குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள்…!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்….

நமது இந்தியாவில் முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களை பல நல்ல மக்களும் சரியானவை என்று நம்புகிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் எதிரிகளால் கடுமையாக தாக்கப்படும் போது பிற மதத்தை சேர்ந்த நல்ல மக்களும் முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்கு முன்வருவதில்லை.எனவே குற்றம் சாட்டுபவர்களும் அதனை நம்பக்கூடியவர்களும் தெளிவு பெறுவதற்காக குற்றச்சாட்டுக்களுக்கான பதிலையும் சரியான விளக்கத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.

குற்றச்சாட்டு : 1 
“முஸ்லிம்கள் நம் இந்திய தேசத்தின் தாய் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அந்நிய தேச மதமான இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்”

பதில் : 1 
இந்த குற்றச்சாட்டுதான் முஸ்லிம்களின் எதிரிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களிலேயே முதன்மையானது. இதற்கு அந்த எதிரிகள் தெளிவு பெற்றுவிட்டால் முஸ்லிம்களோடு விரோதம் கொள்ள மாட்டார்கள்.

இக்குற்றச்சாட்டுக்கு முஸ்லிம்கள் தரப்பு பதில் மற்றும் விளக்கம்: 
உண்மையில் முஸ்லிம்கள்தான் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையை ஏற்று நடப்பவர்கள். இந்துக்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் இந்து மதத்தில் இடைச்செருகல் செய்யப்பட்ட தவறான கொள்கையை பின்பற்றுகிறார்கள்.
அதாவது இந்து மதத்தின் உண்மையான இறைநம்பிக்கை “தெய்வம் எனபது எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே. அவனை மட்டுமே வணங்க வேண்டும்” என்பதே. இதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையும். 

இந்து மதத்தில் வேத நூல்களிலும் புனித நூல்களிலும் ஒரே இறைவன்தான் இருக்கிறான். அவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப் பட்டுள்ளது.

உதாரணத்துக்கு சில: 
“மானோ ஹிம்ஜுஜ நிதாயஹ் ப்ருதிவ்யா
யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான
யவிசர் பஷ்ச்சந்தரா  ப்ருஹதீர் ஜஜான
கஸ்மை தேவாய ஹவிஷ விதமே”
(ரிக்வேதம்  10:121:9)
 
பொருள் : எவர் பூமியை உண்டாக்கினாரோ, அதுபோல் உண்மையை நியாயமாக்கி  வைத்து கொண்டு இருக்கும்  எவர்  தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ,எவர் நீரையும் பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ அந்த படைப்பாலனே நம்மை பரிபாளிகின்றான்.அதனால் அவனை மட்டுமே வழிபடுக!

“ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எ நன் நா நாங்தே கின்ஜான்” 
_ பிரம்ம சூத்திரம் 
பொருள் : இறைவன் ஒருவனே. இருவனில்லை. இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை.
சிலை உள்ளிட்ட எதையும் வணங்கக் கூடாது என்பதை பகவத் கீதை (7:20) இவ்வாறு கூறுகிறது: “எவரொருவர் பரம் பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்”

இதே போன்றே திரு குர்ஆனில் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டுமென்று அதிகமான வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு திருக்குர்ஆனின் 112 வது அத்தியாயம்: “கூறுவீராக! இறைவன் ஒருவன். இறைவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெற்றெடுக்கவும் இல்லை; (எவராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை” 

மதத்தின் முக்கிய அம்சம் இறைவணக்கம் தான். அந்த விசயத்தில் இந்து மத வேதங்களின் கருத்தும் முஸ்லிம்களின் நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. அதனால் முஸ்லிம்கள் அந்நிய மதத்தை பின்பற்றுவதாக குற்றம் சாட்டுவது தவறு.

