அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகள் - நூல்


வெளியீடு இல: 5.0 (1/முஹர்ரம்/1445)

தலைப்பு: அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகள்

மூல நூல்: من أصول عقيدة أهل السنة والجماعة

ஆசிரியர்: அல்லாமா டாக்டர் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்

தமிழாக்கமும் வெளியீடும்: islamiyapuram.blogspot.com



Instructions

  1. Do not use this translated book for commercial purposes.
  2. Do not modify or recreate this Book by adding your cover pages, logos and banners with or without tweaking, distorting and editing something in this book.
  3. You do not need our permission to share this electronic pdf document across the various internet platforms such as Websites, Facebook, Telegram/Whatsapp etc for free of charge.
  4. We are only responsible for what we have published in this version of the translated book which is available on our official blog (islamiyapuram.blogspot.com) and we do not take responsibility for the translated version of this book under our name but different publishings which are available with or without as modified pdf or any other formats and we never allowed it to anyone.




அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகள்





ஆசிரியர்

அல்லாமா டாக்டர் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்



தமிழாக்கமும் வெளியீடும்: islamiyapuram.blogspot.com



உள்ளடக்கம்

(தலைப்பு - பக்கம்)


அறிமுகம் 


"பாதுகாக்கப்பட்ட கூட்டம்", “அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆஎன்பதால் நாடப்படுவது என்ன


பாதுகாக்கப்பட்ட கூட்டத்தின்பெயர்கள்
மற்றும் அவற்றின் பொருள் 


'அஹ்லுல் சுன்னா வல் ஜமாஆ'வின் அடிப்படை
நம்பிக்கைகள் 

முதல் அடிப்படைக் கோட்பாடு 


அல்லாஹ்வின் மீது நம்பிக்கை 


மலக்குகள் மீதான நம்பிக்கை 


வேத நூல்களின் மீதான நம்பிக்கை 


தூதர்கள் மீது நம்பிக்கை 


இறுதி நாளின் மீதான நம்பிக்கை 


விதியின் மீது நம்பிக்கை 




இரண்டாவது அடிப்படைக் கோட்பாடு 


மூன்றாவது அடிப்படைக் கோட்பாடு 


நான்காவது அடிப்படைக் கோட்பாடு 


ஐந்தாவது அடிப்படைக் கோட்பாடு 


ஆறாவது அடிப்படைக் கோட்பாடு 


ஏழாவது அடிப்படைக் கோட்பாடு 


எட்டாவது அடிப்படைக் கோட்பாடு 


ஒன்பதாவது அடிப்படைக் கோட்பாடு 


இறுதியுரை 


பின்குறிப்பு 





அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகள்


அறிமுகம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்.. 


இஸ்லாத்தை நோக்கி நம்மை வழிநடத்திய அனைத்துப் படைப்புகளின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


 وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌‌ۚ  

 அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிடில், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை அடைந்தவர்களாக ஆகி இருக்கவே மாட்டோம், (அல்குர்ஆன்: 7:43)


தூய்மையானவனான அவனிடம், மரணம் வரை எங்களை இஸ்லாத்தின் மீது உறுதியாக நிலைப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உயர்ந்தோனான அல்லாஹ் கூறியது போல்:


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ

 விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள்மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 3:102)


அவன் எங்களை நேர் வழியில் நடாத்திய பிறகு எங்கள் இதயங்களைத் திசைதிருப்பிட வேண்டாம் என்றும் (அவனிடம் கேட்கிறோம்).


 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

 (அறிவுடைய அவர்கள்) “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும், உன் புறத்திலிருந்து அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய் (என்றும்),

(அல்குர்ஆன்: 3:8)



அல்லாஹ்வின் ஈடேற்றமும் அருளும் எங்கள் தூதரும் எங்கள் முன்மாதிரியும் மற்றும் எங்கள் அன்புக்குரியவருமான முஹம்மதுவின் மீது உண்டாவதாக. அவர் அல்லாஹ்வின் தூதராவார், அல்லாஹ் அவரை முழு மனிதகுலத்திற்கும் அருளாக அனுப்பி வைத்தான்.


மேலும், அல்லாஹ்; அவனது பயபக்தியுடைய, சிறப்புமிக்க நபித்தோழர்களிலிருந்தான முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரிகளையும் மற்றும் அவர்களை நல்வழியில் பின்பற்றுபவர்களையும் இரவும் பகலும் மாறி மாறி வரும் வரை திருப்தியடைவானாக.



தொடர்ந்து:


இவை அஹ்லுல் ஸுன்னா வல் ஜமாஆவின் நம்பிக்கையை தெளிவுபடுத்தும் சில சுருக்கமான வார்த்தைகள். சமகாலத்தில் பிரிவுகளாலும் பல்வேறு கூட்டங்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இஸ்லாமிய சமுதாயம் இன்று வாழும் பிரிவினை மற்றும் வேறுபாடு காரணமாக இவற்றை எழுத வேண்டியது அவசியமாக இருந்தது.


அறியாத முஸ்லிம் யாரைப் பின்பற்றுவது, யாரை முன்மாதிரியாகக் கொள்வது என்று குழப்பமடையும் வரை அவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் (சொந்தமாக உருவாக்கிய) நம்பிக்கைக் கோட்பாடுகளை நோக்கி அழைத்துத் தனது (சொந்த) கூட்டங்களைப் புகழ்கிறார்கள்.


தான் வாசித்த, கேள்விப்பட்ட இஸ்லாத்தைத் தழுவ விரும்பும் நிராகரிப்பாளருக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்ன, அல்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் (ஸல்) சுன்னாவும் வழிகாட்டியிருக்கிற இஸ்லாம் என்றால் என்ன, உன்னத நபித் தோழர்களால் அவர்களின் வாழ்க்கையில் காண்பிக்கப்பட்ட மற்றும் போற்றுதலுக்குரிய தலைமுறைகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாது.


மாறாக, "இஸ்லாம் அதன் மக்களால் மறைக்கப்பட்டுள்ளது" என்று ஓரியண்டலிஸ்டுகளில் ஒருவர் கூறியது போல், பொருளின் யதார்த்தம் இல்லாத பெயராக இஸ்லாம் பிரதானமாக பார்க்கப்படுகிறது. இதன் பொருள்; அவர்கள் இந்த மார்க்கத்தின் உண்மையான சிறப்புக்களைச் சொந்தமாக்கிக் கொள்ளாமல் (விலகி நின்று) அதைக் குறை கூறுகின்றனர்.


இஸ்லாம் முழுவதுமாக இழந்துவிட்டது என்று நாங்கள் கூறமாட்டோம் ஏனெனில் தனது புத்தகத்தைப் பாதுகாப்பதன் மூலம் அதன் தொடர்ச்சிக்கு மிக உயர்ந்தோனான அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

 நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள். (அல்குர்ஆன்: 15:9)


மார்க்கத்தை செயல்படுத்தவும், பாதுகாக்கவும், பேணிக்கொள்ளவும் முஸ்லீம்களின் ஒரு கூட்டத்தை நிலைப்படுத்தி அவன் இஸ்லாத்தை பாதுகாத்துள்ளான். உயர்ந்தோனான அல்லாஹ் கூறியது போல்:


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ

 விசுவாசங்கொண்டோரே! உங்களிலிருந்து எவர் தன் மார்க்கத்தைவிட்டும் மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்குப் பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான் .. அவன் அவர்களை நேசிப்பான், அவர்களும் அவனை நேசிப்பார்கள், அவர்கள், விசுவாசங் கொண்டவர்களிடம் இரக்கம் காட்டுபவர்கள், நிராகரிப்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறவர்கள், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள், இன்னும் பழிப்பவரின் பழிப்புக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள், இது அல்லாஹ்வின் பேரருளாகும்அவன் நாடியவர்களுக்கு இதனை அவன் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மிக விசாலமானவன், (யாவரையும்) நன்கறிகிறவன். (அல்குர்ஆன்: 5:54)


மேலும் உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا

 அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன்: 4:28)


ஆம், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அதே கூட்டம்தான் இது:


என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் (ஒருபோதும்) நின்றுவிடாது பகிரங்கமாக சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள்; அவர்களைக் கைவிடுபவர்களாலும் அல்லது அவர்களை எதிர்ப்பவர்களாலும் அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. அல்லாஹ்வின் கட்டளை (இறுதி நாள்) வரும் வரை அவர்கள் அதில் நீடித்திருப்பார்கள்.” 


(புஹாரி 7022, முஸ்லிம் 1037, முஸ்னத் அஹமத் 4/93).


எனவே, இக் கட்டத்தில் உண்மையான இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அருள் செய்யப்பட்ட கூட்டத்துடன் பழகுவது நம் மீது கடமையாகும் - அல்லாஹ் அவர்களில் உள்ளவர்களாக எங்களை ஆக்குவானாக. அதன் மக்களிடமிருந்து; சரியான இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்புவோர் அதைப் பற்றிக் கற்றறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடியும். இது அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களின் அடிச்சுவடுகளில் பயணிக்க அனுமதிக்கும்.


நிராகரிப்பாளர்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவ விரும்புவோர் இந்தக் கூட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவும் இது அனுமதிக்கும்.


பாதுகாக்கப்பட்ட கூட்டம்’, ‘அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆஎன்பதால் நாடப்படுவது என்ன?

