அவர்களை அளவு கடந்து புகழும் ஒரு காரியமாகக் கருதப்பட வேண்டியதாகும் . நபியவர்கள் தன்னை அவ்வாறு அளவு கடந்து புகழக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றார்கள்.
'நஸாராக்கள் ஈஸா நபியை எல்லைமீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் புகழாதீர்கள்.( புகாரி 3277)
'அளவுகடந்து செயற்படுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின் றேன். உங்களுக்கு முன்வாழ்ந்த(யூத-கிருஸ்த்த)வர்களை அழித்தொழித் ததே இவ்வாறு அளவு கடந்து சென்றமைதான்' (இப்னுமாஜா : 3022 )
கஸீததுல் புர்தாவில் நபியவர்களைப் புகழும் முறை இதோ..
இது உண்மையான புகழ்ச்சியா ? அல்லது கிருஸ்தவர்கள் அளவு கடந்து ஈஸா நபி யை அல்லாஹ்வின் அந்தஸ்த்தில் வைத்தது போலான சிர்க் மிக்க செயலா? என நீங்களே உங்கள் மனச்சாட்சியையும் மார்க்க அறிவையும் சாட்சியாக்கிச் சொல்லுங்கள்...
ياأكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث العمم
فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم
படைப்புகளில் சிறந்த நபியே! என்னைஅழித்துவிடும் கொடிய சோதனை கள் எனக்கு ஏற்படுகையில் உங்களையன்றி வேறு யார் எனக்கு அடைக் கலம் தரமுடியும்.? இவ்வுலகமும் அதன் சகக் கிளத்தியான மறுவுலக மும் உங்களின் அருட்கொடையால் உருவானவைகளே! இவ்வளவுக்கு ஏன்! லவ்ஹூல் மஹ்பூள் ஏட்டில் உள்ளவையும் கலம்-எழுதுகோல் கொண்டு அல்லாஹ் அமைத்த கழாக்கத்ர்-விதியும் கூட உமது அறிவின் ஒரு பகு தியேயாகும். ( கஸீததுல் புர்தா – பூசரிய் )
இந்தப்பாடல் வரிகள் எமது மௌலீது அபிமானிகளின் வீடுகளிலும் சில பள்ளிவாயல்களிலும் பக்திப் பரவசத்துடன் ஓதப்படுகின்றன. இவ்வரிக ளின் தமிழ் அர்த்த்தை மாத்திரம் அவர்களில் ஒருவரிடம் படிக்கச் சொன் னால் இது சிர்க்தான் என்று அடித்துச் சொல்வார். ஏனெனில் இறைவ னின் இலட்சணங்கள்-பண்புகள், அவன் ஒருவன், ஏகன் அவனுக்கு இணையாக-நிகராக எவருமில்லை என்ற அல்குர்ஆன் வசனத்தை அறி ந்த எவரும் நபியைப் பார்த்து இப்படிப் புகழத் துணிய மாட்டார். ஆனால் அறபியில் ராகத்துடன் பாடப்படும் போது பக்திப் பரவசத்துடன் ஊதுபத்தி வாடையை உள்ளிழுத்து தலைசாய்த்து செவிமடுக்கின்றார்.
நபியவர்கள் அளவுக்கு மீறி என்னை புகழாதீர்கள் என்று தடுத்து மக் களை எச்சரித்துவிட்டு 'உங்களுக்கு முன்வாழ்தோர் அழிந்து போகக் காரணம் இவ்வாறு நபிமார்களை அளவுக்கு மீறி புகழ்ந்ததே' என்கின் றார்கள். ஆம் உண்மையில் கிருஸ்த்தவர்கள் இயேசு ஒரு தீர்க்கதரிசி தான்- கடவுளல்ல என்று நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் மீது வைத்தி ருந்த அளவுக்கு மீறிய அன்பினாலும்- யூதர்கள் அவர்களை விபச்சாரப் புத்திரர் என இகழ்ந்ததால் அவர்களுக்கு பதிலடி கொடுக்குமுகமாகவும் அவர்களை கொஞ்சங் கொஞ்சமாக கடவுளின் பண்புகளைக் கொண்டு வர்ணிக்கச் செய்து இறுதியில் அவர்களை மட்டுமின்றி பிதா, சுதன் பரி சுத்த ஆவி மேரி ,சிலுவை என்று அவரோடு சம்பந்தப்பட்ட அனைத்தை யும் கடவுள் என்று கூறி கைகூப்பி வணங்கும் அவல நிலையை அவர் களுக்கு ஏற்படுத்தி விட்டதா இல்லையா? இதைத்தான் நபியவர்கள் அன்று எச்சரித்தார்கள்.
