சிரியாவை சிதைத்தது யார்?

சிரியா ஸுன்னி முஸ்லிம்களின் பிரதேசம், சிரியாவில் வாழ்ந்து மரணித்த ஸஹாபாக்கள், உருவாகின அறிஞர்கள் என்று இஸ்லாமிய வரலாற்றில் சிரியாவுக்கு இருக்கும் இடத்தை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற நிலையில்லை.
 ‍‍‍‍‍‍ ‍‍
ஆனால் இன்று சிரியா சிதைக்கபட்டு சின்னா பின்னமாகியிருக்கிறது, அதற்கு மூன்று சாரார் பெரும் பங்களிப்பை செய்திருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.
 ‍‍‍‍‍‍ ‍‍
இஹ்வான்கள் :-

"இஸ்லாமிய ஆட்சி" "சுதந்திரம்" "அநீதிக்கு எதிரான போராட்டம்" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பி ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் தான். 
 ‍‍‍‍‍‍ ‍‍
எல்லா விஷயத்திலும் "மகாஸிதுஷ் ஷரீஆ" என்பதை தவராக பயன்படுத்தி தங்களுடைய உலக நட்டங்களை தவிர்க்க நினைப்பவர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டால் எத்தனை உயிர் இழப்புகள் ஏற்படும் என்பதையெல்லாம் சிந்திக்காமல் மக்களை தூண்டிவிட்டார்கள், இதை என்னவென்று சொல்வது!? மறந்துவிட்டார்கள் என்று சொல்வதா? அல்லது மக்களை தூண்டிவிடுவது முஸ்லிம் நாடுகளை சிதைக்க அஜென்டாவில் இருப்பதால் மறைத்துவிட்டார்கள் என்று சொல்வதா!?
 ‍‍‍‍‍‍ ‍‍
ஷீஆ :-
ஈரானிய ராபிழாக்களும் சிரியாவில் சிறுபான்மையாக வாழும் நுஸைரியாக்களும். ஸுன்னி முஸ்லிம்களை கொல்லுவதை ஒரு இபாதத் என்று கருதும் இவர்கள் யுத்ததிற்கு முன் இருந்தே ஸுன்னி முஸ்லிம்களை கொன்று, அநியாயம் செய்து வந்தார்கள், யுத்தத்திற்கான காரணத்தை உருவாக்கினார்கள், யுத்ததிலும் இவர்களை போல் சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் யாரும் இல்லை என்ற அளவில் கொலை செய்தார்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
ஹவாரிஜ் :-
ஸுன்னி முஸ்லிம்களின் போராட்டம் வெற்றிபெறும் ஒரு கட்டத்தை அடைந்த போது அவர்களுடைய பலத்தை தகர்ப்பதற்காக ஹவாரிஜ்கள் வெளிபட்டார்கள், ஸுன்னிகளுக்கு மத்தியிலேயே யுத்தம் ஆரம்பித்தது. ஹவாரிஜ்கள் வெளிபட்ட பின்னர்தான் பஷ்ஷார் மற்றும் ஈரானிய ஷீஆ படை பலம் பெற்றது, வெற்றி பெற ஆறம்பித்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 ‍‍‍‍‍‍ ‍‍
ஹவாரிஜ்கள் வெளிபட்டதும், தீவிரவாததுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ரஷ்யா நுழைந்தது, ஆனால் ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் ஹவாரிஜ்களை தாக்கவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏனைய ஸுன்னி முஸ்லிம் போராட்ட குழுக்களை தாக்கியது தான் அதிகம். 
 ‍‍‍‍‍‍ ‍‍
ஸுன்னி முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷீஆக்கள் மீது இஹ்வான்கள் உருவாக்கி இருந்த நம்பிக்கையை அல்லாஹ்வின் உதவியால் ஸலபி உலமாக்கள் அகற்றிவிட்டார்கள். ஆனாலும் இஹ்வான்கள் மீதும்     ஹவாரிஜ்கள் மீதும் மக்கள் முழுமையாக நம்பிக்கை போகவில்லை, அதற்கு காரணம் அல்ஜெஸீரா போன்ற இஹ்வான்களின் மீடியாக்கள் இவ்விரு சாராரையும் முஸ்லிம் சமூகத்தின் போராளிகளாக விளம்பரபடுத்திக் கொண்டு இருப்பதுதான். அடிக்கடி ஷீஆக்களையும் ஈரானையும் விளம்பரபடுத்தினாலும் அவர்களை பற்றி மக்கள் தெளிவடைந்துவிட்டதால் அவர்களது விளம்பரங்கள் பிரயோசனமற்றதாக போகின்றது.
 ‍‍‍‍‍‍ ‍‍
இம்மூன்று சாராருக்கும் இடையில் சில ஒருமித்த மூலகூறுகள் இருக்கின்றன, இம்மூன்று சாரார்களும் இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டத்தின் அடிபடையில் செயற்படுபவர்கள் என்பது எனது பணிவான நிலைப்பாடு, பல அறிஞர்களும் இதனையே சொல்கிறார்கள். கீழ் மட்டதில் இருக்கும் பொதுமக்கள் அறியாதவர்கள், அறியாமையின் காரணமாக இவர்களுடைய பிரச்சாரங்களில் ஈர்க்கபட்டு இவர்களுடன் இணைந்திருக்கிறார்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
எம்மனைவருக்கும் அல்லாஹ் நேர் வழியை காட்டுவானாக
 ‍‍‍‍‍‍ ‍‍
- Hamdhan Hyrullah, Paragahadeniya
أحدث أقدم