மீலாத் ஆதத்தா? அல்லது பித்அத்தா?

ஆதாரம் இல்லாததன் காரணமாக இப்போது அதனை ஒரு சமூக வழமை (ஆதத்) என்று வாதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
மீள் வாசிப்பு தேவை, நபி(ஸல்) அவர்களை அகிலத்தின் அருளாக கொண்டு செல்ல தேவை, இன்னும் பல தேவைகள் எதிர்காலத்தில் தோன்றலாம். அகிலத்தாருக்கு அருளாக எடுத்துகாட்டுவதற்கு எல்லாம் மீலாத் சம்பந்தமில்லை, தேவையுமில்லை. அதுக்கென நிருவாக ஒழுங்குகளுக்கு தினங்கள் அவரவர் வசதிக்கேற்ப வைத்துக்கொள்வது பிரச்சினையில்லை. அதனை மீலாதோடு சம்பந்தபடுத்துவதும் அந்த தினத்துக்கே நிர்பந்திப்பதும் பித்ஆவுக்கு வக்காலத்து வாங்குதை தவிர வேறொன்றும் இல்லை!
 ‍‍‍‍‍‍ ‍‍
"மீலாத் விழாவை யாருமே பெருநாளாக கொண்டாடுவதில்லை" என தனது புது கண்டுபிடிப்பு நிலைபாட்டின் படிதான் முழு முஸ்லிம் சமூகமே கொண்டாடுவதாக சித்தரிப்பது தவறு. தோற்றத்தின் பின்னனி, ஸூஃபிகளின் நிலைப்பாடுகள் எல்லாம் வேறு!
 ‍‍‍‍‍‍ ‍‍
புதிதாக ஒரு இபாதத்தை தோற்றுவிப்பது தான் பித்ஆ என விளங்க கூடாது, இஸ்லாத்தில் இல்லாத புதிய கொண்டாட்டம் ஒன்றை தோற்றுவிப்பதும் பித்ஆ தான்.
 ‍‍‍‍‍‍ ‍‍
அதற்கென தனி தொழுகையில்லை, குத்பா பிரசங்கமில்லை, நோன்பு நோற்பது ஹராமில்லை என்பதற்காக அது பெருநாளாக கொண்டாடப்படுவதில்லை என்று ஆகிவிடாது, ஏனெனில் மதீனத்து மக்கள் இது எதுவும் இல்லாத விளையாட்டோடு சம்பந்தபட்ட ஒரு தினத்தை கொண்டாடியபோது தான் தடுக்கபட்டார்கள், இஸ்லாம் தந்திருக்கும் 2 பெருநாட்களை போதுமாக்கி கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது.
 ‍‍‍‍‍‍ ‍‍
நபி(ஸல்) அவர்களை நேசிப்பதே மீலாதை சிறப்பிக்க காரணமாக சொல்லபடுகிறது, நபிகளாரை நேசிப்பது என்பது ஈமானோடு சம்பந்தபட்ட ஒரு விஷயம், அது எப்படி ஆதத்தாகும்!? நேசம் எப்படி வெளிபடுத்த வேண்டும் என்பது ஸஹாபாக்களுடைய வழிமுறையில் இருந்து எடுக்கப்பட வேண்டும், அதுவே அங்கீகாரம் பெற்ற வழிமுறை! 
 ‍‍‍‍‍‍ ‍‍
ஸஹாபாக்கள் மீலாத் கொண்டாடினார்களா என்ற கேள்வி அதற்காக தான், நபிகளாரை நேசிக்கும் கடமை அவர்களுக்கும் இருந்தது! அவர்களுடைய ஈமானில் குறை காண்கிறீர்களா?
 ‍‍‍‍‍‍ ‍‍
நபிகளாருடைய விடையத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதை இஸ்லாம் சொல்லிதராமல் விட்டுவிட வாய்ப்புள்ளது என்று ஒருவர் எப்படி நினைக்க முடியும்!?
 ‍‍‍‍‍‍ ‍‍
சரி ஒரு வாததுக்காக அது பின்னர் தோன்றிய ஒரு சமூக வழக்காறுகளில் ஒன்று என்று எடுத்தாலும், அது அந்நிய மதக் கலாச்சாரங்களில் இருந்த எடுக்கபட்ட ஒன்று, எனவே அது கூடாது. கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என ஈஸா(அலை) அவர்களின் பிறப்பை விசேடபடுத்துவது, அந்த தினத்தை கொண்டாடுவது. 
 ‍‍‍‍‍‍ ‍‍
யூத கிறிஸ்தவர்களுடைய வழிமுறைகளை இந்த உம்மதினர் பின்பற்றுவார்கள் என்று நபி(ஸல) எச்சரிக்கவில்லையா? பிறந்த தினம் கொண்டாடுவதே ஒரு தவறான விஷயம், அதனையே நபிகளாருடைய விஷயத்தில் செய்தால் எப்படி இருக்கும்!?
 ‍‍‍‍‍‍ ‍‍
ஸூஃபிகள் ஒரு புறம் நபிகளார் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறார், மௌலூது ஓதப்படும் சபைக்கு நபிகளார் ஆஜராகுவதாக சொல்கிறார்கள், இன்னொறு புறம் கிறிஸ்த்தவர்கள் அவர்களுடைய தேவாலையங்களில் "ஏசு ராஜாவே இறங்கி வாரும்" என்று பாட்டுபடிக்கிறார்கள் என்று நிலமை இருக்கும் போது "நாயகமே, பூமிக்கு வாருங்கள்" என்பதெல்லாம் நோக்கம் எவ்வாறு இருந்தாலும் அவசியம் தவிர்க்கபட வேண்டிய வார்த்தை பிரயோகங்கள். கொள்கையை ஈமானை பாதுகாக்கும் விடயங்களில் மகாஸித், அவ்லவியாத் எல்லாம் புத்திக்கு தோன்றமறுப்பது ஏனோ!?
 ‍‍‍‍‍‍ ‍‍
முஹம்மத் இப்னு அப்துல்வஹ்ஹாப் பிறக்க முன்னரே பல இமாம்கள் தெளிவாக மீலாதை ஒரு பித்ஆ என தீர்ப்பு வழங்கி இருக்க "நஜ்தி" தஃவாவோடு சம்பந்தபட்டவர்கள் தான் இந்த நிலைப்பாட்டில் இருப்பது போல் சித்தரிப்பதன் நோக்கம் தான் என்ன!? வரலாற்றை மறைக்கிறாரா? அல்லது அவர் மனம் விரும்பாத கசப்பான உண்மையா?

- ஹம்தான்
 ‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍ ‍‍

Previous Post Next Post