அல்குர்ஆனின் கட்டங்கள்

புனிதமிகு அல்குர்ஆன் இறங்கிய கட்டங்கள் பற்றிய சுருக்கம்.

புனிதமிகு அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற இறை நாட்டங்களையும் அடியார்களின் செயற்பாடுகளையும் உலக நடவடிக்கைகளையும் மிகத் துல்லியமாக விளக்கும் பாதுகாக்கப்பட்ட ஏடு என்ற ஒரு தாயின் ஏட்டில் பதியப்பட்ட, அல்லாஹ்வின் பேச்சாகிய இறுதி இறைவேதமாகும். 

அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வின்  பேச்சை செவிமடுத்த பேனாவோ அல்லது வானவர்களோ  அதனை முதன் முதலில் அந்த ஏட்டில் எழுதினர்.

குர்ஆன் என்ற வாசகம் மாத்திரம் அல்குர்ஆனின் 67 அத்தியாங்களில் 68 இடங்களில் இடம் பெற்றுள்ளன என குர்ஆனிய அறிஞர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அல்குர்ஆன் பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு  இடம் பெற்றிருக்கின்றது. 

اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏ فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏
 நிச்சயமாக, இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள சங்கை மிக்க குர்ஆன் ஆகும்.

 لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏
 அதனைத் தூய்மையான (வான)வர்களைத் தவிர (வேறெவரும்) தொட மாட்டார்கள்.
 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
(இது)அகிலத்தாரின் அதிபதியால்  இறைக்கியருளப்பட்டதாகும். (அல்வாகிஆ : 77-80)

மற்றொரு வசனத்தில்:
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙفِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ 
(காஃபிர்கள் பேசிக் கொள்வது போல்) அன்றி;
இது லவ்ஹுல் மஹ்ஃபூளில் - (பதிவாகி) பாது காக்கப்பட்ட
கீர்த்திமிகு   குர்ஆனாகும். ( அல்புறூஜ்: 21,22)

وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏
 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏ بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ‏
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இரட்சகனால் இறக்கியருளப்பட்டதாகும்.

(நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பவராக  இருப்பதற்காக ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) (இதை) உம் இதயத்தின் மீது தெளிவான அரபி மொழியில் இதைக் கொண்டு இறங்கினார்.
(அஷ்ஷுஅரா:192-194)

மேற்படி வசனங்கள் புனித மிகு குர்ஆனின் சிறப்பு, அது எங்கிருந்தது? அதனை இறக்கியவன் யார்? எதற்காக போன்ற பல தகவல்களை நமக்கு விபரிக்கப்படுகின்றன.

சிந்தனைக்காக:

ஒட்டு மொத்த அல்குர்ஆனிய வசனங்களும் இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது முழுமையாக ஒரே தடவையில் இறக்கி  வைக்கப்பட்டதைப் போன்ற விளக்கத்தை வெளிப்படையில் தரும் குர்ஆன் வசனம் இல்லாமல் இல்லை.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏. 
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கவைத்தோம்; நிச்சயமாக நாம் (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிப்போராகவும் இருக்கின்றோம். (அத்துக்கான்: 43) என்ற வசனம் அதில் ஒன்றாகும்.

மேற்படி வசனமானது இறைவேதம் அல்குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் புனித இரவை தெளிவுபடுத்தும் வசனமாகும்.

அதாவது அவ்விரவு ரமளானில் ஒற்றைப் படையான ஒரு இரவாகும் என்பதை குர்ஆனின் வேறு வசனங்களும் ஹதீஸ்களும்  தெளிவுபடுத்துகின்றன. 

மேற்படி வசமானது ஒட்டு மொத்த அல்குர்ஆனிய வசனங்களும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மீது இறக்கிவைக்கப்படவில்லை என்பதை மக்கா இணைவைப்பாளர்களின் கேள்விக்கான பின்வரும் பதிலிலும் வேறு வசனங்களிலும் தெளிவுபடுத்தப்பக்டுள்ளது.

