அல்லாஹ் மனிதனுக்கு எத்த னையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவை களில் மிக முக்கியமானது பேசும் நாவா கும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப் பாகக் கூறலாம். நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய கார ணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.
மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை, சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் “சிறப்பிடத்தைப்” பெற்று விடுகிறார்கள்.
சிலர் இதே நாவை முறை யற்ற வழியில் பயன்படுத்தி “மனிதர் களில் தரம் தாழ்ந்தவர்கள்” பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப் பட்ட நாவைப்பற்றி திருக்குர்ஆனும், நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான்.
(எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்து களை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோப த்திற்குரிய விஷயங்களை அதன் தீங்கு களை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ் கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்ப தில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(நாளை மறுமையில்) மனிதர்களை முகக் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதி)
அரைகுறை ஞானமுள்ள எந்த விஷ யத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற் றிற்குரிய தண்டனை வழங்கப்படும். (அல்-ஹதீஸ்)
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த் தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத் திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவன மாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.