இஸ்லாத்தில் பெண்களின் சிறப்புகள்

بسم الله الرحمن الرحيم


பெண்கள் மீதான மேற்கத்தியர்களின் குற்றச்சாட்டை முறியடிப்பதற்காக அவர்களுக்கு பதிலளிக்கும் போது ''இஸ்லாம் சமத்துவத்தின் மார்க்கம்" என்று சில முஸ்லீம்களே பதிலளிக்கிறார்கள். இது தவறான கருத்தாகும். இது குர்ஆனின் தீர்ப்புக்கு முரணானது.

وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ ۖ 
“ஆண், பெண்ணைப் போன்று அல்ல!

சரியாக சொல்வதானால்

الإسلام دين العدل 
"இஸ்லாம் நீதியின் மார்க்கம்"'

இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையையும், அவரவருக்குப் பொருத்தமானதையும் கொடுத்துள்ளது. இதுவே நீதியாகும்.

 بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍۢ 
அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் சிறப்பித்திருப்பது இதற்குக் காரணமாகும். (அல் குர்ஆன் 4:34)

எனவே நீதத்திற்கும் சமத்துவத்திற்கும் வித்தியாசம் உண்டு.. அவ்வாறாக நிதமான முறையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிருக்கும் சிறப்புக்களைநும் உரிமைகளையும் சுருக்கமாக பார்ப்போம்

குழந்தை - பருமடைந்த பெண் - மனைவி - தாய் - முதியடைந்த பெண் என ஒரு பெண்ணின் எல்லா படித்தரத்தை குறித்தும் இஸ்லாம் போதித்துள்ளது. 

பெண்குழந்தை வரவு ஓர்  நற்செய்தி: 

(மக்களில்) அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட/கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). (திருக்குர்ஆன் 16:58) 

மேற்படி வசனத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிறபோது அது ஒரு நற்செய்தி என்கிறான் அவளைப் படைத்தவன்! பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், இறைவன் அதை நற்செய்தி என்று சொல்வானா? 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். (ஆதாரநூல்: முஸ்லிம் 5127.) 

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புஹாரி 5995) 

பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! 

வளர்ந்து பெண்களான அவர்கள், திருமணம் ஆணவர்களோ அல்லது திருமணம் ஆகாதவர்களோ அவர்களுக்கு உள்ள உரிமையை இஸ்லாம் வழங்குகிறது. 

1. சொத்துக்களை தன்னகத்தே வைத்துக் கொள்ளவோ அல்லது விற்கவோ (தந்தை கணவர் அல்லது அவரது பொறுப்பாளர் எவரது தலையீடும் இல்லாமல்) உள்ள உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. 

2. தனக்குக் கிடைக்கும் வருமானத்தை தனது விருப்பப்படி செலவிடவும் வருமானத்தைக் கொண்டு அவர் விரும்பியதை வாங்கவோ நன்கொடையாகவோ அல்லது தர்மமாக வழங்கவோ உள்ள உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. 

3. மேலும் திருமணம் முடிக்கும்போது மணப்பெண்ணுக்கு மணமகன் மணக்கொடையாக மணமகள் விரும்பியதை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமாகும். அதனை திருப்பி வாங்கவோ அல்லது அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை கேட்கவோ உள்ள உரிமை கணவருக்கு இல்லை. 

4. மேலும் திருமணம் முடிக்கப்பட்ட பெண் தனது குடும்ப பெயரையே தன்னுடைய பெயராக வைத்துக் கொள்ளும் உரிமையையும் (திருமணம் முடித்த பெண் தனது கணவரது பெயரையே தனது பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை உள்ள சமுதாயங்களுக்கு மத்தியில்) இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. 

5. தனது மனைவியை சிறந்த முறையில் பேணப் பாதுக்காக்க வேண்டும் என இஸ்லாம் ஆண்களை வலியுறுத்துகிறது. 

''மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர்"" என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: இப்னுமாஜா - ஹதீஸ் எண்: 1978 திர்மிதீ – ஹதீஸ் எண்: 3895). 

6.பெற்றோரை குறிப்பாக அன்னையரை அதிகமாக கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம். அவர்களை மிகச் சிறந்த முறையில் பரிபாலிக்க பரிந்துரைக்கிறது இஸ்லாம். 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! உறவுகளில் அதிகம் போற்றத்தக்கவர் யார்? என வினவினார். ''உங்களது தாய்"" என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?"" என அந்த மனிதர் வினவினார். ''உங்களது தாய்"" என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?"" என மேலும் அந்த மனிதர் வினவினார். ''உங்களது தாய்"" என மீண்டும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?"" என மேலும் அந்த மனிதர் வினவினார். ''உங்களது தந்தை"" என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 2548 புகாரி - ஹதீஸ் எண்: 5971). 

இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளோ ஏராளம். அதனை விளக்கமாக கூறினால் பதிவு நீண்டுக்கொண்டே போகும் என்கிற பட்சத்தில் சுருக்கமாக கீழே சிலவற்றை ஆதாரத்துடன் தருகிறோம். 

1. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228) 

2. பொருள் திரட்டும் உரிமை.(திருக்குர்ஆன் 4:32) 

3. கல்வி கற்றல் கற்பித்தல். (திருக்குர்ஆன் 9:71) 

4. சொத்துரிமை (திருக்குர்ஆன் 4:7) 

5. மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை. (திருக்குர்ஆன் 4:19) 

6. மணப்பெணுக்காக திருமணக் கொடை (மஹர்) (திருக்குர்ஆன் 4:4) 

7. மறுமணம் செய்யும் உரிமை.(திருக்குர்ஆன் 2:232) 

8. விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.(திருக்குர்ஆன் 2:241) 

9. பிரியும் உரிமை. (திருக்குர்ஆன் 2:231) 

10. ஆன்மீக ஈடுபாட்டிலும் ஆணும் பெண்ணும் சமம். (திருக்குர்ஆன் 3:195)
Previous Post Next Post