இன்று நபிகளார் மட்டுமல்ல! எத்தனையோ வலிமார்கள் என்ற பெயரில் முற்காலத்தில் வாழ்ந்து மரணித்ததாகக் கூறப்படும் மனிதர்களையும் அல்லாஹ்வுக்கிருக்கும் ஆற்றல் சக்தி அவர்களுக்கும் இருப்பதாக நம் பும் - உலகத்தை அவர்களே நிர்வகிப்பதாக நம்பும் பல மனிதர்கள் நமது முஸ்லிம் சமூகத்தில் இல்லையா? இவர்களின் நம்பிக்கைக்கும் கிருஸ் த்தவர்களின் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? என்ன! நபியவர்க ளுக்கும் பெரியார்களுக்கும் சிலைவடிவம் மட்டும் கொடுக்கப்படவில்லை. அவ்வளவுதான். அதுவும் இவர்களிடம் காலப்போக்கில் வந்தாலும் ஆச் சரியப்படுவதற்கில்லை. அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
10 –நபியவர்கள் றபீஉல் அவ்வல் 12 ல் தான் பிறந்தார்களா? அல்லது அதில் மரணித்தார்களா?
நபியவர்களின் பிறப்பையிட்டு வரும் மகிழ்ச்சிப் பெருக்கை வெளிப்படுத் தவே மீலாத் விழாக் கொண்டாடுகின்றோம் என்று வாதிடுகின்றார்களே!. நபியிவர்கள் மேற்படி றபீஉல் அவ்வல் 12 ல்தான் பிறந்தார்கள் என்பத னை நிரூபிக்கவாவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று தேடிப்பார் த்தால் அதுவும் இல்லை. இது ஒருபக்கமிருக்க நபியவர்கள் அதே தினத் தில் தான் மரணித்திருக்கின்றார்கள் என்ற உண்மையை ஆதாரப்பூர்வ மாக வரலாற்று நூல்களிலிருந்து அறிய முடிகின்றது.
இமாம் இப்னு ஹஜர்(றஹ்) தனது நூலான பத்ஹூல் பாரியிலே..
'நபித்தோழர்கள் இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பை எதை மையமாக வைத் து ஆரம்பிப்பது என்று ஆலோசித்தார்கள். நபியவர்களின் பிறப்பு, இறப்பு, நபிப்பட்டம் ஹிஜ்ரத் இந்த நான்கில் எதைத் தெரிவு செய்யலாம் என யோசித்தவர்கள் நபியவர்களின் பிறந்த தினமும் நபிப்பட்டம் கிடைக்க ப்பட்ட தினமும் எப்போதென்பதில் பல்வேறு கருத்துக்களும் உறுதியற்ற நிலையும் இருந்ததால் அவ்விரண்டையும் தெரிவுசெய்வது பொருத்தமற் றதென்றும், நபியவர்கள் மரணித்த தினம்(12 றபீஉல் அவ்வல்) ஊர்ஜிதப் படுத்தப்பட்டிருந்த போதிலும் அதுவொரு கவலைக்குரிய நிகழ்வென்ப தால் அதையும் பொருத்தமற்றதென்றும் கருதினர் . முடிவாக ஹிஜ்ரத் சென்ற நிகழ்வை மையப்படுத்தியே வருடக்கணிப்பை ஆரம்பிப்பதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. – பத்ஹூல்பாரி ஹதீஸ் விளக்கவுரை: 3641
இப்னுல் ஹாஜ் எனும் அறிஞர் குறிப்பிடுகின்றார்கள்...
மிகப் பெரிய ஆச்சிரியம் யாதெனில் நபியவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு பாட்டுக்கச்சேரிகளை யும் இசை நிகழ்ச்சிகளையும் கேளிக்கைகளையும் அரங்கேற்றும் இவர் கள் அதே தினத்தில்தான் நபியவர்கள் மரணித்திருக்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை உண்மையாகவே தெரியாமல்த்தான் விட்டுவிட் டார்களா? ஏனெனில் அந்தத் தினத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவத ல்லவா பொருத்தமானது? நூல்: மத்கல் 15-2
ஒரு வாதத்துக்காக நபியவர்கள் பிறந்ததினம் 12ல் தான் என்பது ஊர்ஜி தப்படுத்தப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் கூட மகிழ்ச்சி – துக் கம் இவ்விரு நிகழ்வுகளில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட வேண் டும்.?