இப்போது, இந்து மத புனித புத்தகங்களில் பல தெய்வ வணக்கத்தை ஆமோதிக்கும் வசனங்களும் உள்ளன என்று கூறி மறுப்பு தெரிவிக்கலாம் சிலர். 
இதற்கு நமது பதில், இந்து புனித நூல்களிலும் இந்துக்களிடமும் இப்போது இருக்கும் பலதெய்வ வழிபாடு இடை செருகலாக வந்ததுதான் என்பதே. 

இதற்கு நாம் பல ஆதாரங்களை காட்ட முடியும். ஆதாரங்கள்: 
1 _ ஓரிறை கொள்கை இந்து புனித நூல்கள் மட்டுமின்றி திருக்குர்ஆன், பைபிள் உள்ளிட்ட பிற வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, பைபிள் பழைய ஏற்ப்பாடு : இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபாகமம் 6 : 4 )

எல்லா வேதங்களும் ஓரிறை கொள்கையை ஒப்புக்கொண்ட பின்பு அப்படி ஒப்புக்கொண்ட வேதங்களில் சிலதில் அதற்கு முரணான கருத்தும் பதிவாகி இருந்தால் அந்த முரண்பட்ட கருத்துதான் இடைச்செருகல் எனபது தெளிவான விஷயம்.

2 _ இந்து மத புனித சட்ட நூலான மனுஸ்மிருதியில், சூத்திரர்கள் கீழ்ஜாதி என்றும் அவர்களுக்கு குற்றவியல் தண்டனையில் கடுமையான தண்டனைகளும் சொல்லப்பட்டுள்ளது. 

இந்துக்கள் எல்லோரும் (அல்லது பெரும்பாலானோர்) இந்த ஜாதி பாகுபாட்டை எதிர்கிறீர்கள். அப்படியானால் இந்து மத சட்ட புனித நூலிலேயே இடைச்செருகல்கள் உள்ளன என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இதே போல்தான் ஓரிறை கொள்கையிலும் உங்களிடம் இடைச்செருகல் ஏற்ப்பட்டுள்ளது.

3 _ இந்துக்களால் இந்தியாவில் தெய்வமென்று வணங்கப்படுபவை உலகத்தின் மிக பெரும்பாலான பகுதிகளில் அறியப்படவில்லை. உண்மையில் கடவுள்கள் என்றிருந்தால் அறியப்பட்டிருக்கும். 

4 _ உலகின் வேறு பகுதிகளில் கடவுள்களாக நம்பப்படுபவர்களை (உதாரணத்துக்கு இயேசு நாதரை) இந்துக்கள் கடவுள்களாக ஏற்றுக்கொள்வதில்லை. 

இதற்குக்காரணம், மனிதர்கள் கடவுளாக ஆக முடியாது என்று இவர்களின் மனசாட்சி கூறுகிறது. எனவே இந்தியாவில் கடவுள்களாக பூஜிக்கப்படுபவர்கள்(மனிதர்களோ பிற படைப்புக்களோ) உங்களின் மனசாட்சிப்படியே கடவுள்கள் அல்ல.

5 _ “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற முழக்கம் இந்துக்களே தங்களின் புனித நூலிலிருந்து (திருமந்திரம்) எடுத்துக்கூறும் கொள்கைதான். 
ஒருவனே என்று அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பல தெய்வ நம்பிக்கை தவறு என்பதை தெளிவு படுத்துவதற்குத்தான். இதை ஏற்றுக் கொண்டதால்தான் இந்த வாசகத்தை வழிவழியாக சொல்லி வருகிறார்கள். எனவே இப்போது விட்டொழிக்க வேண்டியது இடைச்செருகலாக வந்த பல தெய்வ நம்பிக்கையைத்தான்.

6 _ “எல்லாம் வல்ல இறைவன்” எனபது இந்துக்கள் சொல்லும் வாசகம். இறைவன்கள் என்று பன்மையாக சொல்லவில்லை. 
அந்த ஒரு இறைவனே ஆக்கவும் அழிக்கவும் செய்வதுடன் கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றையும் இன்னபிறவற்றையும் கொடுக்கவும் செய்கிறான் என்ற நம்பிக்கை இதில் வெளிப்படுகிறது. அதனால் அவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கொள்கை இந்துக்களிடம் உள்ளது எனபது தெளிவாகிறது.

