அறிஞர்களுக்கு மத்தியில் மின்னும் தாரகை இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப் பெரும் அறிஞர். அவரது ஆய்வுகள் கருத்துக்கள் ஆழமானவை, அறிவுபூர்வமானவை, அவரது கருத்துக்கள் ஒவ்வொன்றும் அறிஞர் பெருமக்களால் மெச்சப்படுபவை. 

ஆனால் நாம் ஷாபி மத்கப் என்று கூறி பெருமைப்படும் இலங்கை நாட்டில் அவர்களைப் பற்றிய போதுமான அறிமுகமே கிடையாது என்று கூறுமளவுக்கு அவரது நூட்களோ கருத்துக்களோ கற்கப்படுவதுமில்லை படிக்கப்படுவதுமில்லை. 

அவரைப் பற்றிய இலக்கிய நயத்துடன் எழுதப்பட்ட நூலொன்றைப் படிக்க விரும்பவோர் கீழுள்ள நூலை தரவிறக்கிப் படித்துக்கொள்ளவும்.


ஆனால் அவரது கருத்துக்களை நமக்குத் தெரிந்த சாதாரண அரபு மற்றும் ஷரீஆ அறிவை வைத்து புரிந்துகொள்ளவும் முடியாது. 

மார்க்க அறிவில் இவ்வளவு பெரும் ஆற்றலைப் பெற அவர்கள் பெரும் தியாகங்களைச் செய்துள்ளார்கள். 

ஒரு முறை அவரிடம் ஒரு மனிதர் இஜ்மா மார்க்க ஆதாரம் என்பதற்கு அல்குர்ஆனில் ஆதாரமுண்டா? எனக் கேட்ட போது ஆய்வு செய்வதற்கு 3 நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டார்கள். 

3 நாட்களுக்குப் பிறகு கால்கள் வீங்க நோயுற்றவராக வெளியே வந்து ஸபீலுல் முஃமினீனுக்கு மாற்றம் செய்யக்கூடாது என்ற வசனமே அதற்கான ஆதாரம் என்றார்கள். இதற்காக இரவு பகலாக அல்குர்ஆனை பல முறைகள் படித்து ஆய்வு செய்ததன் விளைவே அவர்களின் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.

இந்த வசனத்தை இஜ்மாவுக்கு ஆதாரமாக ஏற்கலாமா இல்லையா என்பதில் வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் இதனை இங்கு குறிப்பிடக் காரணம் இவ்வாறான நீண்ட ஆய்வுகள் தேடல்கள் என்பவற்றினால்தான் அறிஞர்களுக்கு மத்தியில் மின்னும் தாரகையாக இமாம் ஷாபிஈ அவர்கள் திகழ்கின்றார்கள்.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
أحدث أقدم