மினிஆன்ஸ்


மெதுவாக இருப்பினும் நிச்சயமாக ஒற்றைக்கண் உடையவனான தஜ்ஜாலை ஏற்றுக்கொள்வதற்கு நம் குழந்தைகளை அவர்கள் தயார்படுத்துகிறார்களா?

ஒற்றை கண் உடைய மினிஆன்ஸை கவனித்துள்ளீர்களா?

இன்னும் நிறைய ஒற்றை கண் உடைய ‘ப்ரியமான’ கார்ட்டூன் கதாபாத்திரங்களை கவனித்துள்ளீர்களா?

கட்டி தழுவக்கூடிய ஒற்றைக்கண் உடைய பொம்மைகளை நம் குழந்தைகளுக்கு வாங்கி தருவதின் மூலம் நாமே அவர்களை நரக நெருப்பிற்கு இழுத்து செல்லக்கூடும் என்பதை என்றாவது சிந்தித்துள்ளீர்களா?

ஒவ்வொரு விருந்தினர் கூடமும் மினிஆன்ஸை மையப்படுத்தியே உள்ளது. ஒவ்வொரு கேக்கும் ஒற்றை கண் மினிஆனை பெருமையாக தாங்கி உள்ளது. 

நம் குழந்தைகள் தஜ்ஜாலை விரும்ப, நம்பிக்கைக்கொள்ள மற்றும் ஏற்றுக்கொள்ள அவர்கள் கற்றுக்கொடுப்பதற்கு நாமே அவர்களுக்கு உதவி புரிகிறோம். 

உங்களில் சில பேருக்கு இது மிகவும் தீவிரமானாதாக தெரியலாம் ஆனால், இது தான் உண்மை.

தஜ்ஜால் கியாமத்/தீரப்பு நாளின் அத்தாட்சி. 
இந்த ஃபித்னாவிற்கு எதிரான சிந்தனையை நாம் பதிய வைக்க வேண்டும் மேலும் நம் குழந்தைகளின் மெல்லிய மனதில் இதை ஊக்குவிக்க கூடாது

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்துவானாக.  மினிஆன்ஸை குறித்து ஆராய்ச்சிகளில் பயமுறுத்தும் ஒரு செயல் என்னவென்றால், அந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு வசனம் அடிக்கடி சொல்லப்படுகிறது அது என்னவெனில், “தீயதாக இருப்பது நல்லதுதானே?!” 

உளவியல்ரீதியாக பார்த்தோமானால், ஒரு விஷயத்தை (நேர்மறை/எதிர்மறை) ஒரு நபருக்கு திரும்பதிரும்ப சொல்லுவதின் மூலம் அது அவருடைய ஆழ்மனதை தாக்கி அவர்கள் மனம் அதை உண்மை என நம்பும். பின்பு அது அவர்கள் ஆளுமையில் ஒரு பகுதியாக மாறிவிடும்! 

மினியான்ஸின் வார்த்தைகள் என்ன விளைவை உண்டாக்கும் என்பதை உங்களால் சிந்திக்க முடிகிறதா ? குறிப்பாக அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த வார்த்தைகளை நம் குழந்தைகள் திரும்பதிரும்ப கூறிக்கொண்டேயிருந்தால்!?

இது சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று….சிந்தித்து பாருங்கள்.
Previous Post Next Post