நபி யூசுப்ஃ அலைஹிஸ் ஸலாம் தனது சகோதரருக்கு ஆறுதல் கூறினார்
" நீ வருந்தாதே!”
وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَخَاهُ قَالَ اِنِّىْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:69)
நபி ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்
“அஞ்சாதீர்!
فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
மூஸா அவரிடம் வந்தார். மேலும், தனக்கு நேர்ந்த அனைத்து நிலைமைகளையும் அவரிடம் எடுத்துரைத்தபோது அவர் கூறினார்: “அஞ்சாதீர்! கொடுமையாளர்களிடமிருந்து நீர் தப்பித்துவிட்டீர்!”
(அல்குர்ஆன் : 28:25)
நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நண்பருக்கு ஆறுதல் கூறினார்
“கவலை கொள்ளாதீர்;
ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ
அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான்.
(அல்குர்ஆன் : 9:40)
உள்ளங்களில் அமைதியை விதைப்பது
நபிமார்களின் வழிமுறையாகும்.
قال يوسف عليه السلام لأخيه : ( فَلَا تَبْتَئِسْ)
وقال شعيب لموسى عليهم السلام : ( لَا تَخَفْ )
وقال محمد صلى الله عليه وسلم لصاحبه : ( لَا تَحْزَنْ )
نشر الطمأنينة في النفوس منهج نبوي