இதன்படி பார்த்தால் இந்தியாவின் பூர்வீகமான, உண்மையான இறைநம்பிக்கையை கைவிட்டு இடைசெறுகலாக வந்த அசத்தியமான நம்பிக்கையை கைக்கொண்டவர்கள் நீங்கள்தான். 

எனவே மனிதர்களையும் மற்ற பொருட்களையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு இணையாக ஆக்கியதால் நீங்கள் மிகப்பெரும் குற்றவாளிகளாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த குற்றத்துக்கு நரக தண்டனை இருக்கிறது என்று இறைவன் தன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் எச்சரிக்கிறான். படியுங்கள்: எவன் இறைவனுக்கு இணை கற்ப்பிக்கிறானோ அவனுக்கு இறைவன் சொர்க்கத்தை தடை செய்துவிட்டான். அவன் ஒதுங்குமிடம் நரகமாகும். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (எவரும்) இல்லை. (திருக்குர்ஆன் 5 : 72 )

உங்களால் வணங்கப்படுபவர்கள் முற்காலத்தில் நல்லடியார்களாக வாழ்ந்திருக்கலாம். அதற்காக அவர்களை வணங்குவது கூடாது. ஏனென்றால் அவர்களும் இறைவனின் அடிமைகள்தான். அவர்கள் நல்லவர்களாக வாழ்ந்திருந்தால் தங்களை பிறர் வணங்குவதை விரும்பியிருக்க மாட்டார்கள். மறு உலகில் உங்களின் இந்த பாவச்செயலை அவர்கள் ஏற்க மாட்டார்கள். இறைவன் திருகுர்ஆனில் கூறுவது: 
(இறைவனாகிய) அவனைத் தவிர்த்து நீங்கள் எவர்களை பிரார்த்தித்து அழைக்கிறீர்களோ அவர்கள் ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவர்களை நீங்கள் அழைத்த போதிலும் உங்களது அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். (ஒருவேளை) அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். மறுமையில் நீங்கள் (அவர்களை) இணை வைத்ததையும் நிராகரித்து விடுவார்கள். (35 : 13, 14)

ஆக இந்தியாவின் பூர்வீக மத நம்பிக்கையை மாற்றியதன் மூலம் நீங்கள்தான் குற்றவாளிகள். அப்படியிருக்கையில் முஸ்லிம்களாகிய எங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தவறு. 

இந்தியாவின் பூர்வீகமான கடவுள் நம்பிக்கையை கொண்டவர்களுக்குத்தான் இந்தியாவின் மீது அதிக உரிமை இருக்கிறது என்று சொன்னால் அந்த அதிக உரிமை எங்களுக்கு உரியதே தவிர உங்களுக்கல்ல!


” அந்நியரை பின்பற்றுகிறீர்கள் “

முஸ்லிம்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மற்றொன்று “முஸ்லிம்கள் அந்நிய இனமாகிய அரபு இனத்தைச் சேர்ந்த மத வழிகாட்டியை (முஹம்மத் நபி(ஸல்) அவர்களை) பின்பற்றுகிறார்கள்” என்பதாகும்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த குற்றச்சாட்டை சுமத்துபவர்களுக்கு இந்த குற்றச்சாட்டை சொல்ல தகுதி இல்லை. ஏனென்றால் அவர்களே அந்நிய தேசத்து இனத்தை சேர்ந்தவர்களைத்தான் மத வழிகாட்டிகளாக வைத்திருக்கிறார்கள்.

