- அஷ்ஷைஃக் முஹம்மது பின் ஹாதீ அல்மத்ஃகளி ஹஃபிதஹுல்லாஹ்
தப்லீக் ஜமா'அத்தை பொறுத்தவரையில் - இது முஹம்மது பின் ஹாதீ அல்மத்ஃகளி (ஆகிய எனது) வார்த்தையிலிருந்து உள்ளதன்று - (மாறாக) அவர்களுடைய மற்றொரு தலைவரின் பேனாவைக் கொண்டு (எழுதப்பட்டது). அவர்களுக்கென உள்ள ஒரு பெரிய தலைவர்; அவருடைய பேனாவைக் கொண்டு, அவருடைய சொந்த கையெழுத்தின் மூலமாக அதனை எழுதியுள்ளார். அது ஒரு கருவியின் மூலமாக அச்சிடப்பட்டு, அதற்கு கீழே கையொப்பம் இடப்பட்ட ஒன்றல்ல.
இல்லை. தன்னுடைய பேனாவைக் கொண்டு தனது சொந்த கையினாலேயே எழுதியுள்ளார். தங்களை பின்பற்றுபவர்களிடமிருந்து நக்-ஷபன்தீ தரீகஹ், காதிரிய்யா தரீகஹ், ஜஷ்திய்யா தரீகஹ், மேலும் ஸஹ்ரவர்திய்யா தரீகஹ் என நான்கு ஸூஃபி தரீகத்தின் மீது (பயணிக்க) பை'அத் எடுப்பதாக அவர் தன்னைப் பற்றியும், தனது தஃவத்தைப் பற்றியும் அதில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சரி. அவ்வாறெனில், நபி ﷺ அவர்கள் அவற்றிலிருந்து எந்த தரீகத்தின் மீது இருந்தார்கள்!?
وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இன்னும், “நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகுவதற்காக இவற்றை (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு ஏவுகிறான்” (என்று கூறுவீராக!). (அல்குர்ஆன் : 6:153)
நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகுவதற்காக,
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் : 1:6)
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல. (அல்குர்ஆன் : 1:7)
அல்லாஹ் அருள்புரிந்த அத்தகையவர்கள் யார்? அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனது தூதர் ﷺ அவர்களையும் ஈமான் கொண்டவர்கள் ஆவர்.
மேலும் அவர்களைக் குறித்தே அல்லாஹ் கூறியுள்ளான்:
فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا
அவர்கள் நபிமார்கள், சத்தியவான்கள், (அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த) ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கின்றானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள். தோழமைக்கு இவர்கள்தாம் மிக அழகானவர்கள். (அல்குர்ஆன் : 4:69)
ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا
இது அல்லாஹ்விடமிருந்துள்ள மகத்தான அருட்கொடையாகும். இன்னும், (இவர்களின் செயலை) நன்கறிகிறவனாக இருக்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:70)
இந்த ஜமா'அத்தானது, அதுவே தன்னைப் பற்றி ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் அவர்களே தங்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர் - நாம் அவர்களுக்கு பெயர் சூட்டவில்லை - (மாறாக) அவர்களே தங்களுக்கு “தப்லீக் ஜமா'அத்” என பெயர் சூட்டியுள்ளனர்.
- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.