அல்லாஹ்வுடைய தூதரின் (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர். அல்லாஹ் கூறியது போல்:


 اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ۖ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ

 நிச்சயமாக (உங்களுக்குத் தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும், மேலும் நான்(தான்) உங்கள் இரட்சகன், ஆகவே என்னையே வணங்குங்கள்.

(அல்குர்ஆன்: 21:92)


பல சமயங்களில் யூதர்களும் நயவஞ்சகர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களை பிளவுபடுத்த முயன்றனர் ஆனால் அவர்களால் முடியவில்லை.


நயவஞ்சகர்கள் கூறினார்கள்:


 لَا تُنْفِقُوْا عَلٰى مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰى يَنْفَضُّوْا‌ؕ

 “அல்லாஹ்வுடைய தூதருடன் இருப்பவர்கள் (அவரைவிட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள்” 

(அல்குர்ஆன்: 63:7)


மேலும் உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களைத் தன் கூற்றால் மறுத்தான்:


‌ؕ وَلِلّٰهِ خَزَآٮِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَفْقَهُوْنَ

 “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள களஞ்சியங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும், எனினும், இந்த (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.”

(அல்குர்ஆன்: 63:7)


யூதர்கள் முஸ்லீம்களை பிளவுபடுத்தவும், அவர்களின் மார்க்கத்திலிருந்து அவர்களைத் திருப்பவும் முயன்றனர்.


 وَقَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِىْۤ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌‌ۚ‌ ۖ

 வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கி) “நீங்கள் விசுவாசங் கொண்டவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தை பகலின் துவக்கத்தில் (காலையில்) விசுவாசித்து, அதன் முடிவில்  (மாலையில் அதனை) நிராகரித்து விடுங்கள்; (இதனால் விசுவாசங் கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் விசுவாசத்திலிருந்து) திரும்பிவிடக் கூடும்எனவும் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 3:72)


ஆனால், உயர்ந்தோனான அல்லாஹ் அதை அம்பலப்படுத்தி வெளிப்படுத்தியதால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது.


அவர்கள் (முஸ்லிம்களைப் பிளவுபடுத்த) இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர், மேலும் அவர்கள் இஸ்லாத்திற்கு முன் அன்சாரிகளிடையே வெடித்த பகைமை மற்றும் போர்களைக் குறிப்பிடத் தொடங்கினர், மேலும் அவர்கள் (உணர்ச்சிகளைக் கிளற) போர்க் கவிதைகளைக் குறிப்பிடத் தொடங்கினர்.


மீண்டும் ஒருமுறை உயர்ந்தோனான அல்லாஹ் தன் கூற்றின் மூலம் அவர்களின் திட்டங்களை அம்பலப்படுத்தினான்:


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ

 விசுவாசங் கொண்டோரே! வேதங்கொடுக்கப்பட்டோரில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால், உங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னரும் நிராகரிப்போராக உங்களை அவர்கள் திருப்பிவிடுவார்கள்.

(அல்குர்ஆன்: 3:100)


பின்வருமாறு உயர்ந்தோனான அவன் கூறும் வரை:


 يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ

 சில முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்), கறுத்து (வாடியு)மிருக்கும் நாளில் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு

(அல்குர்ஆன்: 3:106)


இது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை சந்திக்க வழிவகுத்தது; இஸ்லாத்தின் அருளைப் பற்றியும் மேலும் அவர்கள் ஒருமுறை பிளவுபட்ட பிறகு அவர்கள் ஒற்றுமையாக இருப்பதைப் பற்றியும் நபியவர்கள் (ஸல்அவர்களுக்கு அறிவுறுத்தி நினைவூட்டினார்கள்.


இது அவர்கள் கைகுலுக்கி ஒருவரையொருவர் கட்டித்தழுவுவதற்கு காரணமாக அமைந்தது, மீண்டும் யூதர்களின் திட்டம் தோல்வியடைந்து முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர்.


மேலும் உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களை சத்தியத்தின் மீது ஒன்றுபடுமாறு கட்டளையிட்டான், மேலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினையைத தடை செய்தான். உயர்ந்தோனான அவன் கூறினான்:


 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ

 மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு

(அல்குர்ஆன்: 3:105)


மேலும் உயர்வான அல்லாஹ் கூறினான்:


 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌

 மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்,  (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்

(அல்குர்ஆன்: 3:103)


உண்மையில், தொழுகை, நோன்பு, ஹஜ் மற்றும் அறிவைத் தேடுதல் போன்ற சில வழிபாட்டுச் செயல்களில் ஒற்றுமையை அல்லாஹ் அவர்களுக்குச் சட்டமாக ஆக்கியுள்ளான்.


நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை ஊக்குவித்ததோடு, அவர்கள் வேறுபட்டு பிரிவதையும் தடை செய்தார்கள். ஒற்றுமைக்கான ஊக்கம், பிரிவினைத் தடை எனப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களைச் சொல்லி வந்தார்கள்.


முன்னைய சமுதாயங்களுக்கு நடந்ததைப் போலவே, இந்த சமுதாயத்துக்குள்ளும் ஏற்படப்போகும் பிளவுகளைப் பற்றி அவர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். அவர் (ஸல்) கூறியபோது:


நிச்சயமாக உங்களில் நீண்டகாலம் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். அதனால் எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் பற்றிக்கொள்ளுங்கள்.” 


(அபூதாவூத் 5/4608, திர்மிதி 2676, இப்னு மாஜா 44, முஸ்னத் அஹமத் 4/226 127, ஸஹீஹ் இப்னு மாஜா அல்பானி 3227)


யூதர்கள் எழுபத்தி ஒரு பிரிவினர்களாகப் பிரிந்தார்கள்,‌ கிறிஸ்தவர்கள் எழுபத்தி இரண்டு பிரிவினர்களாகப் பிரிந்தார்கள்‌. இந்த (எனது) சமூகம்‌ எழுபத்தி மூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள்‌. அவர்கள் அனைவரும் நரக நெருப்பிலே நுழைவார்கள்‌; ஒரு கூட்டத்தினரைத் தவிர‌. (அதற்கு நபித்தோழர்களான) அவர்கள் கூறினார்கள்: "அந்த ஒரு கூட்டத்தினர் யார் அல்லாஹ்வின் தூதரே?", நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அது நானும் எனது தோழர்களும் எதன் மீது இருக்கின்றோமோ அதன்மீது இருப்பவர்கள்”.


(திர்மிதி 2640, அபூதாவூத் 4596, இப்னு மாஜா 3991, முஸ்னத் அஹமத் 2/332, அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 1/128 129, ஷரிஆ அல் ஆஜுர்ரி பக்கம் 15-16, அல் ஸுன்னா இப்னு நஸிர் அல் மர்வாஸ் பக்கம் 22 23, ஷரஹ் உஸுல் அல் இத்திஹாத் லாலக்காயி 1/145-147, ஸல்ஸிலா அஸ்ஸஹீஹா அல்பானி 1492)


அவர் (ஸல்) கூறியது நிச்சயமாக நிறைவேறியது, ஏனென்றால் இந்த சமுதாயம் நபித்தோழர்களின் சகாப்தத்தின் முடிவில் பிளவுபடத் தொடங்கியது, ஆனால் இந்தப் பிளவு அந்தப் போற்றுதலுக்குரிய தலைமுறைகளின் சகாப்தம் முழுவதும் (முஸ்லிம்) சமுதாயத்தின் சாராம்சத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்ந்தார்கள்:


"உங்களில் சிறந்தவர் எனது தலைமுறையினர், பின்னர் அவர்களைப் பின்பற்றுபவர்கள், பின்னர் அவர்களைப் பின்பற்றுபவர்கள்."


(புஹாரி 2508, முஸ்லிம் 2535, திர்மிதி 2222, அபூதாவூத் 4657, முஸ்னத் அஹமத் 4/427 )


(இந்த ஹதீஸின்) அறிவிப்பாளர், "அவர் தனது தலைமுறைக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளைக் குறிப்பிட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.


முஹத்தித்தூன் (ஹதீஸில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள்) முதல் ஏராளமான அறிஞர்கள் அந்த நேரத்தில் இருந்ததால் இது (பிரிவினைகளின் பின்தங்கிய நிலை) ஆகும். முஃபஸ்ஸிரூன் (குர்ஆனை விளக்குவதில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள்), மற்றும் ஃபுகாஹா (இஸ்லாமிய சட்டவியலில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள்), அதற்கு நடுவே தாபியீன் அறிஞர்கள், தபஉத் தாபியீன் மற்றும் நான்கு இமாம்களும் அவர்களது மாணவர்களும் இருந்தனர். அந்த போற்றுதலுக்குரிய தலைமுறைகளின் போது, இஸ்லாம் பலமான நிலையில் இருந்ததன் காரணமாக இந்த ஒற்றுமை நிலை ஏற்பட்டது.


இவ்வாறு, (அந்த சகாப்தத்தில் தோன்றிய) வழிகெட்ட பிரிவுகள் ஆதாரங்களைக் கொண்டும் வலிமையான கரத்தினாலும் வெற்றிகொள்ளப்பட்டு களையெடுக்கப்படும் தண்டனையையும் சந்தித்தன.


போற்றுதலுக்குரிய தலைமுறைகள் கடந்த பிறகு, முஸ்லிம்கள் மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களுடன் கலக்கத் தொடங்கினர். அத்துடன் காஃபிர்களின் (தத்துவம், தர்க்கவியல் போன்ற) கலைகள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.