உதாரணமாக அல்இஸ்ரா (106) வது வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

وَقُرْءَانًا فَرَقْنَٰهُ لِتَقْرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكْثٍۢ وَنَزَّلْنَٰهُ تَنزِيلًا (الإسراء - 106)
நபியே நீர் மக்கள் மத்தியில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக ஓதிக் காண்பிப்பற்காக நாமே (இந்தக்) குர்ஆனை கட்டம் கட்டமாக இறக்கி வைத்தோம். (அல் இஸ்ரா-106)

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَٰهُ تَرْتِيلًا
(الفرقان - 32)
இன்னும்: “ இந்தக் குர்ஆன் இவர் மீது (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறனர்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இதனைப் படிப்படியாக நாம் இறக்கி வைத்தோம்.( அல்ஃபுர்கான்- 32)

மேற்படி இரு வசனங்களிலும் புனிதமிகு குர்ஆன் இறைத் தூதர் மீது ஒரே தடவையில் ஏன் இறக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டன.
இதயத்தில் நிலைபெறச் செய்வதும், 
அதில் அதனை உறுதிப்படுத்தலும் 
மனனம் செய்ய இலகுவாக இருப்பது,
போதனைகள் என்பன படிப்படியாக வழங்கப்படுவது  என்பதை உணர்த்துவது போன்ற மேலும் பல காரணிகள். 

அல்குர்ஆன் இறங்கிய  முக்கிய மூன்று கால கட்டங்கள்:

புனித குர்ஆன் பின்வரும் முக்கிய மூன்று கட்டங்களைக் கொண்டதாக காணப்பட்டதாக குர்ஆனிய அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதன் மூலம் மாற்றமில்லாத, குறைகள்,  முரண்பாடுகள் அற்ற, பாதுகாப்பான அற்புதமான வேதம் தனக்கு கிடைத்ததாக ஒரு முஃமின் உறுதி கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு அவன் பெருமிதம் அடைவதோடு அதன் 
போதனைகளை பிற மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

 கட்டங்கள் பின்வருமாறு:

(1) முதலாவது கட்டம்: 

லவ்ஹூல் மஹ்பூலில் பதியப்படல்.

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙفِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ 
(காஃபிர்கள் பேசிக் கொள்வது போல்) அன்றி;
இது லவ்ஹுல் மஹ்ஃபூளில் - (பதிவாகி) பாதுகாக்கப்பட்ட கீர்த்திமிகு குர்ஆனாகும். ( அல்புறூஜ்: 21,22)

(2) இரண்டாவது கட்டம்:

லவ்ஹூல் மஹ்பூலில் இருந்து முதலாவது வானத்தில் உள்ள பைத்துல் இஸ்ஸாவிற்கு ஒட்டு மொத்த குர்ஆனும் இறக்கப்படல்.

(إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ)
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) (என்ற ஓர்) இரவில் இறக்கிவைத்தோம்.(அல்கத்ர்:1)

மற்றொரு வசனத்தில் 

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏. 
 நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கவைத்தோம் ( அத்துக்கான்:43), 
என்றும், மற்றொரு வசனம் ரமளான் மாதத்தில் என்றும்  குறிப்பிடுகின்றன. 

(3) மூன்றாவது கட்டம்: 

இறைத் தூதரின் 40 -63 வரையிலான 23 வருட கால நபித்துவ காலங்களில் நிலைமைகளுக்கு ஏற்ப இறக்கியருளப்பட்டது.

அது 114 அத்தியாயங்களாகவும், வசனங்கள்  சேர்ந்து பிரிந்த வித்தியாசங்களைக் கவனித்து 6666/  6236 / 6348 என்றும் சுட்டிக் காட்டப்படி இருப்பதுடன்,
 العلق அல்அலக் அத்தியாயத்தின் ஐந்து முதல் வசனங்கள் முதன் முதலாக இறங்கியவை என்றும், 

அதன் இறுதி வசனம் அல்பகரா அத்தியாயத்தின் 
 وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ (281)
நீங்கள் அல்லாஹ்வின் பக்கமாக மீட்டப்படும் ஒரு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் தான் சம்பாதித்தற்கான (கூலி) முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.(281)  
என்ற 281 வது வசனம் என்றும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

மேற்படி திருமறையைக் குர்ஆனின் பல நூறு சிறப்புக்கள் நம்மை அதனைப் படித்துணரவும், தொடர்ந்து பாராயணம் செய்து இறைவன் தரும் அந்தஸ்தை மறுமையில் பெறவும், அதன் பொருள் உணர்ந்து ஓதி அதன் லட்சக்கணக்கான நன்மைகளைப் பெறவும் அது நம்மைத் தூண்டுகின்றன.


புனித குர்ஆனை சைத் பின் ஸாபித் ரழி தலைமையில் ஒன்று சேர்த்தவர் நமது  முதல் கலீஃபாவே.
رضي الله عنه وعن أصحاب نبيه صلى الله عليه وسلم. 