ஒரு வீட்டில் திருமண நிகழ்வு நடைபெறவிருந்த தினத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மரணம் சம்பவித்து விட்டது. இப்போது மரண நிகழ்வை யொட்டி திருமண நிகழ்வு பிற்போடப்படுமா? அல்லது மரண வீட்டில் குதூகலமாக திருமண நிகழ்வு நடந்தேறுமா? என்று யாரைக் கேட் டாலும் மனிதாபிமானமுள்ள, மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் அவ் வீட்டில் மங்கள நிகழ்வு நடப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான். காரணம் அது மனச்சாட்சியே ஏற்றுக் கொள்ளாத ஒரு விடயமாகும். இப்படியிருக்க இவர்களின் மனச்சாட்சி மட்டும் ஏன் இதை ஏற்றுக் கொள்ள மறுக் கின்றது?. இவர்கள் உண்மையிலேயே நபியவர்களை நேசிப்பவர்களாக இருந்தால் நபியவர்கள் மரணித்த கவலையால் துக்கம் அனுஸ்டிப்பத ல்லவா பொருத்தமானது?.
இன்னொன்றையும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...
அதாவது பாத்திமிய்யா ஆட்சிக்காலத்தில் சீஆக்களால் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மீலாத்-மௌலூது கலாச்சாரம் ஒரு கட்டத்தில் வழக் கொழிந்து போனபோது ஹிஜ்ரி 1213 ல் பிரான்ஸ் நாட்டின் காலணித்துவ ஆட்சியாளர் ஒருவர் எகிப்திற்கு விஜயம் செய்தார். அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் ' முன்னர் நீங்கள் செய்து வந்த உங்கள் முஹம்மது நபி யின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏன் நீங்கள் தற்போது நிறுத்தி விட்டீர்கள்? என வினவ போதிய நிதிவசதி இல்லாமையினால் கொஞ் சம் கொஞ்சமாக அந்தக் கொண்டாட்ட நிகழ்வுகள் வழக்கொழிந்து வரு கின்றன என அந்த மார்க்க அறிஞர்கள் பதிலளித்தனர். உடனே அந்த ஆட்சியாளர் இல்லை அதை விடக்கூடாது உடனே ஆரம்பியுங்கள் . அத ற்குரிய நிதி வசதிகளை நான் ஏற்பாடு செய்கின்றேன் என்றுகூறி பெருந் தொகைப்பணத்தை அவ்விடத்திலேயே கொடுத்துச் சென்றமையும் வர லாற்று உண்மையாகும் . அது மட்டுமின்றி அந்த விழா ஏற்பாடு செய்ய ப்பட்ட தினத்தில் அவ்வாட்சியாளர் தமது படைபரிவாரங்களுடன் வரு கை தந்திருந்தார். அங்கு பல்வேறு விளையாட்டுக்களும், கேளிக்கை களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன . இசைக்கருவிகள் இசைக்கப்பட பாடல்களும் நடனங்களும் நடந்தேறின. இரவு வேளையில் பெரும் தீ மூட்டப்பட்டு தீப்பந்த விளையாட்டுக்கள் வாண வேடிக்கைகள் எல்லாம் நடந்தன. பார்க்க: அஜாஇபுல் ஆதார் 2:201-249
ஒரு நாட்டை(எகிப்தை) சூறையாடிய ஒரு ஆட்சியாளன் இத்தனை சலு கைகளையும் அம்மக்களுக்கு தானே முன்வந்து தனது செலவிலேயே ஏன் அரங்கேற்ற வேண்டும்.? சிந்தித்துப் பார்த்தீர்களா? ஆம் அவர் களது உள்நோக்கம் முஸ்லிம்கள் இஸ்லாமிய சரீஅத் சட்டங்கள் மீது வைத்திருக்கும் பற்றை இல்லாது செய்து மார்க்கத்தை விட்டும் அவர்க ளைத் தூரப்படுத்தி ஆண்பெண் கலப்புக் கலாச்சாரம், பாலியல் கலாச் சாரம் , மார்க்கத்தடைகளை துச்சமாக மதித்து மீறும் கலாச்சாரம் ஆகிய வற்றை முஸ்லிம்களிடத்தில் பரவச் செய்வதன் மூலமே இவர்களை மார் க்கம், சமூகம் பற்றியெல்லாம் சிந்திக்க விடாது, கல்வியில் முன்னேற விடாது தடுக்கலாம். இவர்கள் மார்க்கம் பற்றி சிந்திக்காமல் இருக்கும் வரை நாம் செய்யும் அநீதிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அது வரை நாம் எவ்வித பிரச்சினையுமின்றி நம் காலணித்துவத்தை நிலை நாட்டலாம் என்பதே இவர்களின் உள்நோக்கமாக இருந்தது . எனவே படிப்பினை பெறுவோம். உண்மைக்கு அடிபணிவோம்.