இஸ்லாமிய மன்னர்கள் நிராகரிப்பிலும் வழிகேடுகளிலும் இருந்த சிலரை நம்பிக்கைக்குரியவர்களாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், மேலும் அவர்களில் சிலர் ஆலோசகர்களாகவும் மந்திரிகளாகவும் ஆனார்கள்.


அதனால் வேறுபாடு தீவிரமடைந்து பிரிவுகளும் கொள்கை கோட்பாடுகளும் பெருகிப் பொய்யான பாதைகள் செழித்து வளர்ந்தன. நமது இந்தக் காலம் வரை அது நின்றுவிடவில்லை, அல்லாஹ் நாடிய வரை அது நிற்காது.


இன்னும் - மேலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது - பாதுகாக்கப்பட்ட பிரிவான அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ இன்னும் நீடித்திருக்கிறது, உண்மையான இஸ்லாத்தைப் பற்றிக்கொண்டு, அதன் மீது பயணித்து, அதை நோக்கி அது அழைப்பு விடுக்கிறது.


மேலும் அது இருப்பதை நிறுத்தாது. அத்துடன் நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்கு இணங்க ஒருபோதும் நின்றுவிடாது. இந்தக் கூட்டம் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்றும், சத்தியத்தின் மீது உறுதியாகவும் இருக்கும் என்றும் அவர் (ஸல்) கூறினார்கள். மேலும் இது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், பிடிவாதக்காரர்களுக்கு எதிரான ஆதாரத்தை நிலைநாட்டுவதற்காகவும், தூய்மையானவனான அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.


நபிகள் (ஸல்) அவர்கள் கூறியது போல்; நபிகள் நாயகத்தின் (ஸல்) காலத்தில் தோழர்கள் நிலைத்திருந்த நம்பிக்கை, செயல் மற்றும் பேச்சு ஆகியவற்றை இந்த அருள் செய்யப்பட்ட கூட்டம் எடுத்துக்காட்டுகிறது:


இன்று நானும் என்னுடன் இருப்பவர்களும் எதன் மீது உள்ளோமோ அவர்களும் அதன் மீதுதான் இருப்பார்கள்


(திர்மிதி 2640, அபூதாவூத் 4596, இப்னு மாஜா 3991, முஸ்னத் அஹமத் 2/332, அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 1/128 129, ஷரிஆ அல் ஆஜுர்ரி பக்கம் 15-16, அல் ஸுன்னா இப்னு நஸிர் அல் மர்வாஸ் பக்கம் 22 23, ஷரஹ் உஸுல் அல் இத்திஹாத் லாலக்காயி 1/145-147, ஸல்ஸிலா அஸ்ஸஹீஹா அல்பானி 1492)


நிச்சயமாக, இந்தக் கூட்டமானது உயர்ந்தோனான அல்லாஹ் கூறிய நேர்வழி பெற்றவர்களின் எஞ்சியது ஆகும்.


 فَلَوْ لَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّـنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ

 உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தார்களில், பூமியில் குழப்பம் (அல் ஃபஸாத்) செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் இருந்திருக்கவேண்டாமா?

(அல்குர்ஆன்: 11:116)



பாதுகாக்கப்பட்ட கூட்டத்தின்பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள்

இந்தக் கூட்டமானது வழிகேடுகளில் இருந்து விடுபடுவதால், அதன் பெயர்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம், இதன் மூலம் அதை அங்கீகரிக்கவும் பின்பற்றவும் முடியும்.


இது அனைத்து மாறுபட்ட பிரிவுகளிலிருந்தும் வேறுபடுத்தப்பட்ட சிறந்த பெயர்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மிக முக்கியமான பெயர்கள் மற்றும் அடையாளங்களில் இருந்து; இது 'பாதுகாக்கப்பட்ட கூட்டம்', 'வெற்றிபெற்ற அணி' மற்றும் 'அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ (சுன்னாவுடைய மற்றும் கூட்டமைப்புடைய மக்கள்)' என்று அறியப்படுகிறது.


இந்த பெயர்களின் அர்த்தங்கள் பின் தொடரும் (சுருக்கமாக):


இது:


1. பாதுகாக்கப்பட்ட கூட்டம்: நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட என்று பொருள்படும், இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பிரிவுகளைக் குறிப்பிடும் போது அதை (இந்த அச்சுறுத்தலில் இருந்து) விலக்கிக் கூறினார்கள்.


"ஒன்றைத் தவிர அனைத்தும் நரக நெருப்பில்."


(திர்மிதி 2640, அபூதாவூத் 4596, இப்னு மாஜா 3991, முஸ்னத் அஹமத் 2/332, அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 1/128 129, ஷரிஆ அல் ஆஜுர்ரி பக்கம் 15-16, அல் ஸுன்னா இப்னு நஸிர் அல் மர்வாஸ் பக்கம் 22 23, ஷரஹ் உஸுல் அல் இத்திஹாத் லாலக்காயி 1/145-147, ஸல்ஸிலா அஸ்ஸஹீஹா அல்பானி 1492)


அதாவது (ந்த ஒரு கூட்டமான)து நரக நெருப்பில் இல்லை.


2. இது அல்லாஹ்வின் புத்தகத்தையும், அவனது தூதரின் சுன்னாவையும், இறைநம்பிக்கையில் முந்தியவர்களான முஹாஜிரீன் மற்றும் அன்சாரிகள் எதன் மீது இருந்தார்களோ அதனையும் உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல:


இன்று நானும் என் தோழர்களும் எதன் மீது உள்ளோமோ அவர்கள் அதன் மீது உள்ளவர்கள்


(திர்மிதி 2640, அபூதாவூத் 4596, இப்னு மாஜா 3991, முஸ்னத் அஹமத் 2/332, அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 1/128 129, ஷரிஆ அல் ஆஜுர்ரி பக்கம் 15-16, அல் ஸுன்னா இப்னு நஸிர் அல் மர்வாஸ் பக்கம் 22 23, ஷரஹ் உஸுல் அல் இத்திஹாத் லாலக்காயி 1/145-147, ஸல்ஸிலா அஸ்ஸஹீஹா அல்பானி 1492)


3. அதன் மக்கள் 'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ' என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே அவை (ஸுன்னா, ஜமாஆ என) இரண்டு பெரிய பண்புகளைக் கொண்டு வேறுபடுகின்றன:


முதல் பண்பு என்னவென்றால், தங்கள் அபிப்பராயங்கள், தங்கள் விருப்பங்கள் மற்றும் தங்கள் தலைவர்களின் கூற்றுகளில் தொத்திக்கொண்டிருக்கும் மற்ற வழிகெட்ட பிரிவுகளுக்கு எதிராக, அவர்கள் இறைத்தூதரின் சுன்னாவையுடைய [அதற்கென அல்லாஹ்வாலும் அவனது தூதரினாலும் (ஸல்) கூறப்பட்ட] ஒரு மக்களாக மாறும் வரை அதை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறார்கள்.


எனவே, இந்த வழிகெட்ட பிரிவுகள் [நபி (ஸல்) அவர்களாலும் அவர்களது தோழர்களாலும்] சுன்னாவுடன் இணைத்துக் கூறப்படவில்லை; மாறாக அவர்கள் கதரிய்யா மற்றும் முர்ஜியா போன்ற அவர்களின் பித்அத்கள் மற்றும் வழிகேடுகள் அல்லது ஜஹ்மிய்யா போன்ற அவர்களின் தலைவர்கள் அல்லது கவாரிஜ் மற்றும் ராஃபிதா போன்ற அவர்களின் கீழ்த்தரமான செயல்களுடன் இணைத்துக் கூறப்பட்டவர்களாவர்.


இரண்டாவது தனித்துவமான பண்பு என்னவெனில், அவர்கள் (நபித்தோழர்களின்) கூட்டமைப்பை உடைய (..வல் ஜமாஆ) மக்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தின் மீது ஒன்றுபட்டு இருப்பதாலும், பிரிவினை இல்லாததாலும் ஆகும்.


சத்தியத்தின் மீது ஒன்றுபடாது; ஆனால் அதற்கு மாறாக அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றும் வழிதவறிய பிரிவுகளுக்கு எதிரானது இதுவாகும். ஏனெனில் அவர்களை ஒன்றிணைக்க எந்த சத்தியமும் இல்லை.


4, 'வெற்றிபெற்ற கூட்டம்'. அது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுவதாலும், அல்லாஹ் கூறியது போல் அல்லாஹ் அதற்கு வெற்றியைத் தருவதாலும், இறுதிநாள் நிலைநிறுத்தப்படும் வரை அது 'வெற்றிபெற்ற கூட்டம்' ஆகும்.


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ

 விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.

(அல்குர்ஆன்: 47:7)


அதனால்தான் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:


அவர்களைக் கைவிடுபவர்களாலும் அல்லது அவர்களை எதிர்ப்பவர்களாலும் அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. அல்லாஹ்வின் கட்டளை (இறுதி நாள்) வரும் வரை அவர்கள் அதில் நீடித்திருப்பார்கள்”. 


