3,40 ம் நாள் கத்தம் பாத்திஹா

- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

வாட்ஸ்அப் தளங்களில் கீழ்காணும் செய்தி பரவுவதை அடியேன் கண்டேன் அதற்கு நமது விளக்கமும் & மறுப்பும் ....

மய்யித்தை அடக்கிய அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதைத் தொடர்ந்துள்ள 3,5,7,15,20,30,40 ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் மற்றும் வருஷக் கத்தம் ஓதுவதற்கும் ஏதேனும் ஆதாரம் உண்டா?

​​3ம் நாள் கத்தம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்'லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி மூன்றாம் நாள் அன்று அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழம், பால், தொலிக் கோதுமையால் ஆன ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். 

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஒருவிடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹது சூரா 3 விடுத்தம் ஓதி கையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இதை மக்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

​​நூல்: பதாவா அர்வஹன்தி தஸ்ஹீஹுல் அகாயித் பக்கம் 128


40 ம் நாள் பாத்திஹா:

மேற்கூறப்பட்ட ஹதீஸைப் போன்றே இறந்தவர்கள் 40 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதனால் அந்த நாட்களில் அவர்களுக்காக உணவு கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்புவதாகவும் இதன் நிமித்தம் ஸஹாபாக்கள் காலத்திலும் இந்த முறை இருந்து வந்ததாகவும் பிக்ஸுன்னா 369ம் பக்கத்திலும், அல் மிர்ஆத் 584 வது பக்கத்திலும் வந்துள்ளது. 

எனவேதான் அந்த 40 நாட்களுக்கும் உணவு கொடுப்பது சிரமமாகும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட நாட்களை அதாவது 1, 3, 5, 7, 10, 20, 30, 40 என்றோ அல்லது 1, 3, 5, 7, 10, 15, 25, 40 என்றோ இமாம்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமாக.

வருட பாத்திஹா:

இறந்த மய்யித்தின் ஆன்மா வருடா வருடம் தன் இல்லத்திற்கு வருகை தருகிறது என்று 'தகாயிகுல் அக்பார்' போன்ற கிரந்தங்களில் (நாம் சற்று முன்பு குறிப்பிட்டுள்ளது போல) வந்துள்ளதாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருடந்தோறும் ஷுஹதாக்களின் கப்ருகளுக்கு சென்று துஆ செய்து விட்டு வருதாக தப்ரானி இமாம் அவர்களுக்குரிய அவ்ஸத் என்ற ஹீது கிதாபில் (பாகம் 3 பக்கம் 241) வந்துள்ளதாலும்,

வருடாவருடம் மய்யித்தின் பேரில் ஸதக்காவாக செய்யப்படுகின்ற விருந்துபச்சார வைபவம்(கத்தம்) முற்காலம் தொட்டு செய்யப்பட்டு வருகின்ற காரியமாகவும், அதன் நோக்கம் மார்க்க அறிஞர்களையும் மற்றவர்களையும் அழைத்து மய்யித்தின் பேரில் கிருபை கொண்டு பிரார்த்திக் வைப்பதாகவும் இருப்பதால், இது ஒரு நல்ல காரியம் என்று மகான்களாகிய நமது முன்னோர்களின் தெளிவான மார்க்கத் தீர்ப்பு இருப்பதாலும் (அல்மிஆத் பாகம் 4 பக்கம் 585) வருடபாத்திஹா அனுஷ்டிக்கப்படுகிறது.
S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை பதிவிலிருந்து...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமது விளக்கம் ......

இங்கு பதிவிடப்பட்டிருக்கும் அனைத்து ஆதாரங்களும் ஆதாரமற்றவைகள் மிக பலஹீனமான
அறிவிப்புகள் கொண்டவைகள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரியங்களுக்கு சொல்லப்பட்டிருப்பவைகள்,

இன்று மார்க்க பெயரில் பல நூதன அனாச்சாரங்கள் நமது சமூகத்தில் வலம் வருகின்றன, அன்றைய காலத்தைப் போன்று இன்றைய இளைய சமூகம் வாய்மூடி சொல்வதை கேட்டு செல்பவர்கள் அல்லர் ,

குர்ஆன் ஸுன்னாவிலிருந்து ஆதாரங்களை கேட்கிறார்கள் என்பதினால் சிலர் மிக புத்திசாலித்தனமாக சம்பந்தமே இல்லாமல் தாங்கள் செய்கின்ற பித்அதான (இறைத்தூதர் ﷺ அவர்கள் வணக்க வழிபாடுகளில் காட்டித்தராத வழிமுறைகள்) காரியங்களுக்கு தவறான ஆதாரங்களை தந்து சமூகத்தை வழி கெடுக்கின்றனர்.

இந்தப்பதிவில் காணப்படுகிற அனைத்து ஆதாரங்களுமே மையத் வீட்டில் ஓதப்படுகின்ற ஃபாத்திஹா ,கதம் போன்ற பித்அத்களை நியாயப்படுத்தி அல்லாஹ்வை அஞ்சாமல் எழுதியிருக்கின்றனர்,

உதாரணமாக 

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மரணித்த வீட்டில் சொல்லிக்க்கொடுத்த வழிமுறை என்னவென்றால் கீழ்க்காணும் ஆதாரபூர்வமான நபி மொழியில் தெளிவாக இருக்கிறது அதாவது
தனது சிறிய தந்தை ஜாஃபர் பின் அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனாரின் மரண செய்தி கிடைத்த பொழுது...
ஜாஃபர் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவு தயாரித்துக் கொடுங்கள் அவர்களை கவலைக்குள் ஆக்கும்செய்தி வந்திருக்கிறது என்று கூறினார்கள்.
இந்த நபிமொழி திர்மதி, அபூதாவூத், இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் வந்திருக்கிறது.

