நன்மை செய்வதிலும் தீமை செய்வதிலும் ஒரு நபரை பின்பற்றும் பொழுது நன்மையும் தீமையும் ஒருசேர வந்து சேருகிறது.
நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்
யார் இஸ்லாத்தில் நற்கருமத்தை புரிகின்றாரோ , அவரை பின்தொடர்ந்து இந்த நற்கருமத்தை செய்பவர்களுக்கும் எந்த குறையுமின்றி நன்மைகள் கிடைக்கும்,
யார் தீமையான ஒரு காரியத்தை செய்கின்றாரோ அவரை பின்தொடர்ந்து அந்த தீமையான காரியத்தை செய்பவர்களுக்கும் எந்த குறையுமின்றி அந்த தீமைகளில் அவர்களுக்கும் (பங்கு) இருக்கிறது.
நூல் - முஸ்லிம்- 2/704
ஹதீஸ் எண்-1017-
பிறரைப் பார்த்து நன்மையான காரியங்களை செய்வதிலும் தவறான வழிமுறைகளை தவிர்ந்து கொள்வதையும் பின்பற்றும் மக்களும் இருக்கின்றனர்,
குறிப்பாக நெருங்கிய நண்பர்கள் செய்யும் விடயத்தை அவர்களும் அவ்வாறே பின்பற்றுவார்கள் மக்கள் எல்லாரும் பூமியின் துவாரத்தில் வசிக்கும் பாலைவனப் புறாவுக்கு ஒப்பானவர்கள் ஒருவர் மற்றொருவரை (செம்மறி ஆடுகளைப் போன்று) அப்படியே பின்பற்றுவதை தங்களின் இயற்கை குணமாகக் கொண்டிருக்கிறார்கள்.
நூல்- அல்இஸ்திகாமா - ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா -2/255