நயவஞ்சகர்களின் பண்பியல்புகளை பற்றிய வஹீ அல்-மதினாவில் தான் இறக்கப்பட்டது, இது ஏனெனில் மக்காவில் நயவஞ்சகர்களே இல்லை. மாறாக இதற்கு எதிர்மறையான நிலை தான் மக்காவில் இருந்தது (அதாவது மதினாவுக்கு எதிர்மறையான நிலை தான் மக்காவில் இருந்தது), ஏனெனில் சில மக்கள் தங்களுடைய இதயத்தில் நம்பிக்கையை மறைத்துக்கொண்டு, வெளியே காஃபிர்களாக காட்டிக்கொள்ளும் கட்டாயத்துக்கு உள்ளாக்கபட்டார்கள். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தை சார்ந்த அன்சாரிகள் வாழும் அல்-மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். பிற அரபு சிலை வணங்கிகளை போன்றே இவர்களும் இஸ்லாத்திற்கு முந்திய அறியாமை காலத்தில் சிலைகளை வணங்கி கொண்டிருந்தனர். பனு கய்னுகா` – அல்-கஸ்ரஜ்ஜுடைய கூட்டாளிகள், பனு அந்-நதிர் மற்றும் பனு குரைஜா – அவ்ஸ்ஸுடைய கூட்டாளிகள் ஆகிய மூன்று யூத குலம் அல்-மதினாவில் வாழ்ந்து வந்தது. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தை சார்ந்த நிறைய நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். இருப்பினும், `அப்துல்லாஹ் பின் ஸலாம் போன்ற ஒரு சில யூதர்கள் மட்டுமே இஸ்லாத்தை தழுவினார்கள். அல்-மதினாவில் ஆரம்ப காலக்கட்டத்தில், எந்த நயவஞ்சகர்களும் இல்லை ஏனெனில் முஸ்லிம்களை கண்டு அவர்கள் அஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் அப்போது வலிமை வாய்ந்தவர்களாக இல்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم யூதர்களுடனும் அல்-மதினாவை சுற்றி உள்ள இன்னும் பிற அரபு குலத்தாருடனும் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் விரைவாகவே பத்ர் போர் நடந்தது மேலும் அல்லாஹ் இஸ்லாத்திற்கும் அதனுடைய மக்களுக்கும் வெற்றியை அளித்தான்.
`அப்துல்லாஹ் பின் உபய் பின் ஸலுல் என்பவன் அல்-மதினாவில் இருக்கும் ஓர் தலைவன். அவன் அல்-கஸ்ரஜ்ஜுடைய தலைவன், மேலும் ஜாஹிலிய்யா காலத்தில் (இஸ்லாத்திற்கு முந்திய அறியாமை காலத்தில்) அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்திற்கும் இவன் தான் தலைவன். அல்-மதினாவிற்கு செய்தி வந்தடையும் சமயத்தில் அவர்கள் இவனை மன்னராக நியமிக்கலாம் என்று இருக்கிறார்கள்,
அதன் பின்னர் அல்-மதினாவில் இருக்கும் நிறைய நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். இப்னு ஸலுலுடைய இதயம் இஸ்லாத்திற்கு எதிராகவும் அதனுடைய மக்களுக்கு எதிராகவும் வெறுப்பால் நிரம்பியிருந்தது. பத்ர் போர் நடக்கும் போது, அவன் கூறினான், “அல்லாஹ்வுடைய மார்க்கம் வெளிப்படையாகிவிட்டது.” எனவே அவன் தன்னை போன்ற இன்னும் நிறைய நபர்களுடனும், வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் நிறைய பேருடனும் சேர்ந்து முஸ்லிமாக தன்னை பாசாங்கு காட்டிக் கொண்டான். இதன் பின்னர் தான் அல்-மதினாவிலும் சுற்றுப்புறம் உள்ள நாடோடி குலத்தாரிடமும் நயவஞ்சகம் ஆரம்பமானது.
குடி பெயர்ந்தவர்களை (முஹாஜிர்கள்) பொறுத்த வரையில் யாருமே நயவஞ்சகர்கள் இல்லை, ஏனெனில் அவர்கள் தாங்களாகவே முன்வந்து (அல்லாஹ்வின் பொருத்தத்தை எதிர்பார்த்து) குடிப் பெயர்ந்தார்கள். மாறாக , ஓர் முஸ்லிம் மக்காவிலிருந்து குடிப் பெயர்ந்தால் தன்னுடைய அனைத்து செல்வம், குழந்தைகள் மற்றும் நிலம் ஆகிய அனைத்தையும் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். அவர் மறுமையில் கிடைக்கும் அல்லாஹ்வின் வெகுமதியை எதிர்பார்த்து அதனை அவ்வாறே கைவிடுவார்.
ஆதாரம்:
தஃப்ஸிர் இப்னு கதிர்
2:8,9