உலூமுல் குர்ஆன் (குர்ஆனியக் கலைகள்)

*உலூமுல் குர்ஆன்*علوم القرآن 
(குர்ஆனியக் கலைகள்)

உலூமுல் குர்ஆன் என்ற இந்த வார்த்தையை அல்குர்ஆனின் கலைகள் / கல்விகள் என்று நேரடி மொழிபெயர்ப்புச் செய்யலாம்.

இவ்வார்த்தை இரண்டு சொற்களைக் கொண்டது. முதல் சொல் உலூம் என்பதாகும். இரண்டாவது சொல் அல்-குர்ஆன் என்பதாகும்.

உலூம் என்பது இல்ம் எனும் ஏதாவது ஒரு கலையை / கல்வியைக் குறிக்கும் சொல்லின் பன்மைச் சொல்லாகும்.

அல்-குர்ஆன் என்பதன் மொழி ரீதியான அடிப்படை அர்த்தம்: வாசித்தல், ஓதுதல் என்பதைக் குறிக்கும். அதேபோன்று இந்தச் சொல் வாசிக்கப்படக்கூடியதை / ஓதப்படக் கூடியக்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அல்-குர்ஆன் என்பதன் இஸ்லாமிய மார்க்க வழக்கிலான அர்த்தம் யாதனில்: நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட, ஓதுவது வணக்கமாக இருக்கின்ற அல்லாஹுவின் வார்த்தையாகும்.

உலூமுல் குர்ஆன் (அல்குர்ஆனின் கலைகள்-கல்விகள்) என்ற வார்த்தையின் கலைரீதியான அர்த்தமானது:  குர்ஆனுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கலைகளை-கல்விகளை உள்ளடக்கிய ஒரு கலையாகும்.  

அதாவது இந்தக் கலையானது அல்-குர்ஆனை அதனுடன் சம்மந்தப்பட்ட ஆறு பகுதிகளுடன்  சம்மந்தப்படுத்தி ஆராய்கின்றது. அவை:
1- நுஸூலுல் குர்ஆன் எனும் குர்ஆனின் இறங்குதல். 
2- ஜம்உல் குர்ஆன் எனும் குர்ஆனை ஒன்று திரட்டுதல், தொகுத்தல். 
3- கஸாஇஸுல் குர்ஆன் எனும் குர்ஆனின் தனித்துவங்கள்.
4- ஹுகூகுல் குர்ஆன் எனும் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
5- கிறாஅதுல் குர்ஆன் எனும் குர்ஆனின் ஓதல்.
6- தப்ஸீருல் குர்ஆன் எனும் குர்ஆனின் விளக்கம்.
இவை ஒவ்வொன்றுக்கும் கீழால் பல பிரிவுகள் காணப்படுகின்றன.
அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

1- *நுஸூலுல் குர்ஆன் எனும் குர்ஆனின் இறங்குதல்* என்ற பகுதிக்குள் அடங்குபவை: 
A- வஹீ இறைச்செய்தி
B- குர்ஆன் இறக்கப்பட்ட முறை 
C- குர்ஆனில் முதலாவதாக இறக்கப்பட்டது மற்றும் இறுதியாக இறக்கப்பட்டது
D- மக்கீ, மதனீ 
E- அஸ்பாபுன் நுஸூல் எனும் குர்ஆன் ஆயத்கள் இறங்கியதற்கான பின்னணிகள்

2- *ஜம்உல் குர்ஆன் எனும் குர்ஆனை ஒன்று திரட்டுதல், தொகுத்தல்* என்ற பகுதிக்குள் அடங்குபவை:
A- அல்குர்ஆனை ஒன்று திரட்டுதல், பாதுகாத்தல், தொகுத்தல்
B- அல்குர்ஆனின் ஸூறஹ்களினதும் ஆயத்களினதும் ஒழுங்கு, வரிசை அமைப்பு
C- ஸூறஹ்கள், ஆயத்கள், ஜுஸ்ஃகள் போன்ற பிரிவுகளின் எண்ணிக்கைகள்
D-  றஸ்முல் முஸ்ஹஃப் எனும் குர்ஆனிய எழுத்துக் கலை
E- ளப்துல் முஸ்ஹஃப் எனும் எழுத்துக்களை வித்தியாசப்படுத்துவதற்காக அடையாளங்களைப் பயன்படுத்தும் முறை

