மஸ்ஜிதின் இமாம்களின் பொறுப்புகள்

بسم الله الرحمن الرحيم 
السلام عليكم ورحمة الله وبركاته 

முதலாவது, மஸ்ஜிதின் இமாம்களுக்குப் பொறுப்பு உள்ளது. அவர்கள் அதை நிலைநாட்டுவது அவசியமாகும். ஏனெனில் இமாம் என்பவர் நம்பகத்தன்மை வாய்ந்தவர். ஆகவே, அவர் ஜமாஅத்தோடு தொழுகையைப் பேணுவது கட்டாயமாகும். அவர் ஜமாஅத் தொழுகையை விட்டும் பின்தங்கக் கூடாது. அவர் ஜமாஅத் நடத்த வராவிட்டால் மக்களுக்குச் சிரமமாக அமைந்துவிடும். அவருக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தமக்குப் பகரமாக இன்னொருவரை அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இரண்டாவது, மக்களுக்கு உபதேசம் செய்து தத்தமது மார்க்க நிலைமை குறித்து கவலையை ஏற்படுத்துவது இமாமின் மீது கடமையாகும். ஏனெனில், நபி அவர்கள் தோழர்களுக்கு உப தேசம் செய்து கவலையை உண்டுபண்ணியுள்ளார்கள். குறிப்பாகச் சந்தர்ப்பம் வாய்க்கும்போதும் தவறை உணர்த்தும்போதும் கவலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

மூன்றாவது, தொழுகைக்கு வராமல் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உபதேசம் செய்வதும் அவர்களுக்கு நினைவூட்டுவதும் இமாமுக்கு அவசியமாகும். ஆட்சியாளர்கள் அவர்களைத் தண்டிக்க முடிந்தால் தண்டிக்க வேண்டும். எனவே தான் நபித்தோழர்கள் தொழுகைக்காக நின்றிருக்க தொழுகைக்கு வராமல் இருப்போரை நபியவர்கள் தேடிச் செல்பவர்களாகவும் தொழுகைக்குப் பிந்துவோரைத் தடுப்பவர்களாகவும் இருந்தார்கள். மேலும் நபி அவர்கள் கூறினார்கள்:

لَقَدْ هَمَمْتُ أَنْ أَمْرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ أَمْرَ رَجُلًا فَيُصَلِّي بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمِ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأَحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ

'தொழுகை நடத்தச் சொல்லி நான் ஏவிவிட்டு, தொழுகை நிலைநிறுத்தப்பட்டவுடன், பிறகு விறகுக் கட்டுகளை எடுத்து வரச் சொல்லி சில மனிதர்களை நான் ஏவி, தொழுகையில் கலந்துகொள்ளாது (மஸ்ஜிதில் தொழுகைக்கு வராது) பின்தங்கி விட்டவர்களின் வீடுகளை எரிக்க வேண்டும் என நான் நினைக் கிறேன்.' (அறிவிப்பு: அபூ ஹுரைரா முஸ்லிம் 651)

இதன் மூலம் தொழுகைக்கு வராதவர்களை இமாம் தேடிப் போவதும் பின்தங்கிவிட்டவர்களைத் தண்டிப்பதும் அவர்களுக்கு உபதேசிப்பதும் இமாமுக்கு கடமை எனத் தெரிகிறது. ஜமாஅத்துக்கு வராமல் பின்தங்கிவிட்டவர்களை இமாம் கண்டுகொள்ளாதுவிட்டுவிட்டால் அவரது பொறுப்பில் குறைவைத்தவராக ஆகிவிடுவார்.

ஷேஹ். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்
Previous Post Next Post