ஹேலோவீன் பண்டிகை என்றால் என்ன?
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும்.
இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.
இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
//மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது//
ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
பார்க்க:
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் மேற்குறித்த பண்டிகை இம்முறை (2022) சவுதி அரேபியாவின் றியாத் நகரில் படு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ காட்சிகளை கீழ்காணும் இணைப்புகளில் சென்று பார்க்க முடியும்.
https://youtu.be/de4S_w17_gU
https://youtu.be/YqBVmE5_QQ0
https://youtu.be/CEtf3fjyOhs
சவுதியின் இச்செயல் மார்க்க ரீதியாக பிழையானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். ஓர் உண்மை முஸ்லிம் ஒருபோதும் இதனை சரிகாணப் போவதில்லை.
அதேசமயம் இது ஆச்சரியப்படும் ஒரு விடயமுமல்ல!
//"இஸ்லாம் அந்நியமாகவே ஆரம்பித்தது. மீண்டும் அதே நிலைக்கு அது மாறும்",
"சாணுக்குச் சாண் பிற சமுதாய வழிமுறைகளை இந்த உம்மத் பின்பற்றுவார்கள்",
"இந்த உம்மத் விக்கிரக ஆராதனையில் வீழாத வரை மறுமை வராது"//
போன்ற கருத்தில் அமைந்த இறைதூதரின் முன்னறிவிப்புக்களை அறிந்த ஒருவர் சவுதி உட்பட அரபு தேசங்களில் அரங்கேறும் மார்க்க முறணாண செயல்களையிட்டு அதிர்ந்து போகவோ, ஆச்சரியப்படவோ தேவையில்லை.
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நிலைநிறுத்தும் ஆதாரங்களாகவே ஒரு முஃமின் இது போன்ற நிகழ்வுகளை எடுத்துக் கொள்வான்.
இஸ்லாத்தின் மூலாதாரங்கள் சவுதியோ, துருக்கியோ, எகிப்தோ, அல்லது ஏனைய ஏதோ ஒரு தேசமோ, தனிமனிதர்களோ அல்ல! திருமறைக்குர்ஆனும், இறைதூதர் (ஸல்) அவர்களின் அஸ்ஸூன்னாவும் மாத்திரமே! இதுவே ஒரு முஃமினின் அசைக்க முடியாத கொள்கையாக அமைதல் வேண்டும்.
இதுபோன்ற வழிகேடுகளை கடந்து போகும் போது நாம் செய்ய வேண்டியது
//உள்ளங்களைப் புறட்டுபவனே! எனது உள்ளத்தை உனது சத்திய மார்க்கத்தில் நிலைப்படுத்திவிடு!//
என்ற பிரார்த்தனையை அதிகமதிகம் கேட்பது ஒன்றுதான்.