(முஸ்லிம் 1920)



'அஹ்லுல் சுன்னா வல் ஜமாஆ'வின் அடிப்படை நம்பிக்கைகள்

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவானது அசல் உரை ரீதியாக நிலைநிறுத்தப்பட்ட மற்றும் நம்பிக்கைக் கோட்பாடுகள், செயல்கள், நடத்தைகளுடன் தொடர்புபட்ட தெளிவான அடிப்படை விதிகளின் மீது பயணிக்கிறது. இந்த அற்புதமான அடிப்படைக் கோட்பாடுகள் அல்லாஹ்வின் புத்தகத்திலிருந்தும் அவனது தூதரின் (ஸல்) சுன்னாவிலிருந்தும், இந்த சமுதாயத்தின் சரியான வழிகாட்டுதலின் மீது இருந்த முன்னோர்களான, நபித்தோழர்கள், அவர்களைத் தொடர்ந்தோர் மற்றும் அவர்களை நல்வழியில் பின்பற்றியவர்களிடமிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன.


இந்த அடிப்படைகளை பின்வருவனவற்றுடன் சுருக்கமாகக் கூறலாம்:


முதல் அடிப்படைக் கோட்பாடு

அல்லாஹ், அவனது மலக்குகள், அவனது வேத நூல்கள், அவனது தூதர்கள், இறுதி நாள், மேலும் விதி அதன் நன்மை மற்றும் தீமை மீதான நம்பிக்கை.


அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

இதன் பொருள் தவ்ஹீதின் மூன்று வகைகளை உறுதிப்படுத்துதல், நம்புதல் மற்றும் அதன்படி செயல்படுதல்:


1. தவ்ஹீத் அர்-ரூபூபிய்யா (படைத்துப் பரிபாலிப்பதில் அல்லாஹ்வை தனித்துவப்படுத்தல்)


2. தவ்ஹீத் அல்-உலூஹிய்யா (எல்லா வணக்க வழிபாடுகளிலும் அல்லாஹ்வை மட்டுமே தனித்துவப்படுத்தல்)


3. தவ்ஹீத் அல் அஸ்மா வஸிஃபாத் (அல்லாஹ்வை அவனது பெயர்கள் மற்றும் பண்புகளைக்கொண்டு தனித்துவப்படுத்தல்).



தவ்ஹீத் அர் ரூபூபிய்யா:


இது படைத்தல், வாழ்வாதாரமளித்தல், உயிர்(வாழ்வு) அளித்தல் அல்லது மரணிக்கச் செய்தல் போன்ற செயல்களில் உயர்ந்தோனான அல்லாஹ்வை மட்டும் தனித்துவப்படுத்துவதாகும். மேலும் அவன்தான் எல்லாவற்றிற்கும் இறைவனும், இறையாண்மையுள்ள அரசனும் ஆவான் என்றும் (நம்புவதாகும்),


தவ்ஹீத் அல்-உலூஹிய்யா


அடியார்கள்; உயர்ந்தோனான அல்லாஹ் விதித்துள்ள அனைத்துச் செயல்களிலும் (வணக்க வழிபாடுகளிலும்); அதாவது அவர்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கத் தேடக் கூடியதான பிரார்த்தனை, அச்சம், நம்பிக்கை, நேசம், தியாகம், உதவி தேடுதல், மீட்பு மற்றும் அடைக்கலம், தொழுகை, நோன்பு, ஹஜ் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல் போன்றவற்றில் உயர்ந்தோனான அல்லாஹ்வை மட்டுமே தனித்துவப்படுத்த வேண்டும் என்பது இதன் பொருளாகும்.


உயர்ந்தோனான அல்லாஹ் சட்டமாக விதித்துள்ள மற்றும் கட்டளையிட்டுள்ள அனைத்து விடயங்களிலும்; ஒரு மலக்கையோ, ஒரு நபியையோ, ஒரு இறைநேசரையோ(வலி) அல்லது அவர்களைத் தவிர வேறு யாரையுமோ எதையுமோ உயர்ந்தோனான அவனுக்குப் பங்காளர்களாக ஆக்கக் கூடாது.


தவ்ஹீத் அல்-அஸ்மா வஸ்-ஸிஃபாத்:


இது அல்லாஹ் தனக்காக உறுதிப்படுத்திய அல்லது அவனது தூதர் (ஸல்) அவனுக்கு உறுதிப்படுத்திய பெயர்கள் மற்றும் பண்புகளையும்; மேலும் அல்லாஹ் தனக்காக நிராகரித்த அல்லது அவனுடைய தூதர் (ஸல்) அவனுக்காக நிராகரித்த களங்கங்கள் மற்றும் குறைபாடுகளையும்; மறுக்காமல், திரிபுபடுத்தாமல் (மாற்று விளக்கம் கூறாமல்), அல்லது உருவக விளக்கம் கூறாமல், மற்றும் படைப்புகளுடன்  ஒப்பிடவோ அல்லது ஒத்ததாகவோ ஆக்காமல் அவற்றில் அல்லாஹ்வும் அவனது தூதரும் உறுதிப்படுத்தியதை உறுதிப்படுத்தவும், அல்லாஹ்வும் அவனது தூதரும் நிராகரித்ததை நிராகரிக்கவும் செய்ய வேண்டும். உயர்ந்தோனான அல்லாஹ் கூறியது போல்:


‌ ؕ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ

 அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல்குர்ஆன்: 42:11)


மேலும் உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌

 இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்

(அல்குர்ஆன்: 7:180)


மலக்குகள் மீதான நம்பிக்கை

இது அவர்களின் இருப்பையும் மற்றும் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் நம்புவதாகும். அல்லாஹ் கூறியது போல் தன்னை வணங்கவும், பிரபஞ்சத்தில் அவனது கட்டளைகளை நிறைவேற்றவும் உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களைப் படைத்தான்:


‌  بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ

 (அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.

(அல்குர்ஆன்: 21:26)


 لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ

 சொல்லைக்கொண்டு அவனை அவர்கள் முந்தவுமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 21:27)


 جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

 இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும் இறக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன், அவன் நாடியதை(த்தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்.

(அல்குர்ஆன்: 35:1)


வேத நூல்களின் மீதான நம்பிக்கை

இது அவற்றின் மீதும், அவற்றில் உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் ஒளியின் மீதும் நம்பிக்கை வைப்பதும், மனித குலத்திற்கான வழிகாட்டியாக அல்லாஹ் தனது தூதர்களுக்கு இந்த நூல்களை வெளிப்படுத்தினான் என்று நம்புவதும் ஆகும்.


அவற்றில் மிகப் பெரியவை மூன்று புத்தகங்கள்: தவ்ராத், இன்ஜில் மற்றும் குர்ஆன் ஆகும், இந்த மூன்றில் பெரியது கண்ணியமிக்க குர்ஆன்; அது மிகப்பெரிய அற்புதம் ஆகும்.


உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:


 قُلْ لَّٮِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا

 “இந்தக் குர் ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்கள் கொண்டுவர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 17:88)


அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ; குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்று நம்புகிறது. அது (வேத வெளிப்பாடாக அறிவிக்கப்பட்டு) இறக்கப்பட்டது. மேலும் அதன் (வார்த்தைகளின்) எழுத்துக்கள் மற்றும் அர்த்தம் ஆகிய இரண்டும் படைக்கப்படாதது ஆகும்.


அல்குர்ஆனின் எழுத்துக்கள் மற்றும் அர்த்தம் இரண்டும் படைக்கப்பட்டவை என்று கூறும் ஜஹ்மிய்யா மற்றும் முஹ்தஸிலாக்களின் தவறான நம்பிக்கைகளுக்கு இது முரணானது. அதுபோலவே, ஆஷாஇரா மற்றும் அவர்களைப் போன்றவர்களின் தவறான நம்பிக்கைகளுக்கும் இது எதிரானது. அவர்கள் (குர்ஆனின்) அர்த்தம் மட்டுமே அல்லாஹ்வின் பேச்சு என்றும் ஆனால் அதன் (வார்த்தைகளின்) எழுத்துக்களைப் பொறுத்தவரை அவை படைக்கப்பட்டவை என்றும் நம்புகிறார்கள், இரண்டு நிலைப்பாடுகளும் பொய்யானவை மற்றும் நிராகரிக்கப்பட்டவை ஆகும்.


உயர்வான அல்லாஹ் கூறினான்:


 وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلَامَ اللّٰهِ 

 மேலும், (நபியே!) இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரொருவர் உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!

(அல்குர்ஆன்: 9:6)


‌ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ‌ ؕ

 இவர்கள், அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றி விடவே நாடுகின்றார்கள்,

(அல்குர்ஆன்: 48:15)


எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சே தவிர அவனைத் தவிர மற்றவர்களின் பேச்சு அல்ல.


தூதர்கள் மீது நம்பிக்கை

இது முதலில் இருந்து கடைசி வரை தூதர்களாக, அல்லாஹ் பெயர் சொன்னவர்கள் சொல்லாதவர்கள் என அனைவரையும் நம்புவதும், மேலும் தூதர்களின் கடைசியும் மற்றும் முத்திரையுமானவர் நமது நபிகள் நாயகம் (ஸல்) என்று நம்புவதும் ஆகும்.


தூதர்கள் மீதான நம்பிக்கை ஒரு பொதுவான நம்பிக்கை, அதேசமயம் நமது நபிகள் நாயகம் (ஸல்) மீதான நம்பிக்கை ஒரு முழுமையான மற்றும் விசேடமான நம்பிக்கையாகும். அது முஹம்மது (ஸல்) அவர்கள் தூதர்களின் (இறுதி) முத்திரை என்றும், அவருக்குப் பிறகு நபி இல்லை என்றும் நம்புவதும் ஆகும். எவன் இதை நம்பவில்லையோ அவன் நிராகரிப்பாளன் ஆவான்.


