மூன்று அடிப்படைகள் - நூல் விமர்சனம்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم


மூன்று அடிப்படைகள் (ﺍﻷﺻﻮﻝ ﺍﻟﺜﻼﺛﺔ) - நூல் விமர்சனம்

குகைவாசிகள் சார்பில் உஸ்தாத். அபூ நஸீபா M.F அலீ அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட ﺍﻷﺻﻮﻝ ﺍﻟﺜﻼﺛﺔ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன்.

மொழி நடையிலும், விளக்க அடிப்படையிலும் மிகச் சிறந்த நூலாக இது அமைந்தது; கடந்த 2021-ம் ஆண்டு அஷ்ஷெய்க். ஹைஸம் பின் முஹம்மத் ஜமீல் ஸர்ஹான் (حفظه الله) அவர்களது மேற்பார்வையின் கீழ் இந்நூலை கற்கும் வாய்ப்பு கிடைத்தது; அவ்வாய்ப்பின் மூலமாக பல்வேறு அடிப்படைகளையும், விளக்கங்களையும் மனனமிட்டோம். அதன்பிறகு இந்நூலை மீண்டும் நினைவூட்டும் தருணமாக இது அமைந்தது.

அல்ஹம்து'லில்லாஹ்...

நூலின் தொடக்கத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஸுரத்துல் அஸ்ர் -லிருந்து ஆதாரங்களை காட்டி மிக அருமையாக, அடிக்குறிப்புகளை இடம்பெறச்செய்தது சிறப்பு.

தவ்ஹீத் மற்றும் ஷிர்க் குறித்த விளக்கங்களும், أنواع التوحيد குறித்த அடிக்குறிப்புகளும் மிகச் சிறப்பு.

இபாதாத்தின் வகைகள் (أنواع العبادة) பற்றிய செய்திகளுக்கு கூடுதல் விளக்கமாக இமாம் இப்னு உஸைமீன் رحمه الله அவர்களது ஷரஹை மேற்கோள் காட்டியது பாமரருக்கும் எளிதில் புரியும் படி அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் வரைவிலக்கணம் (تعريف الاسلام)-ஐ அரபு மூலத்துடன், எளிமையான தமிழில் கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பானது; ஒவ்வொரு மாணவரும்/அழைப்பாளரும் இந்த விளக்கத்தை அரபியில் மனனமிடுவது கட்டாயமாகும்.

ஷஹாதாவை النفي والإثبات என்ற பிரிப்பு முறையில் விளங்கப்படுத்தி, அதன் ம'அனாவை (لا معبود بحق إلا الله) குறிப்பிட்டது மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதேபோல முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ﷺ-வின் நிபந்தனைகளை குறிப்பிட்டதும் மிக பயனுள்ளதாக அமைந்தது.

ஈமான் குறித்த பாடத்தில் அதன் வரைவிலக்கணத்தை (الإيمان قول وعمل ومعرفة يزيد بالطاعة وينقص بالمعصية) அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் (இன்'ஷா அல்லாஹ்..)

நபி ﷺ அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புடன், நபி மற்றும் ரஸுலுக்குமான வித்தியாசத்தை அடிக்குறிப்பில் சேர்த்தது மிக பிரயோசனமிக்கது.

நூலின் இறுதியில் ஷிர்க் பற்றிய நான்கு அடிப்படைகள் அரபு மூலம், தமிழாக்கம் மற்றும் அடிக்குறிப்புடன் மிகச் சிறப்பாக காணப்படுகிறது.

அல்ஹம்து'லில்லாஹ்...

கல்வியை தேடும் மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நூட்களுள் ''ஸலாஸதுல் உஸுல் மற்றும் கவாயிதுல் அர்ப'அ" எனும் இவ்விரு நூட்கள் மிக முக்கியமானவை என இமாம் முஹம்மது பின் ஸாலிஹ்  அல்-உஸைமீன் رحمه الله அவர்கள் 'கிதாபுல் இல்ம், பக்கம் 92-ல் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, கல்வியை தேடும் ஒவ்வொரு மாணவர்களும் இந்நூலை வாங்கி அதிலுள்ள அடிப்படைகளை ஆதாரங்களுடன் அரபியில் மனனமிட்டுக் கொள்வதும், தம் குடும்பத்தாருக்கு எத்திவைப்பதும் மிக அவசியமான ஒன்றாகும்.

அல்லாஹ் இந்நூலின் ஆசிரியருக்கும், அதனை மொழிப்பெயர்த்த மற்றும் விரிவுரை செய்த நன்மக்களுக்கும் அருள்புரிவானாக...

-Rayyan
أحدث أقدم