இந்த நபிமொழி "ஹஸன் ",என்ற ஆதாரபூர்வமான தரத்தில் இருக்கிறது,

இந்த நபிமொழியிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் மையத் வீட்டினருக்கு அண்டை வீட்டார்கள் சமைத்து தர வேண்டுமே தவிர மையத்து வீட்டினர் சமைத்து கொடுப்பது என்பது நபிவழி அல்ல.

அவ்வாறு இருந்தால் நபியவர்கள் இவர்கள் கூறுவதைப் போன்ற கதம் ஃபாத்திஹாகள் ஓத சொல்லி இருப்பார்கள் அதை அவர்களின் தோழர்கள் பின்பற்றி இருப்பார்கள் சங்கையான நான்கு மத்ஹபின் இமாம்கள் ஏற்று இருப்பார்கள்(!!!)

ஹனஃபி மத்ஹபின் தலைசிறந்த இமாமான இப்னுல் ஹுமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான ஃபதஹுல் கதீரில் (2/142) 
இவ்வாறு கூறுகிறார்கள்...

மத்ஹபுகளின் இமாம்கள் மையத்து வீட்டினர் இவ்வாறு உணவு சமைத்து கொடுப்பது வெறுத்ததிருக்கிறார்கள், மரணித்த அன்றோ 4 வது நாள், 10 வது நாள்,40 வது நாளாக இருந்தாலும் உணவு அளிப்பது மார்க்கத்தில் இழிந்துரைக்கபட்டிருக்கிறது,

மகிழ்ச்சியான தருணங்களில் உணவு சமைத்துக் கொடுப்பது வரவேற்கப்பட்டு இருக்கிறது துக்க காலங்களில் செய்வது அறுவருக்கப்பட்ட ஒரு அனாச்சாரம் ஆகும்.

ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் நவவி அவர்கள் தங்களின் புத்தகமான "ரவ்ளதுத் தாலிபீனில் ",
(2/145) கீழ்காணும் தகவல்களை தருகிறார்கள்.....

மையத்து வீட்டினர் உணவு தயாரித்து மக்கள் அனைவரையும் அழைத்து வழங்குவது என்பது மார்க்கத்தில் சொல்லப்படாத விடயம், விருப்பமில்லாத முறையில் நிகழ்த்தப்படும் பித்அதாகும் (அனாச்சாரமாகும்)

இமாம் இவனுல் குதாமா அல்முகுனி என்ற தனது புத்தகத்தில் ( 3/497) இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்....
வெளியூரிலிருந்து ஜனாஸாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உறவினர்களுக்காக உணவு தயாரிப்பது இந்த அனாச்சாரத்தில் இடம்பெறாது, அது மரணித்த நபருக்காக வழங்கப்படும் உணவல்ல.

لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه لما بلغه موت ابن عمه جعفر بن أبي طالب رضي الله عنه في غزوة مؤتة قال : ( اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا ، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ ) رواه الترمذي (998) ، وحسنه ، وأبو داود (3132) ، وابن ماجه (1610) ، وحسنه ابن كثير ، والشيخ الألباني.

كره جمهور العلماء لأهل الميت أن يصنعوا طعاماً لتقديمه للناس ، سواء كان ذلك يوم الموت أو في اليوم الرابع أو العاشر أو الأربعين أو على رأس السنة ، فكل ذلك مذموم .
قال ابن الهمام الحنفي: " وَيُكْرَهُ اتِّخَاذُ الضِّيَافَةِ مِنْ الطَّعَامِ مِنْ أَهْلِ الْمَيِّتِ ؛ لِأَنَّهُ شُرِعَ فِي السُّرُورِ لَا فِي الشُّرُورِ، وَهِيَ بِدْعَةٌ مُسْتَقْبَحَةٌ ". انتهى من "فتح القدير" (2/142).

وقال النووي : " وَأَمَّا إِصْلَاحُ أَهْلِ الْمَيِّتِ طَعَامًا ، وَجَمْعُهُمُ النَّاسَ عَلَيْهِ ، فَلَمْ يُنْقَلْ فِيهِ شَيْءٌ ، وَهُوَ بِدْعَةٌ غَيْرُ مُسْتَحَبَّةٍ ". انتهى من "روضة الطالبين" (2/145).

يستثنى من الكراهة : صنع الطعام لمن ينزل بهم من الضيوف إذا كان صنعه على سبيل الإكرام ، لا بسبب الوفاة .
قال ابن قدامة : " وَإِنْ دَعَتْ الْحَاجَةُ إلَى ذَلِكَ جَازَ ؛ فَإِنَّهُ رُبَّمَا جَاءَهُمْ مَنْ يَحْضُرُ مَيِّتَهُمْ مِنْ الْقُرَى وَالْأَمَاكِنِ الْبَعِيدَةِ ، وَيَبِيتُ عِنْدَهُمْ ، وَلَا يُمْكِنُهُمْ إلَّا أَنْ يُضَيِّفُوهُ " انتهى من "المغني" (3/497).

ஆக சங்கையான இமாம்கள் சொல்ல வந்த கருத்தை மன இச்சையை பின்பற்றக்கூடிய மார்க்கமாக கருதக்கூடிய பரேல்விகள் ஏற்படுத்திய வழிகேடுகளே இந்த ஃபாத்திஹா ,மௌலிது போன்ற பித்அத்துகள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவான சிந்தனையை வழங்கி நேரான பாதையில் நடைபோட தௌபீக் செய்வானாக!!
أحدث أقدم