ஒரு அடியானுடைய அறிவு அதிகரிக்கும்பொழுது, அவனிடத்தில் பணிவும் கருணையும் அதிகரிக்கும்.
அவனுடைய இபாதத் (வழிபாடு) அதிகரிக்கும்பொழுது, அவனிடத்தில் பயமும் எச்சரிக்கை உணர்வும் அதிகரிக்கும்.
அவனுடைய வயது அதிகரிக்கும்பொழுது, அவனிடத்தில் பேராசை குறையும்.
அவனுடைய செல்வம் அதிகரிக்கும்பொழுது, அவனிடத்தில் பெருந்தன்மையும் செலவிடுதலும் அதிகரிக்கும்.
மேலும் அவனுடைய அந்தஸ்தும் நிலையும் அதிகரிக்கும்பொழுது, மக்களுடன் அவனுடைய நெருக்கம் அதிகரிக்கும். அவர்களுடன் கண்ணியமாக நடந்துகொண்டு அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுவான்.
மேலும் துன்பத்தின் அறிகுறிகளிலிருந்து..
ஒரு அடியானுடைய அறிவு அதிகரிக்கும்பொழுது, அவனுடைய பெருமையும் கர்வமும் அதிகரிக்கும்.
அவனுடைய இபாதத் (வழிபாடு) அதிகரிக்கும்பொழுது, அவனுடைய தற்பெருமை அதிகரிக்கும், மக்களை அவன் சிறுமைப்படுத்தி இகழ்வதனால் தனக்குத்தானே சந்தேகத்தன்மையை அடைந்துகொள்வான்.
மேலும் அவனுடைய அந்தஸ்தும் நிலையும் உயரும்பொழுது, அவனுடைய கர்வமும் அகங்காரமும் அதிகரிக்கும்.
இவை அனைத்துமே அல்லாஹூ தஆலாவிடமிருந்து வரக்கூடிய சோதனையாகும். இதன்மூலம் அவன் தன் அடியார்களை சோதிக்கிறான், மேலும் அதன்மூலம், சில மக்கள் மகிழ்ச்சியை அடைவார்கள் மேலும் சிலர் துன்பமடைவார்கள்.
இதைப்போன்று, மக்கள் செலுத்தக்கூடிய மரியாதை மற்றும் பாராட்டுக்கள் போன்றவையும் உரிமை, அதிகாரம் மற்றும் செல்வம் போன்ற சோதனைகளேயாகும்.
அல்லாஹூதஆலா தன் தூதர் குறித்து கூறுகிறான், சுலைமான், பல்கீஸூடைய சிம்மாசனத்தை தன் முன்னால் கண்டபொழுது:
“هذا من فضل ربي ليبلوني أأشكر أم اكفر”
“இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; [சூரா அந்-நம்ல், 27:40]
எனவே, அருட்கொடைகள் அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய சோதனைகளாகும், நன்றிசெலுத்தும் தன்மையும் மேலும் நன்றிசெலுத்த தவறுதலும் இதன்மூலம் வெளிப்படும். அதைப்போன்றே, ஏற்படும் கஷ்டங்களும் سبحانه அவனிடமிருந்து வரக்கூடிய சோதனைகளேயாகும். அல்லாஹூதஆலா அருட்கொடைகள் மற்றும் கஷ்டங்களின்மூலம் சோதிப்பான்.
அல்லாஹூதஆலா கூறுகிறான்:
“فأماالانسان إذا مابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي أكرمن وأماإذا ما ابتلاه فقدر عليه
رزقه فيقول ربي أهانن”
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான். [சூரா அல்-ஃபஜ்ர், 89:15-16]
வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், நான் கண்ணியத்ததையும் அருளையும் அதிகப்படுத்துவது அவர்கள் அனைவரையும் நான் கண்ணியப்படுத்துவதற்காகதான் என்பதில்லை. அதேபோல், நான் வாழ்வாதரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தி, சோதிப்பது அவர்கள் அனைவரையும் நான் தாழ்த்துவதற்காகதான் என்பது பொருளில்லை.