இரவுத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை

-பேராசிரியர் அஹ்மத் அஷ்ரஃப்

இரவுத் தொழுகை (قيام الليل) , தஹஜ்ஜுத் (التهجد) , ஆகிய இரண்டு தொழுகைகளும் ஒன்றாகும் . இதை இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழவேண்டும் . தூங்கி எழுந்து தொழுவது சிறந்ததாகும் . அதை, 3 அல்லது 1 ரக்அத்துடன் முடிக்கவேண்டும் . அதற்க்கு, "வித்ர் தொழுகை" (صلاة الوتر) என அழைக்கப்படும் . அம்மூன்று ரக்அத்களை , ஒரு ஸலாமுடன், அல்லது இரண்டு ஸலாமுடன் (2+1) தொழலாம் . அல்லது ஒரு ஸலாமுடன், ஒரு தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) உடன் தொழலாம் . ஆனால், மக்ரிப் தொழுகைபோல், ஒரு ஸலாம், இரண்டு அத்தஹிய்யாத்துடன் தொழாமல் இருப்பது சிறந்தது . 

இரவுத் தொழுகையை, ரமழான் மாதத்தில் தொழுதால், அதற்க்கு கியாமு ரமழான் (قيام رمضان) என அழைக்கப்படும் . தாபியீன்கள் காலத்தில் , 20 ரக்அத்துகளாகத் தொழுவார்கள். பின்பு, 3 ரக்அத்துகளை வித்ராகத் தொழுவார்கள்.  ஒவ்வொரு நான்கு ரக்அத்துகளுக்குப் பின் ஓய்வு (ترويحة) எடுப்பார்கள் . அதனால் , "ஸலாதுத் தராவீஹ்"(صلاة التراويح) (ஓய்வெடுத்துத் தொழும் தொழுகை) என அழைக்கப்படுகின்றது . ஒவ்வொரு ஓய்வின்போது, மக்காவாசிகள், 4, 8 , 12 , 16 ஆகிய ரக்அத்துகளுக்குப் பின் கஃபாவைச் சுற்றி தவாபு செய்வார்கள் . 20 வது ரக்அத்துக்கு பின் தவாபு செய்யமாட்டார்கள். இதைக் கண்ட மதீனா வாசிகள் , ஒவ்வொரு தவாபுக்குப் பதிலாக, 4 ரக்அத்துகளை கூட்டி, 16 றை அதிகரித்து, 36 ரக்அத்துகளாகத் தொழுதார்கள் . அத்துடன் வித்ர் 3 ரக்அத்தையும் சேர்த்து, 39 ஆகத் தொழுவார்கள் . இவைகள் அனைத்தும், நபியவர்களின் வழிகாட்டல் அல்ல . நபியவர்கள் , ரமழான் மாதத்திலோ . ரமழான் அல்லாத வேறு மாதங்களிலோ 11 (8+3) ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழவில்லை .

சில இடங்களில் , பிந்திய பத்தில்,  இஷாவுக்குப் பின் , முதலாவதாக தராவீஹ் தொழுகையும் , பின்பு, இரவின் பிந்திய பகுதியில், கியாமுல் லைல் என்ற பெயரில் 11 ரக்அத்துகளும் தொழுகின்றனர் . நபி ஸல் அவர்களின் ஸுன்னாஹ் படி , தராவீஹ் தொழுகையை, இமாமுடன் 10 ரக்அத்களையும் , தனியாக 1 ரக்அத்தையும் தொழலாம் . அல்லது கியாமுல் லைல் தொழுகையில் மாத்திரம்,  11 ராக் அத்களை தொழலாம் . இது சிறந்ததாகும் . ஏனெனில் , நீண்டதாக இருப்பதினாலும் , பிந்திய இரவில் இருப்பதினாலும் ஆகும் .
تقبل الله منا ومنكم صالح الأعمال
أحدث أقدم