அதாவது இந்துக்கள் எல்லாம் ஆரியர்களை தான் தங்களின் மத வழிகாட்டிகளாக, குருக்களாக, கடவுளிடம்  தங்களுக்காக பிரார்த்தித்து வாங்கித்தரும்  இடைத்தரகர்களாக வைத்திருக்கிறார்கள். ஆரியர்கள் மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து படையெடுத்து வந்து நம் நாட்டின் மீது போர்தொடுத்து நம் மக்களை அடிமை படுத்தியவர்கள்.

அப்படிப்பட்டவர்களை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து அன்னிய வழிகாட்டியை பின்பற்றுவதாக சொல்வது உங்களின் முரண்பாட்டுக்கு பெரிய ஆதாரமாகும்.

இப்போது உங்களின் தவறான குற்றச்சாட்டுக்கு சரியான பதிலை தருகிறோம் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

          முஹம்மது (ஸல்) அவர்கள் ,”எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் சிலைகள் உட்பட இறைவனால் படைக்கப்பட்ட எதனையும் வணங்கக் கூடாது” என்றும் “இவ்வாறு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது மனிதர்களால் மதத்தில் இடைசெருகலாக ஏற்பட்ட பெரும்பாவம்” என்றும் மக்களுக்கு போதித்தார்.

நபியவர்களின் போதனையை கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் அறிவை பயன்படுதி சிந்திக்கும்போது அவர்கள் போதித்த கொள்கை சத்தியமானது என்பதை அறிந்து கொள்கிறோம்.

அத்துடன் நம் இந்திய தேசத்தின் பூர்வீக மத நம்பிக்கையும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதுதான். இந்தக் கொள்கை நம் நாட்டின் பழைய வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. (இதற்கான ஆதாரங்கள் இந்த தொடரின் முதல் பகுதியில் எழுதப்பட்டுள்ளன.)

முஹம்மது (ஸல்) அவர்களின் போதனை சத்தியமானது, நம்நாட்டின் வேதங்களில் சொல்லப்பட்ட கருத்து இதுதான் என்பதை தெரிந்தும்‌அவர்கள் அரபு காரர் என்று காரணம் கூறி ஏற்க மறுப்பது பெரும் தவறாகும். சொற்ப கால உலக ஆதாயத்துக்கு பயன்படக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை அந்நிய இனத்துக்காரர்கள் கண்டுபிடித்து தந்தால் எடுத்துக் கொள்கிறோம்.

உண்மையையும் நன்மையையும் அந்நிய இனத்துக்காரர் சொன்னால் எடுத்துக் கொள்ளக் கூடாதா? எடுத்துக் கொள்ளக் கூடாது என்றால் அந்நிய ஆரியர் மொழியான சமஸ்கிருதத்தில் உள்ள மத வழிகாட்டு நூல்களையும் எடுத்துக்கொள்ளக் கூடாதுதானே (இந்த நூல்கள் இடைச் செயல்களுக்கும் ஆளாகியுள்ளன ).

முஹம்மது (ஸல்) அவர்கள் தனக்கு இறைவனிடமிருந்து வேதம் அறிவிக்கப்படுகிறது. அந்த இறைச் செய்தியை மக்களிடம் சேர்க்கும் பணியை செய்வதால், தான் ஒரு இறைதூதர் என்று சொன்னார். அதோடு தனக்கு முன்னர் மனித சமுதாயத்தில் தன்னை போல் பல தூதர்கள் இருந்திருக்கிறார்கள் அவர்களின் பாதையில்தான் நானும் செல்கிறேன் என்றார். இதை ஏற்று நம்பிக்கை கொள்வது இந்து மதத்துக்கோ பிற மதங்களுக்கோ எதிரான நம்பிக்கை அல்ல.

