குர்ஆன் பேசும் நபிமார்களின் தவ்பா

புனித குர்ஆன் பல்வேறுபட்ட செய்திகளைப் பேசி இருப்பதைப் போல நபிமார்களின் வாழ்வியல், பிரச்சாரம், சோதனை, தவ்பா இஸ்திக்பார் தொடர்பாகவும்  பேசி இருப்பதால் அவர்களின் தவ்பா அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதப் புனிதர்கள் என்பதை அவற்றின் ஊடாக நமக்கு நிரூபித்துள்ளது.

அந்த வகையில் ஆதம் நபி, மூஸா நபி, யூனுஸ் நபி, முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றும் பல நபிமார்கள், நல்லடியார்களின் தவ்பாக்கள் அவர்கள் வாழ்வில் எதிர் கொண்ட சில நிகழ்வுகளின் பின்னணியில்  விளக்கி இருக்கின்றது.

அவை பற்றிய தெளிவை இங்கு  நோக்குவதுடன், நாமும்  அல்லாஹ்விடம் நேரடியாக பாவமன்னிப்புக் கோரி அவனை நெருங்க வழிவகுக்கும் என்ற காரணத்தை முன்வைத்து இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

ஆதம் நபி عليه السلام சுவனத்தில் தவறு செய்த போது

ஆதம் நபியின் வலாற்றுடன் அவர்களின் தவ்பா பற்றிய செய்திகளும் இடம் பெறுவதை அவதானிக்க முடியும். 

அல்பகரா, அஃராஃப், தாஹா, ஸாத் போன்ற அத்தியாயங்களில் இது பற்றிய தெளிவைக் காண முடியும்.

தாஹா அத்தியாயம் 115- 123  வரையிலான  வசனங்கள் அல்பகரா மற்றும் அஃராஃப் அத்தியாயங்களைப் போலவே நபி ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில்  குடியமர்த்தப்பட்டது முதல் மறதியாக  குறித்த மரத்தை நெருங்கியதன் விளைவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டது வரையான சரித்திரத்தின் ஊடாக அவர்களின் தவ்பாவைப்  பற்றிப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது . 

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى‌ۖ
 பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தில் நின்றும் புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாகின; அதனால் அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலைகளால்   அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார் {தாஹா:121 }.
என்ற அந்த நிகழ்வை ஆதம் நபி  
அதற்காக பாவமன்னிப்புக் கோரி மீண்டது பற்றியும் அதன் தொடரில் பின்வருமாறு விளக்கி உள்ளனது.

(فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ) (البقرة:37)
பின்னர் ஆதம் தனது இறட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு; ( அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) அதன் காரணமாக அவன்  மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனுமாவான்.( அல்பகரா-37).

அந்த வார்த்தைகள் என்னவென்பது பற்றி
பாவமன்னிப்பு கோரிய போது :
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 
 “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்து, எங்களுக்கு கிருபை செய்யாவில்லையானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.(அல்அஃராஃப் /23) என்பதாக குறிப்பிடுகின்றது.

தவ்பாவிற்கான பிரதிபலன் என்ன? என்பது பற்றி விளக்கும் போது;
ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى‏
பின்னர் அவரது இரட்சகன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான் (தாஹா: 122 )  என இடம் பெற்றுள்ளது .

#இதன் மூலம் தவறுக்காக வருந்தினார்கள். அவர்களின் பாவமன்னிப்புக்  கோரலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்பதை அறிய முடிகின்றது.

மூஸா நபி عليه السلام  அவர்களின் தவ்பா

மூஸா நபி عليه السلام அவர்கள் அல்லாஹ்வை தரிசிக்கச் சென்றுஅல்லாஹ்வுடன் திரاமறைவில் பேசினார்கள். நேரடியாக பேச வேண்டும் என்ற தனது விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்கவே அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான். இறுதியில் அவர்கள் அந்த கோரிக்கைக்காக பாவமன்னிப்புக்  கோரினார்கள் என குர்ஆன் விளக்குகின்றது.

وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌ ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ‏ (الأعراف /73 )
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்த போது, அவருடைய இரட்சகன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னை (நேரில்) பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் (இவ்வுலகில்) என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில்  நிலைத்திருக்குமானால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இரட்சகன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூள் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; 
நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (அல்அஃராஃப்/73).

அதாவது தான் முன்வைத்த கோரிக்கை பிழையானது. அதற்காக பாவமன்னிப்புக் ஙோரினார் என்பது பொருளாகும்.

இவ்வாறுதான் நபி யூனுஸ் மற்றும் முஹம்மது நபி போன்ற நபிமார்கள் மற்றும்  நல்லடியார்களின் தவ்பா/ இஸ்திஃபார் என்றும் புரிந்து குர்ஆனிய போதனையின் ஒழியில் தனிமையில் அல்லாஹ்விடம் நேரடியாக தவ்பாவை முன்வைத்து அவனிடம் இருந்து நகரவிடுலை பெறுவோமாக!

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post