அல்லாஹ்வைக் காணும் நாளில் அவன் நம்மை விசாரணை செய்வான்!


وسَتَلْقَوْنَ رَبَّكُمْ فَيَسْألُكُمْ عَنْ أعْمالِكُمْ. (أخرجه مسلم والترمذي وابن حبان)

"அல்லாஹ்வை நீங்கள் விரைவில் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்பாடுகள்  பற்றி உங்களிடமே
விசாரிப்பான்" என இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் தமது அரஃபா தின உரையில் கூறினார்கள். ( முஸ்லிம், திர்மிதி, இப்னு ஹிப்பான்)

#தெளிவு 
---
அல்லாஹ் சுத்த சூனியமானவன் இல்லை; மாறாக அவனுக்கென யதார்த்தமான ஒரு அழகிய #தோற்றம் தற்போதும் உண்டு, #அந்த தோற்றத்தோடு மறுமையில் நாம் அவனை நிச்சயமாக காண்போம் என்பதை  உணர்த்தும் நபி மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.

#அல்லாஹ் உண்மையாவன், அவனுக்கென அழகிய தோற்றம் உண்டு, அது அவனது படைப்புக்கு எந்த வகையிலும் ஒப்பானது கிடையாது என்ற நம்பிக்கைக் கோட்பாட்டினை பின் வரும் நபி மொழியில் இன்னும் தெளிவாகப் புரியலாம்.

 إذا دخل أهلُ الجنةِ الجنةَ يقولُ اللهُ تريدون شيئًا أزِيدُكُمْ فيقولون ألم تُبَيِّضْ وُجُوهَنا ألم تُدْخِلْنا الجَنَّةَ وتُنَجِّنا مِنَ النّارِ #فَيَكْشِفُ الحجاب فما أُعْطُوا شيئًا أحبَّ إليهم من #النظرِ إلى ربِهم (مسلم، والترمذى عن صهيب) أخرجه مسلم (١/‏١٦٣، رقم ١٨١)، والترمذى (٥/‏٢٨٦، رقم ٣١٠٥). وأخرجه أيضًا: أحمد (٤/‏٣٣٢، رقم ١٨٩٥٥).
"சொர்க்கவாசிகள்  சொர்க்கத்தில் உட்பிரவேசித்த பின், உங்களுக்கு எதையாவது அதிகமாக்கித் தரட்டுமா? என  
 அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கி, எங்களை நீ நரகில் இருந்து காக்கவில்லையா? (அதற்கு மேல் ஏதும் வேண்டுமா) எனக் கேட்பார்கள். உடன் திரை நீக்கப்படும். அவர்கள் தமது இரட்சகனை (அல்லாஹ்வை ) பார்ப்பதை விட விருப்பமான ஒன்றை அந்த நேரத்தில் கொடுக்கப்பட்டிருக்கமாட்டார்கள்"  என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்).
 
தெளிவு
--
மறுமை நாளில்தான்  முஃமின்கள் அனைவரும்  சத்தியமான அந்த அல்லாஹ்வை சொர்க்கலோகத்தில் காண்பார்கள். ஏழு வானத்திற்கும் மேலால்  மிஃராஜ் சென்ற இறைத் தூதர் அவர்கள் கூட திரைமறைவில் இருந்தே அல்லாஹ்வோடு பேசி விட்டு வந்தார்கள்.

இதைத்தான் அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில்

فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (الكهف/ 110)
"யார் (மறுமை நாளில்) தனது இரட்சகனை சந்திப்பதை ஆதரவு வைக்கின்றாரோ அவர், ஸாலிஹான அமல் செய்து கொள்ளட்டும், மேலும் தனது இரட்கனை வணங்குவதில் அவனுக்கு யாரையும் அவர் இணையாக்கவும் வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளான்.

யா அல்லாஹ்! மறுமை நாளில் உன்னைக் காணும் நற்பாக்கியத்தை நமக்கும் நமது குடும்பத்திற்கும் முஃமின்களுக்கும் நல்குவாயாக! 
ஆமீன்....

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post