இந்து மதத்தில் உள்ள வேதங்களை இறைவனே நேரடியாக பூமிக்கு இறங்கி வந்து மக்களைக் கூட்டி வைத்து கொடுத்து விட்டு போனதாக நீங்களும் நம்பவில்லை. இறைவனால் ஒரு நல்ல அடியாருக்கு அறிவிக்கப்பட்டு அந்த ஒருவர் தான்‌மக்களிடம் சேர்த்தார் என்பது தான் நீங்களும் கொண்டுள்ள நம்பிக்கை

இந்தியாவில் மட்டும்தான் கடவுள் வேதத்தை இறக்குவானா? அதுவும் சமஸ்கிருத மொழியில் மட்டும் தான் கொடுப்பானா? நீங்கள் சொல்லும் எல்லாம் வல்ல இறைவன் இந்தியாவை மட்டும்தான் படைத்தானா? மற்ற பகுதிகளையும் பிற மொழிகளையும் அவன் படைக்கவில்லையா? அல்லது அவன் தன் படைப்புகளுக்கு அநியாயம் செய்பவனா? 

இல்லை! நீங்கள்தான் அநியாய சிந்தனையுடன் இருக்கிறீர்கள் அதனால்தான் மொழியையும் பிரதேசத்தையும் காரணம் காட்டி உண்மையை ஏற்க மறுக்கிறீர்கள்.

 இறை வேதம் கொடுக்கப்பட்டு உலக மக்கள் அனைவரையும் வழிநடத்த வரும் இறுதி தீர்க்கதரிசி பற்றி பழைய வேதங்கள் பலவற்றிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்து மத நூல்களிலும் முன்னறிவிப்பு உள்ளது. அந்த முன்னறிவிப்பு எல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே பொருந்துகின்றன.

உதாரணத்துக்கு பவிஷ்ய புராணத்தில் முஹம்மது (ஸல் ) அவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது : –
 ஒரு அந்நிய பாஷையை சார்ந்தவர் தனது சீடர்களோடு வருவார், அவர் பெயர் முஹம்தம், அவர் பாலை வனப் பகுதியை சேர்ந்தவர், விருத்தசேதனம் செய்து இருப்பார் தலையில் குடுமி இருக்காது, முகத்தில் தாடி இருக்கும் , சப்தமிட்டு (தொழுகைக்கு) அழைப்பார் சைவம் மற்றும் அசைவம் உண்பார்.

இங்கு சொல்லப்படும் எல்லா அடையாளங்களும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துவதை பார்க்கிறோம்.

அதேபோல் இந்து மதத்தில் இறுதி அவதாரமாக கல்கி என்பவர் வருவார் என்ற நம்பிக்கை உண்டு கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை மனிதர்களில் சிறந்த ஒருவரையே இறைவன் தேர்வு செய்து வழிகாட்டியாக ஆக்குகிறான் இந்த கல்கி பற்றிய விவரங்கள் இந்துக்களிடம் உள்ள பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 அதில், அவர் ‘ சம்பாலா ‘ எனும் நகரில் தோன்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு ‘ சாந்தி ‘ நகரம் என்பது பொருள். நபியவர்கள் பிறந்த மக்கா நகருக்கு அமைதி நகரம் என்ற சிறப்புப் பெயர் உள்ளது. மேலும் அதில் கல்கியின் தந்தை பெயர் ‘ விஷ்ணுயாஸ் ‘ -கடவுளின் அடிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நபியின் தந்தை பெயர் அப்துல்லாஹ் இறைவனின் அடிமை என்பதாகும் அத்துடன் கல்கி பிறக்கும் குடும்பத்தின் தலைவர் அனைத்தும் அறிந்தவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது நபிகள் நாயகம் பிறந்த அந்த குடும்பத்தின் தலைவர் அவர்களின் பாட்டனார் பெரிய அறிவாளியாகவும் ஊர் தலைவராகவும் இருந்தார்.