சுன்னா வழி நடக்கும் முஸ்லிம்களின் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் நமது பாசமிகு இறைத் தூதரின் வஃபாத்தின் பின்னால் ஸஹாபா பெருமக்களால் முதல் கலீஃபாவாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

கலீஃபாவின் காலத்தில் நடைபெற்ற, பிரசித்திபெற்ற  யமாமா போரில் பல ஹாபிழ்கள் ஷஹீதானார்கள்.

மீதமானோர் ஷஹீதாகி விட்டால் மனனம் செய்த குர்ஆனிய வசனங்களும் காணாமல் போய்விடும் என்பதை அஞ்சிய கலீஃபா அவர்கள் இஸ்திகாரா செய்து முக்கிய பணியாக குர்ஆனை 
அன்ஸாரிய இளைஞர்களில் ஒருவரும், 
மதீனா முஃப்திகளில் ஒருவரும், 
வஹி எழுதியவர்களில் ஒருவருமான 
زيد بن ثابت بن الضخاك الأنصاري رضي الله عنه 
 சைத் பின் ஸாபித் பின் அழ்ழஹ்ஹாக் அல்அன்ஸாரீ (ரழி) அவர்களின் நேரடித் தலைமையில் ஒன்று சேர்ப்பது தொடர்பாக உமர் ரழியோடு ஆலோசனை நடத்தி இறுதியில் அந்த கருத்தை அவர்களும் சரி கண்டதும் சைத் ரழியை அழைத்த கலீஃபா அவர்கள் மிகப் பெரிய பணியை சுமத்திடும் முன் உமர் (ரழி) அவர்களும் அங்கு அமர்ந்திருந்த வேளை,
فَقالَ أبو بَكْرٍ: إنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، ولَا نَتَّهِمُكَ، كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ. فَوَاللَّهِ لو كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ ما كانَ أثْقَلَ عَلَيَّ ممَّا أمَرَنِي به مِن جَمْعِ القُرْآنِ، 

சைத்! நீ புத்தி கூர்மையான மதி நுட்பமான ஒரு இளைஞன். உன்னை நாம் சந்தேகமாக பார்க்கவும்  மாட்டோம். பார்ப்பதுமில்லை. 

நீ இறைத் தூதர்  (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியை(வஹியை) எழுதுபவனாக இருந்தாய். எனவே நீ குர்ஆனிய வசனங்களை (எழுதியவர்வர்களிடம் தேடி) ஒன்று அதனை (ஒரு -முஸ்ஹஃப்- ஏட்டில்) சேர்ப்பாயாக! எனக் கூறியதை கேட்டு அதிர்ந்து போது சைத் ரழி அவர்கள் :

அல்லாஹ்வின் மீ்து சத்தியமாக மலைகளில் ஒரு மலையைத்தான் நான் நகர்த்த அவர்கள் என்னை வேண்டிக் கொண்டாலும் செய்வேன். அதை விட குர்ஆனை ஒன்று சேர்ப்பது எனக்கு மிகவும் பாரமான ஒன்றாக இருந்தது எனக் கூறி விட்டு அவ்விருவரிடமும் :

قُلتُ: كيفَ تَفْعَلَانِ شيئًا لَمْ يَفْعَلْهُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم؟ فَقالَ أبو بَكْرٍ: هو واللَّهِ خَيْرٌ، فَلَمْ أزَلْ أُرَاجِعُهُ حتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ له صَدْرَ أبِي بَكْرٍ وعُمَرَ، 
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் செய்யாத ஒரு காரியத்தை நீங்கள் இருவரும் எப்படி செய்வீர்கள்?  எனக் கேட்டதோடு, கலீஃபா அவர்களை மீண்டும் மீண்டும் நான் வேண்டிக் கொள்ளவே
கலீஃபா அவர்கள் அது நல்ல பணிதான்  நீ ஒன்று சேர் எனக் கூறினார்கள். 
பின்னர், அபூபக்கர், உமர் (ரழி) ஆகிய இருவரின் இதயங்களை விரிவுபடுத்தியதைப் போல அல்லாஹ் இது விஷயமாக எனது இதயத்தையும் விரிவு படுத்தினான் எனக் குறிப்பிடும் சைத்(ரழி) அவர்கள்:
فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أجْمَعُهُ مِنَ الرِّقَاعِ والأكْتَافِ، والعُسُبِ وصُدُورِ الرِّجَالِ، 
தோல்கள்,  (நீளமான) எலும்புகள், ஈச்சம் ஓலைகள், மனித உள்ளங்களில்  இருந்து  என அனைத்து சாதனங்களில் இருந்தும் குர்ஆனைத் தேடி 
ஒன்று சேர்க்கும் பணியைத் தொடர்ந்தேன். 