3- *கஸாஇஸுல் குர்ஆன் எனும் குர்ஆனின் தனித்துவங்கள்* என்ற பகுதிக்குள் அடங்குபவை:
A- அல்குர்ஆனின் பெயர்களும் அதன் ஸூறஹ்களின் பெயர்களும்
B- அல்குர்ஆனின் சிறப்புகள் 
C- அல்குர்ஆனின் அற்புதத் தன்மை

4- *ஹுகூகுல் குர்ஆன் எனும் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்* என்ற பகுதிக்குள் அடங்குபவை: 
A-  அல்குர்ஆனைச் சிந்தித்தல்
B- அல்குர்ஆனுக்கு எதிரான வாதங்களை முறியடித்தல்

5- *கிறாஅதுல் குர்ஆன் எனும் குர்ஆனின் ஓதல்* என்ற பகுதிக்குள் அடங்குபவை: 
A- அல்அஹ்றுஃபுஸ் ஸப்அஹ் எனும் ஏழு ஓதல் வகைகள்
B- இல்முல் கிறாஆத் எனும் அல்குர்ஆனின் வார்த்தைகளைப் பல்வேறு விதத்தில் ஓதும் கலை
C- இல்முத் தஜ்வீத் எனும் ஒவ்வொரு எழுத்தையும் எந்த இடத்தில் இருந்து, எந்த அமைப்பில் வெளிப்படுத்த வேண்டும் என்ற கலை
D- இல்முல் வக்ஃப் வல்இப்திதாஃ எனும் குர்ஆனை ஓதக்கூடியவர் எந்த இடங்களில் நிறுத்துவது பொருத்தமானது, எந்த இடங்களில் நிறுத்துவது பொருத்தமற்றது, எந்த இடங்களில் ஆரம்பிப்பது பொருத்தமானது, எந்த இடங்களில் ஆரம்பிப்பது பொருத்தமற்றது ஆகியவற்றைப் பற்றிய கலை
E- அல்குர்ஆன் ஓதுவதின் ஒழுக்கங்கள்

6- *தப்ஸீருல் குர்ஆன் எனும் குர்ஆனின் விளக்கம்* என்ற பகுதிக்குள் அடங்குபவை: 
இதனுடன் சம்பந்தப்பட்ட கலைகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். 
1- தப்ஸீர் அதாவது அல்குர்ஆன் விளக்கவுரையுடன் சம்பந்தப்பட்ட  கலைகள்:
A- தப்ஸீர் - குர்ஆன் விளக்கக் கலை
B- உஸூலுத் தப்ஸீர்
C- மனாஹிஜுல் முபஸ்ஸிரீன் 
D- அஹ்காமுல் குர்ஆன்
E- அன்னாஸிخக் வல் மன்ஸூخக் ஃபில் குர்ஆன் 
F- முதஷாபிஹுல் குர்ஆன்
G- முஷ்கிலுல் குர்ஆன் 
H- முبப்ஹமாதுல் குர்ஆன் 
I- அல்முனாஸபாது ஃபில் குர்ஆன் 
J- தர்ஜமதுல் குர்ஆன்

2- அல்குர்ஆனின் மொழியுடனும் அதன் நடையுடனும் சம்பந்தப்பட்ட கலைகள்:
A- غகரீபுல் குர்ஆன்
B- அல்வுஜூஹு வன்னளாஇர்
C- அல்முஅர்ரபு ஃபில் குர்ஆன் 
D- இஃறாபுல் குர்ஆன்
E- பலாغகதுல் குர்ஆன்
F- தலாலாது அல்ஃபாளில் குர்ஆன் 
G- அக்ஸாமுல் குர்ஆன்
H- அம்ஸாலுல் குர்ஆன்
I- கிஸஸுல் குர்ஆன்
J- அல்ஜதலு ஃபில் குர்ஆன்

Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy                            
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp
أحدث أقدم