பாகவத புராணத்தில் கூறப்படும் கல்கியின் அடையாளங்கள் எல்லாம் முஹம்மது நபிக்கு அப்படியே பொருந்துகிறது. இந்த ரீதியில் பார்க்கும்போது இந்துமதத்தின் வழிகாட்டுதல் படி முஹம்மது (ஸல் ) அவர்களை இறைவனின் தூதர் என்று ஏற்றே ஆகவேண்டும். இந்து மத அறிஞர்கள் பலரும் இக்கருத்தைக் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் ‘ பண்டித் வைத் பிரகாஷ்’ . இவர்” பிரபஞ்ச இறை தூதின் வழிகாட்டி” எனும் நூலில் இந்து மதத்தில் கல்கி அவதாரம் என்று சொல்லப்படுபவர் முஹம்மது நபி தான் என்று நிறுவியிருக்கிறார்.  ( சமவுரிமை, டிசம்பர் -2016 )

இந்து மதத்தின் வேதங்களை கற்றறிந்த பிராமணர்கள் இந்தக்கருத்தை சொல்கிறார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுமிருக்கிரார்கள்.
முஹம்மது நபியவர்கள் தான் அகில மக்களுக்கெல்லாம் இறைத்தூதராக வந்திருப்பதாக கூறியதோடு மக்களிடம் தனது கொள்கையை கொண்டு சேர்க்கவும் செய்தார்கள். அதனால்தான் உலகம் முழுவதும் அவர்களின் மார்க்கம் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தியாவில் இந்துக்களாக வாழ்ந்து கொண்டிருந்த நாங்களும் கடவுளின் இறுதித் தூதரின் போதனையை ஏற்று முஸ்லிம்களாகியிருக்கிறோம்.

      இன்று அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனும் அவர்கள் கூறிய போதனைகளும் தான் மற்ற எல்லா வேதங்களை விடவும் மற்றவர்களின் போதனைகளை விடவும் உயிரோட்டத்துடன் பின்பற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆக முஹம்மது (ஸல் ) அவர்கள் போதித்த மார்க்கம் உண்மையானது, நன்மையானது. அவர்கள் தான் இறுதி இறைதூதர் என இந்து மத நூல்களிலும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டவர். இதை நன்றாக தெரிந்து கொண்டே ஏற்க மறுப்பது தான் குற்றம். இந்தக் குற்றத்தை நீங்கள் செய்து கொண்டு இறைவனின் பாதையில் சரியாக செல்லும் எங்களை நோக்கி குற்றச்சாட்டுகளை வைப்பது நியாயமா ?


இப்போது நம் மீது வைக்கப்படும் “அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள்” என்ற தவறான குற்றச்சாட்டுக்கான மறுப்பையும் விளக்கத்தையும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

இந்த நாட்டின் கலாச்சாரத்தை நாங்களும் பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினால் உங்களிடம் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். நாங்களெல்லாம் இந்துக்கள் என்று உங்களைப் பற்றி சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே நடைமுறைகளில் வேறுபாடுகள் உள்ளனவே. 

இந்துக்களில் ஒரு கூட்டம் மரணித்தவரை தீயினால் எரிக்கிறீர்கள். இன்னொரு கூட்டம் புதைக்கிறீர்கள். இந்துப் பெண்களில் ஒரு வகையினர் முக்காடெல்லாம் போடுகிறார்கள். வேறு பலர் போடுவதில்லை. இப்படி உங்களில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வணங்கப்படும் தெய்வங்களில், நடை உடையில் என பலவிதமான வித்தியாசங்கள் உள்ளன. இப்படியிருக்கையில் எங்களை பார்த்து ஒத்து வரவேண்டும் என்றால் எப்படி சரியாகும்?

உங்களுடய கலாச்சாரங்களில் சிலவற்றை உங்கள் மதத்தவர் விடுவதையே நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையே. உதாரணத்துக்கு திருமணத்தின் போது தாலி கட்டுவது இந்து மத கலாச்சாரம். மந்திரம் ஓதுவது முக்கிய நடைமுறை. இப்போது நமது கேள்வி, ஒரு இந்து ஆணும் ஒரு இந்து பெண்ணும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள் மந்திரம் ஓதவில்லை, தாலி கட்டவில்லை. குடும்பம் நடத்துகிறார்கள். “இது திருமணமே இல்லை விபச்சாரம்” என்றா சொல்கிறீர்கள்? இந்த திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் எழுதி வைத்திருப்பதும், அதன்படி திருமணம் செய்து வைப்பதும் மிகப் பெரும்பாலும் உங்கள் மதத்துக்காரர்கள்தானே. உங்கள் மத நடைமுறையையும் கலாச்சாரத்தையும் அலட்சியம் செய்யும் இவர்களோடு மல்லுக்கட்ட வேண்டியது தானே. 

இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்களின் நிலைப்பாட்டின் படியே உங்கள் கலாச்சாரமும் நடைமுறையும் உங்களுக்கே முக்கியமானதில்லை என்று தெரிகிறது. 

எங்களிடம் எல்லாம் வல்ல இறைவனின் இறுதி வேதம் திரு குர்ஆனும் அவனது இறுதி தூதரின் வழிமுறையும் உள்ளன. இறைவனின் இறுதி வழிகாட்டுதலைத்தான் நாங்களும் நீங்களும் பின்பற்றியாக வேண்டும். இந்த இரண்டிலும் தடுக்கபட்ட, இரண்டுக்கும் முரண்பட்ட எந்த நடைமுறையையும் கலாச்சாரத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். அப்படி நாங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களில் விவரம் தெரிந்தவர்கள் எங்களை குறை சொல்வீர்கள். இறைவனின் இறுதி வேதம் என்று சொல்லி விட்டு நீங்களே அதற்கு மாறு செய்கிறீர்களே என்று கேட்பீர்கள்.


இறுதி வேதம், இறுதிதூதரின் வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதால் எங்களிடம் சிறந்த நடமுறையும் கலாச்சாரமும் உண்டு. அவற்றை நீங்களும் பின்பற்ற வேண்டும். 

உதாரணத்துக்கு சிறுநீர் கழித்த பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டுமென்று திருகுர்ஆனும் நபிவழியும் வழிகாட்டுகிறது. அதுவும் கழிவு என்பதால் அசுத்தமாகும். உடலிலும் உடையிலும் அசுத்தம் படுவது சரியல்ல. இதை நீங்களும் பின்பற்றினால் பேருந்து நிலயங்களிலும் பொது இடங்கள் பலவற்றிலும் இப்போது வீசும் துர்நாற்றம் இருக்காது.

இன்னொரு உதாரணம், பொது இடத்தில் ஆண்கள், பெண்கள் கலந்திருக்கும் நிலையில் அசிங்கமான, ஆபாசமான விஷயங்களை சொல்லி பாடுவது ஆபாசமான அங்க அசைவுகளுடன் கரகாட்டம் என்பது போன்ற பெயர்களில் ஆட்டம் போடுவது எல்லாம் கேவலம். உங்களிலும் நல்லோர் விரும்பாத இந்த காரியங்களெல்லாம் உங்களிடம் நாகரீகமாகவும் கலாச்சாரமாகவும் உள்ளது. இதுபோன்ற கேவல கலாச்சாரத்தை எதிர்க்கும் எங்கள் நிலைக்குத்தானே நீங்களும் வரவேண்டும். 

நாங்கள் தவறான கலாச்சாரங்களை புறக்கணிப்பதறகுக் காரணமாக கடவுளின் இறுதி வேதமான திரு குர்ஆனின் வசனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று: “என் இறைவன் (பாவமென) தடுத்திருப்பதெல்லாம் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆபாசச்செயல்கள், பாவங்கள், நியாயமின்றி அத்துமீறுதல், ஆதாரமில்லாதிருக்க இறைவனுக்கு நீங்கள் இணைகற்பித்தல்,நீங்கள் அறியாதவற்றையெல்லாம் இறைவன் மீது (பொய்யாக) கூறுதல் ஆகியவற்றைத்தான் என்று கூறுவீராக” (திருகுர்ஆன் 7: 33) 

இறைவனின் இந்த வழிகாட்டுதல் உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. 

