சில வெளிநாடுகளில் – காஃபிர் (முஸ்லிம் அல்லாத) நாடுகளில் – ஏப்ரல் முதல் நாள் நடக்கும் முட்டாள் தினம் நன்கு அறிந்த பழக்கமாக இருக்கிறது. இந்த நாளில் சில முஸ்லிம்கள்அவர்களைப் பின்பற்றுகிறார்கள், இந்த நாளில் பொய்களை சொல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள்… உங்களுக்கு இந்த நம்பிக்கை மற்றும் இந்த வழக்கத்தைப் பற்றிய கருத்து என்ன?
வெளியிடப்பட்ட தேதி: 2010-04-01
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது
பொய் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை. இன்னும் குஃப்பார்களை (முஸ்லிம் அல்லாத) பின்பற்றுவது இந்த நாளிலும் சரி மற்ற எந்த நாளிலும் சரி அனுமதிக்கப்படவில்லை ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஒருவர் மற்ற மனிதரைப் பின்பற்றுகிறாரோ அவர் அவர்களில் ஒருவராவார்.”
மேலும் அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல் ஷகைக் பத்திரிகையின் அல் ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஃபத்வாவிலிருந்து, நம்பர். 32, ஸஃபர்