حتَّى وجَدْتُ مِن سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مع خُزَيْمَةَ الأنْصَارِيِّ لَمْ أجِدْهُما مع أحَدٍ غيرِهِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إلى آخِرِهِمَا، وكَانَتِ الصُّحُفُ الَّتي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أبِي بَكْرٍ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بنْتِ عُمَرَ.

இறுதியில் "
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம்  வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்கள் (மீதுள்ள நன்மைகள் மீதே) அவர் பெரிதும் ஆசைப்படுகின்றார்; இன்னும், அவர் முஃமின்களோடு  மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்" என்ற அத்தவ்பா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்கள்  குஸைமா பின் ஸாபித் அல்அன்ஸாரியிடம்  காணப்பட்டன. அவை அவரல்லாத வேறு யாரிடமும் இருக்கவில்லை, அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்டவைகள் பல ஏடுகளைக் கொண்டதாக கலீபாவின் நேரடி கண்காணிப்பிலும்  அவர்களின் வஃபாத்தின் பின்னால் உமர் ரழி இடமும் பின்னர், ஹஃப்ஸா ரழியிடமும் அவை காணப்பட்டன எனக் குறிப்பிடுகின்றார்கள்.
الراوي : زيد بن ثابت | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم: 4679 | 

அறிவிப்பாளர்: சைத் பின் ஸாபித் ரழி, நூல் புகாரி.

தெளிவு:

(1) இறைத் தூதர் காலத்தில் இல்லாததை செய்தார்களே. அது பித்ஆ தானே எனக் குறுக்கால் சிலர் கூறுவர்.

தெளிவு : ஒன்று சேர்க்காமல் பல எழுத்து  சாதனங்களில்  எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களையே  முஸ்ஹஃப் வடிவத்தில் ஒன்று சேர்த்தார்களே அன்றி, குர்ஆனைப்  புதிதாக உண்டாக்கவில்லை. அத்துடன், இது பித்ஆ சார்ந்த பணியும் கிடையாது.

(2) நாம் ஓதும் குர்ஆனிய வசனங்களில் ஒரு எழுத்துக் கூட விடுபடாமல் மிகத் துல்லியமாக சேர்க்கப்பட்டவையாகும். 
அவற்றில் அஹ்லுல் பைத்தினரின் பெயர்கள், அலி ரழியின் பெயர்கள் விடுபட்டன, திட்டமிட்ட வகையில் நீக்கப்பட்டன என்பதெல்லாம் அபாண்டமான? பொய்யான ஷீஆ மதச் சார்பான கற்பனை வாதமாகும் .

(3) முஸ்லிம் தலைவர் ஒருவரிடம் தனது பொறுப்புக்கள் யாவை? அவற்றில்  தன்னால் சுமக்க முடியாதவைகளை சுமக்கத் தகுதி பெற்றவர் யார்? என்ற அறிவுப் #பின்பின்புலம் இருப்பது  முக்கியமானதாகும்.

(04) அல்குர்ஆனை சிதைந்தோ, சிதறியோ விடாது முதன் முதலில் முதலாவதாக ஏடுகளில் ஒன்று நமது  சேர்த்தவர் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் அவர்களே! 

(05) அன்ஸாரிகளில்  ஒருவரான சைத் (ரழி) அவர்கள் மதீனாவில் அதி சிறந்த அறிஞர், ஃபத்வா மார்க்க தீர்ப்பு தகுதி பெற்ற முக்கிய ஆறு ஸஹாபாக்களில் தலை சிறந்த முஃப்திகளில் ஒரு முஃப்தியும், அதி திறமையான இளமையான அறிஞருமாகும். 

ஆஹா! இவ்வளவு அழகாகவே இந்த புனித குர்ஆனைத் தந்து விட்டு மரணித்து விட்டாரே அந்த சைத்.

உண்மையில் இறைப் பாக்கியம் பெற்ற இந்த சைத் (ரழி) அவர்களை குர்ஆனை ஓதும் போதெல்லாம் நினைக்கும் போது கண்கள் குளமாகின்றன .

அந்த சைத் (ரழி) எத்தனை கோடி நன்மைகளைத்தான் அதை இறக்கி வைத்த அர்ஷின் இரட்சகனிடம் பெற்றாரோ! யா அல்லாஹ்!

இறை வேதம் படித்து இன்பம் அடைவோம்,  மன நிம்மதி பெறுவோம்.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி.
أحدث أقدم