இன்னும் கேளுங்கள். இறந்துபோனவரை அடக்கம் செய்ய எடுத்து கொண்டு போகும்போது துக்கத்தோடும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டும் அமைதியாகச் செல்வதுதானே முறை. ஆனால் மேளம் கொட்டிக் கொண்டும் மது குடித்து விட்டு அநாகரீகமாக நடனமாடிக் கொண்டும் செல்கிறீர்களே, இது மோசமான கலாச்சாரமாக உள்ளதே. 

நாங்கள் இறந்தவரை தூக்கிச் செல்லும்போது அவருக்காக பிராரத்தனை செய்து கொண்டும் மரணத்தை நினைவு கூர்ந்து கொண்டும் இறைவனை நினைவு கூர்ந்து கொண்டும் அமைதியாகச் செல்கிறோம். மரணித்தவரை அடக்கம் செய்த பின் அனைவரும் அமைதியாக நின்று அவருக்காக பிரார்த்தனை செய்துவிட்டு திரும்புகிறோம். 

இப்போது சொல்லுங்கள். யாருடைய கலாச்சாரம் சிறந்தது? யாருடைய கலாச்சாரத்தை யார் பின்பற்ற வேண்டும்?
கலாச்சாரம், பண்பாடு என்பது மக்களிடம் பல காலமாக இருந்து வரும் நடைமுறை. உலகத்தின் எல்லா பாகங்களில் வாழும் மக்களுக்கும் இறைவன் வேதங்களை வழங்கி அவர்களை நல்வழியில் வழிநடத்தும் தீர்க்கதரிசிகளையும் அனுப்பி வைத்துள்ளான். 

மக்களிடம் காணப்படும் நடைமுறைகளில் வேதத்திற்கும் தீர்க்கதரிசியின் வழிமுறைக்கும் உடன்பட்டவையும் இருக்கலாம். இரண்டுக்கும் முரண்பட்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான நடைமுறைகளும் இருக்கலாம். ஜாதி ஏற்றத்தாழ்வு, கணவன் மரணித்தால் மனைவியை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏறச்செய்வது போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாவமான, கொடூரமான நடைமுறை என்று சொல்லி நீங்களே எதிர்க்கிறீர்கள். 

அப்படியானால் இதுபோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இன்னும் பல தவறான நடைமுறைகள் உங்களிடத்திலே இருக்கத்தான் செய்யும். 

உங்கள் நிலையே இப்படி இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து எங்களைப் பின்பற்றுங்கள் என்று சொல்வது சரியா? 
கடவுளின் இறுதி தீர்க்கதரிசி முஹம்மது நபியவர்கள். கடவுளின் இறுதி வேதம் திருகுர்ஆன், அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் நபியையும் இறுதி வேதத்தையும் பின்பற்றுகிறோம். நபிவழிக்கும் இறுதி வேதத்துக்கும் முரணானதை பின்பற்ற மாட்டோம். 

முஹம்மது நபி இறைவனின் தூதர்தான் என்பதை இந்து மத நூல்களின் ஆதாரங்களின் மூலமே இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நிரூபித்து இருக்கிறோம். 

இதன்படி இறைவனின் இறுதி தீர்க்கதரிசியின் வழிமுறை, இறுதி வேதத்தின் வழிகாட்டல் இரண்டையும் புறக்கணிப்பவர்கள்தான் குற்றவாளிகள். இப்படிப்பட்ட குற்றவாளிகளாக நீங்கள் இருந்து கொண்டு எங்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமாகுமா? இறைவனின் இறுதித்தூதரை ஏற்று அவர் வழிக்கு உட்பட்ட கலாச்சாரங்களை கைக்கொள்வோம் வாருங்கள்.

“நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேராக இருக்கும் நல்வழியை காட்டுகிறது. நற்செயல்கள் செய்து வரும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரும் நற்கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது” (திருகுர்ஆன் – அத்தியாயம்: 17 வசனம்: 9)

-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil          

Previous Post Next Post