தூதர்கள் மீதான நம்பிக்கையானது அவர்களின் உரிமைகள் தொடர்பாக மிகைப்படுத்தலையும் அத்துடன் அலட்சியத்தையும் இல்லாமல் செய்வதை அவசியமாக்குகிறது; யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மாறாக. (ஏனெனில்) அவர்கள் சில தூதர்களைப் பற்றி மிகைப்படுத்தி, அவர்களில் சிலரை அல்லாஹ்வின் குழந்தைகளாகக் கருதும் வரை அவர்கள் மீது எல்லை மீறினார்கள்.


 وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِ‌ؕ  

 மேலும், யூதர்கள்உஜைர்’  அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர்கிறிஸ்தவர்கள்மஸீஹ்அல்லாஹ்வுடைய மகன் என்றும் கூறுகின்றனர்,  

(அல்குர்ஆன்: 9:30)


சூஃபிகள் மற்றும் தத்துவவாதிகள் தூதர்களின் உரிமைகளை புறக்கணித்து சிறுமைப்படுத்தினர் மேலும் அவர்களின் தலைவர்களுக்குத் தூதர்களை விட முன்னுரிமை அளித்தனர்; அத்துடன் இணை வைப்பவர்களும் நாத்திகர்களும் அனைத்து தூதர்களையும் நிராகரித்தனர்.


யூதர்கள் முஹம்மதுவை (ஸல்) நிராகரித்தனர். கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை (ஸல்) நிராகரித்தனர். எவர் தூதர்களில் சிலரை நம்பி, சிலரை நம்ப மறுக்கிறாரோ, யதார்த்தத்தில் அவர் அவர்கள் அனைவரையும் நிராகரிப்பவராகவே இருக்கிறார்.


உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍۙ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا ۙ

 நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பாகுபாடு செய்வதை நாடி, “தூதர்களில் சிலரை நாம் விசுவாசிப்போம்இன்னும் சிலரை நாம் நிராகரிப்போம் எனவும் கூறி, (நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்தவும் நாடுகின்றார்களே அத்தகையோர்,

(அல்குர்ஆன்: 4:150)


 اُولٰٓٮِٕكَ هُمُ الْـكٰفِرُوْنَ حَقًّا‌ ۚ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا

 அவர்கள்தான் உண்மையாகவே  நிராகரிப்போராவர், இன்னும், நிராகரிப்போருக்கு, நாம் இழிவுதரும் வேதனையையே தயார் படுத்தியும் வைத்திருக்கின்றோம்.

(அல்குர்ஆன்: 4:151)


உயர்வான அல்லாஹ் கூறினான்:


 لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌  

 (அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்திவிட மாட்டோம் (என்றும்

(அல்குர்ஆன்: 2:285)


இறுதி நாளின் மீதான நம்பிக்கை

மரணத்திற்குப் பிறகு நமக்கு ஏற்படும் என உயர்ந்தோனான அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) அறிவித்துத் தந்துள்ளவைகளான, கப்ரின் வேதனை மற்றும் பேரின்பம், கப்ருகளிலிருந்து மீள உயிர்கொடுத்து எழுப்பப்படுதல், (மஹ்ஷரில்) ஒன்று திரட்டப்படுதல், கேள்விகணக்கு, செயல்களின் எடை, வலது அல்லது இடது கையில் ஏடுகள் கொடுக்கப்படுவது, பாலம், அவற்றுடன் சொர்க்கம் மற்றும் நரக நெருப்பு ஆகிய அனைத்தையும் நம்புவது இதுவாகும்.


இதற்கான முன் தயாரிப்பு என்பது நன்னெறியான செயல்களாகவும், தீய செயல்களில் இருந்து விலகி அவற்றிலிருந்து தவ்பா செய்வதுமாக இருக்கிறது. நாத்திகர்களும் இணைவைப்பாளர்களும் நியாயத்தீர்ப்பு நாளை நிராகரிக்கின்றனர் மற்றும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் அதை நம்பினாலும் கூட தேவையான நம்பிக்கையைச் சரியாக அவர்கள் கொள்ளவில்லை.


وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ  

 (நபியே) யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ ஆகியவரைத் தவிர (வேறெவரும்) சுவர்க்கம் பிரவேசிக்கவே மாட்டார்கள் என அவர்கள் கூறுகிறார்கள்

(அல்குர்ஆன்: 2:111)


 وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدَةً ‌ ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ‌ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ

 மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாதுஎன (யூதர்களாகிய) அவர்கள் கூறுகின்றார்கள்

(அல்குர்ஆன்: 2:80)



விதியின் (கழா கத்ர்) மீது நம்பிக்கை

அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன்; நடந்தவை மற்றும் நடக்கப்போகிறவை இவை அனைத்தையும் அவன் விதித்து, பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்பூ) பதிவு செய்தான். மேலும் நன்மை அல்லது தீமை, ஈமான் அல்லது நிராகரிப்பு, கீழ்ப்படிதல் அல்லது மாறுசெய்தல் ஆகியவற்றையும் (விதித்து எழுதி வைத்திருக்கிறான்). பின்னர் நிச்சயமாக அல்லாஹ் நாடியிருக்கிறான், (நாடியதை) கட்டளையிட்டுப் படைத்துள்ளான் என்று நம்புவதே இதுவாகும். அல்லாஹ் கீழ்ப்படிவதை விரும்புகிறான் மாறுசெய்வதை வெறுக்கிறான்.


அடியார்களுக்குத் தங்கள் செயல்களின் மீது ஆற்றல் (குத்ரா), ஒரு தேர்வு (இக்தியார்) மற்றும் நாட்டம் (மஷிஅஹ்) உள்ளது. அவற்றிலிருந்து அவர்களின் கீழ்ப்படிதல் அல்லது மாறு செய்தலில் உள்ளவை வெளிப்படுகிறது. இருப்பினும், இது அல்லாஹ்வின் விருப்பத்திற்கும் நாட்டத்திற்கும் (இராதா) இணங்க உள்ளது.


அடியானுக்குத் தேர்வுச் சுதந்திரமோ அல்லது ஆற்றலோ இல்லை; அவன் தன் செயல்களைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லும் ஜபரிய்யாவின் பொய்யான நம்பிக்கைக்கு இது எதிரானது ஆகும்.


அதேபோல அடியானுக்கு (அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்படாத) முழுமையான சுதந்திரமும், கட்டுப்பாடற்ற விடுபடலும் உள்ளது. மேலும் அடியான் தனது செயலைச் சொந்தமாகப் படைக்கிறன்; அடியானின் விருப்பமும் நாட்டமும் அல்லாஹ்வின் விருப்பத்தையும் நாட்டத்தையும் சாராதது என்று கூறும் கதரிய்யாவின் பொய்யான நம்பிக்கைக்கு முரணானது இதுவாகும்.


இந்த இரு பிரிவினரையும் அல்லாஹ் தன் கூற்றின் மூலம் மறுக்கிறான்:


 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ  

 அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாடமாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 81:29)


அடியானுக்கு ஒரு நாட்டம் (மஷிஅஹ்) உள்ளது என்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தினான், இது தீவிர ஜபரிய்யாவிற்கு மறுப்பாகும். மேலும் அடியானின் செயல்கள் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு இணங்க நிகழ்கின்றன, இது இறைவன் விதித்த விதியை மறுக்கும் கதரிய்யாவிற்கு மறுப்பாகும்.


விதியின் மீதான இந்த நம்பிக்கை அடியானை துன்பங்களின் போது பொறுமையாக இருக்கவும், பாவங்கள் மற்றும் வெட்கக்கேடான செயல்களில் இருந்து வெகு தொலைவில் இருக்கவும் செய்கிறது. அது அவனை செயல்பட ஊக்குவிக்கிறது மற்றும் அவனிடமிருந்து சோம்பல், பயம் மற்றும் இயலாமை ஆகியவற்றை நீக்குகிறது.


இரண்டாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுல்-ஸுன்னாவின் (ஸுன்னாவுடைய மக்களின்) அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: ஈமான் (இறை விசுவாசம்) சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது; அது (அல்லாஹ்வுக்கு) கீழ்ப்படிதலுக்கு ஏற்ப அதிகரிக்கிறது மற்றும் மாறுசெய்தலுக்கு ஏற்ப அது குறைவடைகிறது.


ஈமான் என்பது (உள்ளத்தால்) நம்பிக்கை கொள்ளாது வெறுமனே பேச்சும் செயலும் அல்ல, இது நயவஞ்சகர்களின் ஈமானைப் போன்றதாகும்.


அவ்வாறே, அது; பேச்சும் செயலும் இல்லாத அறிவு மட்டுமேயல்ல, ஏனெனில் இவ்வாறான நம்பிக்கை இறை நிராகரிப்பாளர்களினுடையது ஆகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:


 وَجَحَدُوْا بِهَا وَاسْتَيْقَنَـتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا‌ ؕ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ

 அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதிகொண்ட நிலையில் அநியாயமாகவும், அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள், ஆகவே, இந்த குழப்பவாதிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் (கவனித்துப்) பார்ப்பீராக!

