இரவு தொழுகையின் சிறப்புகளும்; மேலும், அதன் ஆதாரப்பூர்வமான பல்வேறுபட்ட சில முறை(வடிவங்)களும்.

بسم الله الرحمن الرحيم 

நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள்: 
"யாரெல்லாம் ரமழானில் ஈமானோடும், அல்லாஹ்விடத்தில் கூலியை(பிரதிபலனை) எதிர்பார்த்தும் இரவில் நின்று வணங்குகிறாரோ, அவருடைய முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்." 
(புகாரி-37,2008,2009  முஸ்லிம்-759)

நபி(ﷺ) கூறினார்கள்:
"நீங்கள் இரவுத் தொழுகையை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; காரணம், அது உங்களுடைய முன்சென்ற நன்முன்னோர்களின் வழிமுறையாகும்; அது உங்களுடைய ரப்புடைய நெருக்கத்தை பெற்றுத் தரும் வழியாகும்; பாவங்களுக்கான பரிகாரமாகும்; தீமைகளுக்கான தடையாகவும் இருக்கிறது." 
(அபூ உமாமா رضي الله عنه, திர்மிதீ 3549).

இரவுத் தொழுகையின் ஆதாரப்பூர்வமான பல்வேறுபட்ட சில முறை(வடிவங்)கள்.

நபி(ﷺ) இரவுத் தொழுகையை பல்வேறுபட்ட முறைகளில் நிலைநாட்டியதாக ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நபி(ﷺ) அவர்களின் இந்த(இதுபோன்ற) சுன்னாவுடைய காரியங்களில்  முஸ்லிம்களில் பெரும்பாலானோர்  அறிவீனர்களாக(அதைப் பற்றிய அறிவு இல்லாமல்) இருக்கின்றனர். 

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் : 
"எனக்கு பிறகு யார் என்னுடைய சுன்னாவை உயிர்பிக்கின்றாரோ, அந்த சுன்னாவை பின்பற்றுபவருக்கு கிடைக்கும் கூலியை போன்று அவருக்கு(வழிகாட்டியவருக்கு)ம் கிடைக்கும். அது, அந்த சுன்னாவை பின்பற்றுபவருடைய கூலியிலிருந்து யாதொன்றையும் குறைக்காது".

நூல்: முஸ்லிம்


1. 11 ரக்அத்துகள். 

ஒவ்வொரு 2 ரக்அத்துகளுக்கிடையில்(மத்தியில்) ஸலாம் கொடுத்துக் கொண்டு, மொத்தம் 10 ரக்அத்துகள் தொழ வேண்டும். பிறகு, 1 ரக்அத்து வித்ரு(தொழுகை) தொழ வேண்டும். இவ்வாறு மொத்தம் 11 ரக்அத்துகள் தொழ வேண்டும்.

2+2+2+2+2+1=11

(இப்னு உமர் رضي الله عنهما, புகாரி-1137, முஸ்லிம்-749).


2. 11 ரக்அத்துகள்.

4 ரக்அத்துகள் ஒன்றாக சேர்த்து(தொழுது) ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு, மீண்டும் 4 ரக்அத்துகள் ஒன்றாக சேர்த்து(தொழுது) ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு, 3 ரக்அத்துகள் வித்ரு (தொழுகை) ஒன்றாக சேர்த்து தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். இவ்வாறு மொத்தம் 11 ரக்அத்துகள் தொழ வேண்டும்.

4+4+3=11

(ஆயிஷா رضي الله عنها, புகாரி-472,473 / முஸ்லிம்-749).


3. 13 ரக்அத்துகள்.

சுருக்கமான 2 ரக்அத்துகளைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். பிறகு, நீளமான 2 ரக்அத்துகள், மீண்டும் 2 ரக்அத்துகள், மீண்டும் 2 ரக்அத்துகள், மீண்டும் 2 ரக்அத்துகள், மீண்டும் 2 ரக்அத்துகள். பிறகு, ஒரு ரக்அத்து கொண்டு வித்ரு(தொழுகை) தொழ வேண்டும். இவ்வாறே, மொத்தம் 13 ரக்அத்துகள் ஆகும். 

2+2+2+2+2+2+1=13

(ஸைத் இப்னு ஹாலித் அல் ஜுஹனி رضي الله عنه, முஸ்லிம் 765)


4. 13 ரக்அத்துகள். 

இரண்டு வீதம்(இரண்டிரண்டு) ரக்அத்துகளாக, மொத்தம் 8 ரக்அத்துகள் தொழ வேண்டும். பிறகு, ஒன்றாக சேர்த்து 5 ரக்அத்துகள் வித்ரு(தொழுகை) தொழ வேண்டும். இவ்வாறே மொத்தம் 13 ரக்அத்துகள் தொழ வேண்டும்.

2+2+2+2+5=13

(ஆயிஷா رضي الله عنها, முஸ்லிம்-737)


5. 11 ரக்அத்துகள்.

8 ரக்அத்துகள் ஒன்றாக சேர்த்து தொழ வேண்டும், 8-வது ரக்அத்தில் மட்டும் தான் தஷஹ்ஹுத் உடைய அமர்வு அமர வேண்டும். அதில் தஷஹ்ஹுத் உடைய துஆவும், ஸலாத்தும் கூறியதற்கு பிறகு, ஸலாம் கொடுக்காமல், எழுந்து நின்று 1 ரக்அத்து வித்ரு(தொழுகை) தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். அவ்வாறு மொத்தம் 9 ரக்அத்துகள். பிறகு, அமர்ந்து கொண்டு(அமர்ந்த நிலையில்) 2 ரக்அத்துகள் தொழ வேண்டும். இவ்வாறு மொத்தம் 11 ரக்அத்துகள் தொழ வேண்டும்.

8+1+2=11

(ஆயிஷா رضي الله عنها, முஸ்லிம்-746)


6. 9 ரக்அத்துகள்.

ஆரம்பத்தில்(முதலில்) 2 ரக்அத்துகள் தொழுத பின்னர், 7 ரக்அத்துகள் வித்ரு(தொழுகை) தொழ வேண்டும். இவ்வாறு மொத்தம் 9 ரக்அத்துகள் தொழ வேண்டும்.

2+7=9

(அப்துல்லாஹ் இப்னு அபீ கய்ஸ் رضي الله عنه, அல் முஸ்னது-25159, அபூ தாவூத்-1362).

மேற்கண்ட இரவுத் தொழுகையின் பல்வேறுபட்ட சில முறை(வடிவங்)கள் யாவும் நபி(ﷺ) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளவை ஆகும்.


مَنْ دَعَا إِلَى هُدًى، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ.

 من 'مجالس رمضانية' للشيخ أبي يوسف نجيب الأحمدي الشرعبي حفظه الله.

நூல்: மேற்கண்ட பயனுள்ள குறிப்பு மஜாலிஸு ரமழானிய்யஹ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பெற்றது.

தமிழாக்கம்:
அபூ நுஹா அப்துர் ரஹ்மான் அல் ஹிந்தி وفقه الله

Previous Post Next Post