கல்வி என்பது கற்றுக்கொள்வது தான்

முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :-

 ஓ மக்களே !!  கல்வி என்பது, அறிஞர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதன் மூலமாக தான் கிடைக்கும். மார்க்க விளக்கம் என்பது (அறிஞர்) விளக்கப்படுத்துவதன் மூலமாகத் தான் விளக்கம் கிடைக்கும். யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தைக் கொடுப்பான். நிச்சயமாக அவனுடைய அடியார்களில் அல்லாஹ்வை பயந்து கொள்ளக் கூடியவர்கள் உலமாக்கள் தான்.
 الطبراني المعجم الكبير و الفقيه و المتفقه للخطيب البغدادي 

கல்வி என்பது புத்தகம் வாசிப்பதாலோ, வீடியோக்கள் பார்ப்பதாலோ கல்வி கிடைத்துவிடாது. மாறாக கல்வி என்பது கல்வியாளர்களிடம் அமர்ந்து கற்றுக் கொள்வதுதான். ஏன் நாம் அதை அழுத்தமாகச் சொல்கிறோம் என்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் إنما  என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதன் அர்த்தம் நிச்சயமாக அதுதான், அதை தவிர வேறு இல்லை என்பதாகும்.

அதுபோன்று மார்க்க விளக்கமும், கல்வியாளர்களிடம் அமர்ந்து விளங்க வேண்டும். நீங்கள் விளங்கியது சரிதானா என்று புரிய வேண்டும்.

 மார்க்கத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள், பிறகு அழைப்பு பணி செய்யலாம் என்று சொன்னால் அது சில இளைஞர்களுக்கு  கசப்பாக உள்ளது.

 இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அவருடைய புத்தகத்தில்,
 
                    العلم قبل القول و العمل
கல்வி என்பது, சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் கல்வி அவசியம் என்பதாக தலைப்பிட்டுள்ளார்கள்.

கல்வி இல்லாமல் அழைப்பு பணியில் ஈடுபடும் போது, சைத்தான் பிடியில் எவ்வாறு 
மாட்டப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.

 இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்:-
                                   تلبيس إبليس
என்ற புத்தகத்தில், இதுபோன்ற பிரச்சனைகளை விவரித்துள்ளார்கள்:-

அறியாமை என்பது ஒரு அழிவு...

அபூதர் (ரலியல்லாஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:-

 நீ ஆலிமாக இரு அல்லது கல்வி தேடும் மாணவனாக இரு அல்லது அவர்களிடமிருந்து செவிமடுப்பவனாக இரு. அதைத்தாண்டி நான்காவதாக (அறியாதவனாக) இருக்காதே, அது அழிவு தான்...
                               منهاج القاصدين 

இமாம் அஸ்ஜுஅபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
கல்வியறிவு இல்லாத வணக்கசாலியிடமிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.. منهاج القاصدين 

இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்,

அறியாமை என்பது, அறியாமையாக கல்வியாளர்களுக்கு தெரிவது போல, கல்வி என்பது அறியாமையாக கல்வியற்றவர்களுக்குத் தெரியும். 
                                     فيض القدير

தொகுப்பு : முகமது உவைஸ்
Previous Post Next Post