(அல்குர்ஆன்: 27:14)


உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:


 ‌ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ

 ஆகவே, நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை, எனினும், அந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே பொய்யாக்கி மறுக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 6:33)


உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:


 وَعَادًا وَّثَمُوْدَا۟ وَقَدْ تَّبَيَّنَ لَـكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ‌ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ وَكَانُوْا مُسْتَـبْصِرِيْنَۙ

 மேலும், ஆதையும், ஸமூதையும் (இவ்வாறே நாம் அழித்து விட்டோம்); அவர்கள் வாழ்ந்திருந்த இடங்(களில் உள்ள சின்னங்)களிலிருந்து, (அவர்கள் அடைந்த முடிவு) உங்களுக்குத் திட்டமாக தெளிவாகிவிட்டது. அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாக்கியும் காண்பித்தான்; ஆகவே, அவர்கள் நல்லறிவுடையோர்களாக இருந்தும் (நேர்) வழியை விட்டும் அவன் அவர்களைத் தடுத்துவிட்டான்.

(அல்குர்ஆன்: 29:38)


ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமோ அல்லது செயல்கள் இல்லாத பேச்சோ நம்பிக்கையோ அல்ல. ஏனெனில் இது முர்ஜியாவின் நம்பிக்கையாகும். அல்லாஹ் செயல்களை ஈமான் என்று (குர்ஆனில்) பல இடங்களில் குறிப்பிடுகிறான்.


உயர்வான அல்லாஹ் கூறினான்:


 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ   

يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ

 (உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் (-அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்மேலும், (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும், அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள்.

(அல்குர்ஆன்: 8:2)


 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَؕ

 அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை நிறைவேற்றுவார்கள்நாம் அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 8:3)


 اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ‌ۚ

 இத்தகையோர்தாம் உண்மையாகவே விசுவாசிகள்,

(அல்குர்ஆன்: 8:4)


மிக உயர்ந்தோனான அல்லாஹ கூறினான்:


وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌    

உங்களுடைய விசுவாசத்தை ஒருபோதும் அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லைநிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் மிக இரக்கம் காட்டுபவன், மிகக் கிருபையுடையவன்.

(அல்குர்ஆன்: 2:143)


இதன் பொருள்: நீங்கள் இதற்கு முன்பு பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த தொழுகையை (வீணாக்கிவிட மாட்டான்) என்பது ஆகும். எனவே அல்லாஹ் தொழுகையை ஈமான் என்று (இந்த வசனத்தில்) குறிப்பிட்டுள்ளான்.


மூன்றாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுல் சுன்னாவின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: இஸ்லாத்தை விட்டு வெளியேறும் காரியங்களிலிருந்து ஒரு செயலைச் செய்யாத வரையில் அவர்கள் எந்த முஸ்லிம்களையும் காஃபிர்கள் என்று அறிவிக்க மாட்டார்கள்.


ஷிர்க்கை(இணைவைப்பை) விடக் குறைவான பெரும் பாவங்களைப் பொறுத்த வரையில், அவற்றைச் செய்பவரின் நிராகரிப்பை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அதாவது சோம்பேறித்தனத்தால் தொழுகையைக் கைவிடுவது போன்ற, அப்போது அஹ்லுஸ் ஸுன்னா பெரும் பாவங்களைச் செய்பவரை காஃபிர்கள் என்று அறிவிக்கமாட்டார்கள். மாறாக, அவர்கள் அவரைப் பாவி என்றும், ஈமானில் குறைபாடுள்ளவர் என்றும் தீர்ப்பளிக்கிறார்கள்.


(பெரும்பாவம் செய்த) அவர்கள் தவ்பா செய்யவில்லை என்றால் அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் நாடினால் அவர்களை மன்னிப்பான் அல்லாஹ் நாடினால் அவர்களைத் தண்டிப்பான் ஆனால் அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க மாட்டார்கள்.


உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:


 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا

 நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான், எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்.

(அல்குர்ஆன்: 4:48)


எனவே, இந்த விஷயத்தில் அஹ்லுல்-ஸுன்னாவின் நம்பிக்கையானது: ஷிர்க்கை விட சிறியதாக இருந்தாலும் பெரும் பாவம் செய்யும் எவரையும் காஃபிர் என்று அறிவிக்கும் கவாரிஜ்களின் நம்பிக்கைக்கும்; மற்றும் பெரும் பாவம் செய்யும் ஒருவர் பூரணமான ஈமானை கொண்டவர் என்று கூறும் முர்ஜியாவின் நம்பிக்கைக்கும் இடையிலான நடுநிலையான பாதையாகும். மேலும் கீழ்ப்படிதலானது இறைநிராகரிப்புக்கு பயனளிக்காதது போல் மாறுசெய்வதானது ஈமானுக்குத் தீங்களிக்காது என்றும் (முர்ஜியாக்களான) அவர்கள் கூறுகிறார்கள்.


நான்காவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுல் சுன்னா வல் ஜமாஆவின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: முஸ்லிம் தலைவர்கள் (அல்லாஹ்வுடைய சட்டத்துக்கு) மாறுசெய்யுமாறு ஒன்றைக் கட்டளையிடாத வரை அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது கடமை ஆகும். அவர்கள் மாறுசெய்யுமாறு கட்டளையிட்டால், அந்த சட்டத்துக்குப் புறம்பான விஷயத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிவது அனுமதிக்கப்படாது ஆகும். ஆனால் சட்டப்பூர்வமான மற்ற விஷயங்களில் அவர்களுக்குக் கீழ்ப்படிவது இன்னும் (கட்டாயமாக) உள்ளது.


இது அல்லாஹ்வின் கூற்றுக்கு இணங்க (அவர்களின் நிலைப்பாடாகும்): 


 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚا

 விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழப்படியுங்கள்,  (அவனது) தூதருக்கும் கீழப்படியுங்கள்இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து  நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழப்படியுங்கள்,  

(அல்குர்ஆன்: 4:59)


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறும், மேலும் ஒரு அடிமை உங்கள் மீது அதிகாரம் செலுத்தினாலும்செவிமடுத்து கீழ்ப்படியுமாறு நான் உங்களுக்கு அறிவுரை வழங்குகிறேன்”. 


(அபூதாவூத் 5/4608, திர்மிதி 2676, இப்னு மாஜா 44, முஸ்னத் அஹமத் 4/126, 127, தாரிமி 95, ஸஹீஹ் இப்னு மாஜா - அல்பானி 3227)


முஸ்லீம் ஆட்சியாளருக்கு மாறு செய்வதை, தூதருக்குச் (ஸல்) செய்யும் மாறாக அஹ்லுஸ் ஸுன்னாவினர் நம்புகின்றனர். அவர் (ஸல்) கூறியது போல்:


யார் ஆட்சியாளருக்குக் கீழ்ப்படிகிறாரோ அவர் எனக்கே கீழ்ப்படிந்திருக்கிறார், யார் ஆட்சியாளருக்குக் மாறு செய்கிறாரோ அவர் எனக்கே மாறு செய்திருக்கிறார்


(புகாரி 2797, முஸ்லிம் 1835, நஸாயி 4193, இப்னுமாஜா 2859, முஸ்னத் அஹமத் 2/387)


தொழுகை அவர்களுக்குப் பின்னால் (நின்று) செய்யப்பட வேண்டும் என்பதையும், அவர்களுடன் ஜிஹாத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் (அஹ்லுஸுன்னாக்களாகிய) அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள்.


அவர்கள் முஸ்லீம் தலைவர்களின் நல்வாழ்வு மற்றும் நல்வழிக்காகப் பிரார்த்திக்கிறார்கள், மேலும் அவர்கள் அவர்களுக்கு உளத்தூய்மையுடன் அறிவுரை கூறுகிறார்கள்.


ஐந்தாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது அனுமதிக்கப்படாதது ஆகும். அவர்கள் இறைநிராகரிப்பை விடக் குறைந்த ஒரு (மார்க்க) சட்டவிரோதமான செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால்; நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்க அவர்கள் இறைநிராகரிப்பில் வீழாதவரை சட்டத்திற்குட்பட்ட விடயங்களில் அவர்களுக்குக் கீழ்படிய வேண்டும்.


முஸ்லீம் ஆட்சியாளர்கள் பெரும் பாவங்களில்  இறைநிராகரிப்பு அல்லாத எதையாவது செய்தாலும் அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை கட்டாயமாக்கும் முஹ்தஸிலாக்களின் நம்பிக்கைக்கு இது எதிரானது ஆகும். இதை அவர்கள் நன்மையை ஏவுவதாகவும் தீமையைத் தடுப்பதாகவும் கருதுகின்றனர்.


இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், முஹ்தஸிலாவின் இந்த நடத்தையானது மிகப்பெரிய தீமைகளிலிருந்து வருகிறது, ஏனெனில் இது பயங்கரமான பேரழிவுகள், குழப்பம், ஊழல், பிளவு மற்றும் எதிரிகளின் (முஸ்லிம்கள் மீதான) அதிகாரம் ஆகியவற்றில் முடிவடைகிறது.


ஆறாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுஸ் ஸுன்னாவினரின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: அவர்களின் இதயங்கள் மற்றும் நாவுகளை அல்லாஹ்வின் தூதரின் தோழர்களை நோக்கித் தூய்மையாக வைத்திருப்பது ஆகும். முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரிகளை குறிப்பிட்டு அவர்களைப் புகழ்ந்தபோது உயர்ந்தோனான அல்லாஹ் தனது கூற்றில் விவரித்ததைப் போல:


உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

 மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள்எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக  நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (அல்குர்ஆன்: 59:10)


இதுவே (அஹ்லுஸ் ஸுன்னாவினராகிய) அவர்களின் நிலைப்பாடு ஆகும். ஏனெனில் அவர்கள் (எப்போதும்) அவரது (ஸல்) கூற்றுக்கு இணங்கச் செயல்படுகிறார்கள்:


என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ (ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது


(புகாரி 3470, முஸ்லிம் 2541, அபூதாவூத் 4658, இப்னு மாஜா 161, முஸ்னத் அஹமத் 3/55)


இது நபித் தோழர்களை நிந்தனை செய்து அவர்களின் நற்சிறப்புக்களை மறுக்கும் ரஃபிதா மற்றும் கவாரிஜ்களுக்கு எதிரானது ஆகும்.


அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு கலீஃபாவானவர் அபுபக்ர், பின்னர் உமர், பின்னர் உஸ்மான் மற்றும் பின்னர் 'அனைவரும்' (அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக) என்று அஹ்லுஸ் ஸுன்னாவினர் நம்புகின்றனர். அவர்களில் எவருடைய கிலாஃபத்தை ஒருவர் அவமதித்தாலும், அவர் நாட்டுக் கழுதையை விட வழிதவறுகிறார், ஏனெனில் அவர் தெளிவான வாசகங்களையும், இந்த வரிசைப்படியே கலீஃபாக்கள் அனைவர் மீதும் ஒருமித்த கருத்து இருப்பதையும் எதிர்க்கிறார்.


ஏழாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆவின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளதாவது: அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) குடும்பத்தை நேசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் மீது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், இவற்றை அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயல்படுத்துகிறார்கள்:


எனது குடும்பத்தைப் பற்றி அல்லாஹ்வை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்


(முஸ்லிம் 2407, தாரிமி 3316, 4/366-367, கிதாபுஸ் ஸுன்னா - இப்னு அபீ ஆஸிம் 1551)


விசுவாசிகளின் தாய்மார்களான அவருடைய (ஸல்) மனைவிமார்கள் அவருடைய (ஸல்) குடும்பத்தில் உள்ளவர்களாவர். ஏனெனில் உயர்ந்தோனான அல்லாஹ் தனது வார்த்தைகளால் அவர்களை விளித்த பிறகு நிச்சயமாக அவன் தனது கூற்றால் (அவர்கள் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று) கூறியிருக்கிறான்:


 يٰنِسَآءَ النَّبِىِّ  ۚ

 நபியுடைய மனைவியரே

(அல்குர்ஆன்: 33:32)


உயர்ந்தோனான அவன் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வழிப்படுத்தினான். மேலும் அவர்களுக்கு ஒரு பெரிய வெகுமதியை உறுதியளித்தான், உயர்ந்தோனான அவன் கூறினான்:


  اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا 

  (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான்.

(அல்குர்ஆன்: 33:33)


முக்கியமாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பம் என்பது நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். மேலும் இங்கு குறிப்பாக நாடப்படுவது அவர்களில் இருந்து நேர்வழி நடப்பவர்களை ஆகும்.


அவருடைய சிறிய தந்தை அபூ லஹப் மற்றும் அவரைப் போன்ற வழிதவறிய உறவினர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.


உயர்ந்தோனான அல்லாஹ் கூறினான்:


 تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ

 அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!

(அல்குர்ஆன்: 111:1)


எனவே ஒரு தனிமனிதர் இஸ்லாம் மார்க்கத்தின் மீது நேர்வழிப்பட்டவராக இல்லாமல், வெறுமனே இறைத்தூதருடன் (ஸல்) இணைத்துக் கூறப்படுவதால் அல்லது உறவினால் மட்டும் அல்லாஹ்விடம் (அந்த நபருக்கு) எந்த நன்மையும் கிடைக்காது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


குறைஷிக் குலத்தாரே! ‘‘(ஓரிறையை ஏற்று) உங்களை (நரக நெருப்பிலிருந்து) விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து உங்களை நான் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) உன்னை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாதுஎன்று கூறினார்கள்.


(புகாரி 2602, 4771 முஸ்லிம் 262, நஸாயி 3646, தாரிமி 2732, முஸ்னத் அஹமத் 2/350)


நேர்வழி நடக்கும் நபி (ஸல்) அவர்களின் உறவினர்களுக்கு; எங்களால் மதிக்கப்படவும், நேசிக்கப்படவும், கௌரவிக்கப்படவும் உரிமை உள்ளது.


இதைத் தவிர, வணக்கத்தின் எந்தவொரு வடிவத்தைக் கொண்டும் அவர்களை நெருங்கி வர முயல்வது அல்லது உயர்ந்தோனான அல்லாஹ்வைத் தவிர தீங்கு அல்லது நன்மை செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புவது போன்ற அவர்களைப் பற்றி மிகைப்படுத்துவது அனுமதிக்கப்படாதது ஆகும். ஏனென்றால் அல்லாஹ் தனது தூதரிடம் (ஸல்) சொன்னான்:


 قُلْ اِنِّىْ لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا

 “நிச்சயமாக நான் உங்களுக்குத் தீங்கையோ, நன்மையையோ (செய்ய சக்தி பெறமாட்டேன்என்று (நபியே!) நீர் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 72:21)



 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛۚ  

 (நபியே!) நீர் கூறுவீராகஅல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மையைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது

(அல்குர்ஆன்: 7:188)


அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) நிலையே இதுதான் என்றால், அவரைத் தவிர மற்றவர்களின் நிலை என்ன! இது இறைதூதரின் (ஸல்) குடும்பத்தினருக்கு இயல்புக்கு மாற்றமான தன்மைகளை வழங்கிய சிலரது நம்பிக்கையை; தவறான நம்பிக்கை என்று தெளிவாகக் காட்டுகிறது.


எட்டாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுல் சுன்னா வல் ஜமாஆவின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து உள்ளதாவது: அவர்கள் அல்லாஹ்வின் அவ்லியாவின் (இறைநேசர்களின்) அற்புதங்களை நம்புகிறார்கள். அல்குர்ஆன் மற்றும் சுன்னாவால் நிறுவப்பட்டது போல்; சில அவ்லியாக்களின் கைகளில் உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களைக் கௌரவிக்கும் ஒரு வழிமுறையாக நடத்தும் அசாதாரண நிகழ்வுகள் இவையாகும்.


முஹ்தஸிலாவும் ஜஹ்மிய்யாவும் அற்புதங்கள் நிகழ்வதை நிராகரித்துள்ளனர். மேலும் இது; நிகழும் ஒரு காரியத்தையும் மற்றும் அறியப்பட்ட ஒரு உண்மையையும் நிராகரிப்பதாகும்.


இருப்பினும், நம் காலத்தில் சில மனிதர்கள் அற்புதங்கள் பற்றிய விஷயத்தைப் பொறுத்தவரை வழிதவறிச் சென்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது நம் மீது கடமையாகும். மேலும் அவர்கள் மாந்திரீகம் மற்றும் சூனியக்காரர்கள், ஷைத்தான்கள் மற்றும் பொய்யர்கள் போன்றவர்களின் செயல்களை இந்த அற்புதங்களுக்கு உதாரணமாகக் கருதும் அளவுக்கு அவர்களைப் பற்றி மிகைப்படுத்தியுள்ளனர்.


சூனியத்திற்கும் அற்புதங்களுக்கும் உள்ள வித்தியாசம் வெளிப்படையானது. அற்புதங்கள் நேர்வழிநடக்கும் அடியார்களின் கைகளில் நிகழ்கின்றன. அதேசமயம் மந்திரவாதிகள், நாத்திகர்கள் மற்றும் இறைநிராகரிப்பாளர்களின் கைகளில் சூனியம் நிகழ்கிறது. இது படைப்பைத் தவறாக வழிநடத்தி அவர்களின் செல்வத்தை மோசடி செய்கிறது. (அல்லாஹ்வுக்கு) கீழ்ப்படிவதால் அற்புதங்கள் விளைகின்றன மேலும் இறைநிராகரிப்பு மற்றும் மாறுசெய்வதால் சூனியம் விளைகிறது.




ஒன்பதாவது அடிப்படைக் கோட்பாடு

அஹ்லுல் சுன்னா வல் ஜமாஆவின் அடிப்படைக் கோட்பாடுகளில் இருப்பதுதான்: அவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கும்போது உயர்ந்தோனான அல்லாஹ்வின் புத்தகத்திலும், அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சுன்னாவிலும் உள்ளதை உள்ளும் புறமும் பின்பற்றுகிறார்கள். முஹாஜிரீன்கள், அன்சாரிகள் மற்றும் அனைத்து தோழர்களும் எதன்மீது இருந்தார்களோ அதனையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பாக நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் எதன்மீது இருந்தார்களோ அதைப் பின்பற்றுகிறார்கள், தூதர் (ஸல்) தனது கூற்றில் இதைப் பற்றி அறிவுறுத்தினார்கள்:


எனது சுன்னாவையும், நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் சுன்னாவையும் பற்றிக் கொள்ளுங்கள்”. 


(அபூதாவூத் 5/4608, திர்மிதி 2676, இப்னு மாஜா 44, முஸ்னத் அஹமத் 4/126 127, தாரிமி 95, ஸஹீஹ் இப்னு மாஜா - அல்பானி 3227)


உயர்ந்தோனான அல்லாஹ்வின் பேச்சு மற்றும் அவனது தூதரின் (ஸல்) பேச்சை விட யாருடைய பேச்சுக்கும் அவர்கள் எந்த முன்னுரிமையும் கொடுக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் 'குர்ஆன் மற்றும் சுன்னாவுடைய மக்கள்' என்று அழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.


