உங்கள் மகள்களுக்கு சிறு வயதிலேயே நாணத்தின் (ஹயா) மதிப்பை கற்றுக்கொடுங்கள்

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. பெண்கள் கூடும் கூட்டங்களில், சிறுமிகள் மற்றும்
ஏழு வயதிற்குட்பட்ட இளஞ் சிறுமிகள், குட்டையான அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவதை அல்லது விசித்திரமான முடி வெட்டுதல், அல்லது ஆண்களுக்கான முடி வெட்டுதலைப் போன்று அவர்களிடம் பார்க்கிறோம். தாய்மார்களிடம் பேசி அவர்களுக்கு அறிவுரை கூற முயன்றால், குழந்தைகள் இன்னும் சிறியவர்கள்தானே என்று வாதிடுகின்றனர். குழந்தைகளின் ஆடை மற்றும் முடி வெட்டுதல் பற்றி நீங்கள் எங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம், அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் புரிவானாக.

அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது குழந்தைப் பருவத்தில் உள்ள விஷயங்களால் பாதிக்கப்படுகிறார் என்பதும், வளர்ந்த பிறகும் அவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. எனவே, நமது குழந்தைகளுக்கு ஏழு வயதாகும்போது தொழ ஏவவும், அவர்கள் பத்து வயதை அடையும் போது தொழாவிட்டால் அவர்களை (இலேசாக) அடிக்குமாறும் நபி(ஸல் (அவர்கள் கட்டளையிட்டார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் பழக்கப்பட்டு விடுவார்கள், குழந்தை அதற்கு பழக்கப்பட்ட விஷயத்தையே பின்பற்றும்.
ஒரு சிறுமி முழங்கால் வரை மட்டுமே இருக்கும் குட்டையான ஆடைகளையும், முழங்கை அல்லது தோள்பட்டை வரை மட்டுமே இருக்கும் குட்டையான கையுள்ள ஆடைகளையும் அணியப் பழகினால், அவள் அனைத்து வெட்கத்தையும் இழந்து, வளர்ந்த பிறகு இந்த ஆடைகளையே அணிய விரும்புவாள். தலைமுடிக்கும் இது பொருந்தும்; ஒரு பெண்ணின் தலைமுடித் தோற்றம் ஆண்களின் முடியின் தோற்றத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்.; அவள் முடியை ஒரு ஆணின் முடியைப் போல செய்தால், அவள் ஆண்களைப் போலவே இருப்பாள், மேலும் ஆண்களைப் போன்று சித்தரிக்கும் பெண்களை நபி அவர்கள் சபித்தார்கள்.

நபி (ஸல் )அவர்கள் கூறியது போல், இந்த குழந்தைகள், அவர்களின் வளர்ப்பு மற்றும் கல்விக்கு குடும்பம் பொறுப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்: "ஒரு ஆண் தனது வீட்டினரின் மேய்ப்பன் மற்றும் அவனது மந்தைக்கு பொறுப்பு"(அல்-அதாப் அல்-முஃப்ரத். எண் 212, அல்-அல்பானியால் ஸஹீஹ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது) எனவே கவனக்குறைவாக இருப்பதிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்; தந்தை தனது மகன்கள் மற்றும் மகள்களை வளர்ப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும், மேலும் அவர் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்லாஹ் அவர்களை வழிநடத்துவான், மேலும் அவர்கள் அவருக்கு(தந்தைக்கு) இனிமையானவர்களாக இருப்பார்கள்.
 (அல்-லிகா'அஷ்-ஷஹ்ரி,66/10]


Previous Post Next Post