உயர்ந்தோனான அல்லாஹ்வின் புத்தகம் மற்றும் அவனது தூதரின் (ஸல்) சுன்னாவுக்குப் பிறகு, இந்த உம்மத்தின் அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்; அல் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகிய முதல் இரண்டு அடிப்படைகளுக்குப் பிறகு அவர்கள் சார்ந்திருக்கும் மூன்றாவது அடித்தளம் இதுவாகும்.


மனிதர்கள் எதைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்டாலும், உயர்ந்தோனான அல்லாஹ்வின் கூற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அவர்கள் அதை மீண்டும் புத்தகத்திற்கும் சுன்னாவிற்கும் திருப்பி விடுகிறார்கள்.


 ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا

  யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள்,  (அவர்களுடைய  தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.

(அல்குர்ஆன்: 4:59)


அல்லாஹ்வின் தூதரைத் (ஸல்) தவிர வேறு எவரும் தவறு செய்ய முடியாதவர்கள் என்று அவர்கள் நம்புவதில்லை, மேலும் அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின்படி இருந்தாலன்றி யாருடைய கருத்தையும் பெரிதாகக் கருதுவதில்லை.


முஜ்தஹித் (இஜ்திஹாத் செய்யத் தகுதியுள்ள ஒரு அறிஞர்) தவறிழைக்கவும் முடியும் மற்றும் சரியாக இருக்கவும் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் கல்வி அறிவுள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யாதவரை அவர்கள் யாரையும் இஜ்திஹாத் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.


இஜ்திஹாத் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (சுயாதீனமான காரணங்கள்) விமர்சனங்கள் இருக்கக்கூடாது. மேலும் இஜ்திஹாத்தின் இத்தகைய பிரச்சினைகளில் வேறுபாடுகள் அவர்களுக்குள் பகைமையையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்தக்கூடாது, இது மதவெறி கொண்ட குருட்டுப் பின்பற்றாளர்கள் மற்றும் பித்அத்வாதிகளால் செய்யப்படுகிறது.


மாறாக, சில துணைப் பிரச்சினைகளில் அவர்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்,


இது பித்அத்களையுடைய மக்களுக்கு எதிரானது, ஏனென்றால் அவர்கள் பகைமை காட்டுகிறார்கள், அல்லது வழிதவறி இருப்பதாக அறிவிக்கிறார்கள், அல்லது இந்த விஷயங்களில் தங்களை எதிர்ப்பவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அறிவிக்கிறார்கள்.


இறுதியுரை

நான் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மேலதிகமாக: அஹ்லுஸ் ஸுன்னா தங்களைச் சிறந்த பண்புகளால் அலங்கரித்துக் கொள்கிறது, அவை மார்க்கத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளை (முழுமையாக) பரிபூரணப்படுத்தும் விஷயங்களிலிருந்து வந்தவை ஆகும்.


இவற்றில் மிகப் பெரிய பண்புகளில் இருந்து:


ஒன்று:


அவர்கள் உயர்ந்தோனான அல்லாஹ்வின் கூற்றுக்கு இணங்க, இஸ்லாமிய சட்டத்தின்படி, நன்மையை ஏவுகிறார்கள், தீமையைத் தடுக்கிறார்கள்.


 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ 

 (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்,  (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள்தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும்நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்,  

(அல்குர்ஆன்: 3:110)


உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா( நிலையா)கும்


(முஸ்லிம் 49, அபூதாவூத் 1140, திர்மிதி 2172, நஸாயி 5009, இப்னு மாஜா 4013, முஸ்னத் அஹமத் 3/10, )


நல்லதைக் கட்டளையிடும்போதும், தீமையைத் தடுக்கும்போதும் இஸ்லாமியச் சட்டம் எதை வேண்டுகிறதோ அதை விட்டு விலகுகிறவர்களான முஹ்தஸிலாவுக்கு எதிராக; இஸ்லாமிய சட்டம் வேண்டி நிற்பதை நாங்கள் கூறியுள்ளோம்.


முஸ்லீம் தலைவர்கள் மாறுசெய்யும் ஒரு செயலைச் செய்தால், அது இறைநிராகரிப்பைக் காட்டிலும் குறைவானதாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.


அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ (அத்தகைய சூழ்நிலைகளில்) தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல் அணிகளை ஒருங்கிணைக்கவும், பிளவு மற்றும் வேறுபாடுகளைத் தவிர்க்கவும் (தலைவர்களுக்கு) ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று நம்புகிறது.


ஸெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள்:


(இஸ்லாமிய வரலாற்றில்) எந்த ஒரு கூட்டமும் அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகக் கலகம் செய்து; அவர்களின் கிளர்ச்சி அவர்கள் அகற்ற நினைத்ததை விட பெரிய தீமையை விளைவித்தே தவிர இல்லை.


(மஜமஉ ஃபதாவா 28/179-180)


இரண்டு:


அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் சிறப்பியல்புகளில் இருந்து: அவர்கள் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை தொழுகை) மற்றும் ஜமாஅத் தொழுகை போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கிறார்கள். இது ஜும்ஆ அல்லது ஜமாஅத் தொழுகைகளை நிலைநாட்டாத பித்அத்வாதிகள் மற்றும் நயவஞ்சகர்களுக்கு மாற்றமானது ஆகும்.


மூன்று:


அவர்களின் குணாதிசயங்களின்படி: அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் ஆலோசனை செய்யும் பணியை மேற்கொள்கிறார்கள், தூதர் (ஸல்) அவர்களின் கூற்றின்படி செயல்பட்டு நீதி மற்றும் இறையச்சம் ஆகியவற்றில் அவர்களுடன் ஒத்துழைத்துக் கொள்கிறார்கள்:


மார்க்கம் (தீன்) என்பதேநலம் நாடுவதுதான் என்று கூறினார்கள். நாங்கள், யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்


(முஸ்லிம் 55, அபூதாவூத் 4944, நஸாயி 4197-4198, முஸ்னத் அஹமத் 4/102)


மேலும் நபிகள் நாயகத்தின் (ஸல்) கூற்றைச் செயல்படுத்தி:


விசுவாசி மற்றொரு விசுவாசிக்கு ஒரு கட்டிடம் போன்றவராவார், அவர்கள் ஒருவரையொருவர் பலப்படுத்துகிறார்கள்.


(புகாரி 467, முஸ்லிம் 2585, திர்மிதி 1928, )



நான்காவது:


அஹ்லுல் ஸுன்னாவின் பண்புகளில் உள்ளதுதான்: அவர்கள் துன்பத்தின் போது, சோதனை மற்றும் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டால், அவர்கள் உறுதியாகவும், திடமாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் துன்பத்தின் போது பொறுமையாக இருப்பதன் மூலமும், எளிதான காலங்களில் விதிக்கப்பட்டதைக் கொண்டு நன்றியுள்ளவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், பொருந்திக் கொள்பவர்களாகவும் இருப்பதன் மூலமும், இதை நிரூபிக்கிறார்கள்.


ஐந்தாவது:


அவர்களின் குணாதிசயங்களில் இருப்பதுதான்: அவர்கள் உன்னதமான நடத்தை மற்றும் நல்ல செயல்களால் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பெற்றோருக்குரிய கடமைகளைச் செய்கிறார்கள், குடும்ப உறவுகளைப் பேணுகிறார்கள், அண்டை வீட்டாரை நன்றாக நடத்துகிறார்கள்.


தற்பெருமை, கர்வம், அத்துமீறல், அடக்குமுறை மற்றும் மக்களை இழிவாகப் பார்ப்பது ஆகியவற்றை; உயர்ந்தோனான அல்லாஹ்வின் கூற்றின்படி செயல்படுவது கொண்டு அவர்கள் தடுக்கிறார்கள்:


 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ

 மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்,  (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 4:36)


மேலும் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று:


நம்பிக்கை கொண்டவர்களில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் நற்பண்புகளில் சிறந்தவர்கள் ஆவர்”. 


(அபூதாவூத் 4672, திர்மிதி 1162, தாரிமி 2792, முஸ்னத் அஹமத் 2/250, மவ்ரித் அல் ஸமான் அல் ஹைதமி 1311 1926, ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா அல்பானி 284)


அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கும் மற்றும் தாராளத் தன்மைக்கும் பாத்திரமானவர்களாக எங்களையும் ஆக்கிக் கொள்ளுமாறு நாங்கள் அவனிடம் வேண்டுகிறோம், அவன்  நம்மை வழிநடத்திய பிறகு நம் இதயங்களை அவன் வழிதவறச் செய்துவிட வேண்டாம் என்றும் வேண்டுகிறோம்.


மேலும் எங்கள் தூதர் முஹம்மது, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் ஈடேற்றமும் அருளும் உண்டாகட்டும்.



(நிறைவுற்றது)




பின்குறிப்பு


இந்நூலை ஸெய்க் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகத் தொகுத்துள்ளதால் இந்நூலில் உள்ள அடிப்படைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் தேவைப்படுவோர் எமது தளத்தில் உள்ள ஆக்கங்களையும் நூல்களையும் பார்வையிடவும்



 


©


Previous Post Next Post