பொதுவாகவே ஜின்கள் மறைவான ஒரு படைப்பாகும். இவர்கள் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்களைப் படைப்பதற்கு முன்னரே அல்லாஹ்
அவர்களை படைத்து விட்டான். இதனையே இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
இன்னும் (தட்டினால்) சப்தம் வரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து (ஆதமை) திட்டமாக நாம் படைத்தோம். மேலும் ஜின்னை (அதற்கு) முன்னதாகக் கொடிய உருவமுள்ள நெருப்பிலிருந்து அதனை நாம் படைத்தோம். (அத் தாரியாத்: 56-58)
அவர்களும் அல்லாஹ்வின் ஏவல்களையும் விலக்கல்களையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களில் விசுவாசிகளும், நிராகரிப்பாளர்களுமுள்ளனர். இறைவனை
வழிப்படக்கூடியவர்களும், மாறு செய்யக்கூடியவர்களுமுள்ளனர். அவர்களைப்பற்றி
இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
“மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும்
நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்”. (அல்ஜின்: 11)
மேலும்:
அதாவது மனிதர்களைப் போலவே பல பிரிவினர்களாகவும், பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
மனிதர்களை போலவே அல்லாஹ்வை நிராகரித்த காபிர்கள் நரகிற்கும், விசுவாசித்தவர்கள் (முஃமின்கள்) சுவர்க்கத்திற்கும் செல்வர் என்பதுவே
அனைவரினதும் கருத்தாகும்.
இதனையே இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
தன் இரட்சகனின் சன்னிதானத்தை பயந்தவருக்கு (சுவனபதியில்) இரு சோலைகளுண்டு. ஆகேவே நீங்கள் இரு வகுப்பாரும் உங்களிருவரின்
இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள். (அர் ரஹ்மான் 46-47)
அவர்களுக்கு மத்தியிலும் மனிதர்களுக்கு மத்தியிலும் அநியாயம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். குத்ஸியான ஒரு ஹதீஸில் அல்லாஹ் கூறுகிறான், என்
அடியார்களே! என் மீது அநியாயம் செய்வதை ஹராமாக்கியுள்ளேன். அது போலவே உங்களுக்கு மத்தியிலும் அதனை ஹராமாக்கியுள்ளேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்து கொள்ளாதர்கள். (ஆதாரம் முஸ்லிம் 2577)
இது போலவே மனிதர்கள் ஜின்கள் மீதும், ஜின்கள் மனிதர்கள் மீதும் பகைமை பாராட்டக்கூடிய நிலைமைகள் உள்ளன.
மனிதர்கள் எலும்புகளின் மீதும், சாணத்தின் மீதும் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்கள் ஜின்கள் மீது பகைமை பாராட்டுவதாக அமையும்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. உணவு சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களை ஜின்கள் கேட்டார்கள். இறைவன்
பெயர் சொல்லப்பட்ட அனைத்து எலும்புகளும் தாங்களின் உணவாகும். அவைகளை நீங்கள் சாப்பிடும் போது மனிதன் சாப்பிட்டதை விட அதில் மாமிசம் இருக்கும், இன்னும் ஒவ்வொரு மிருகத்தின் கழிவுகளும் உங்களது மிருகங்களுக்கான உணவாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், நீங்கள் அவை இரண்டிலும் மல,ஜலம் கழிக்க வேண்டாம். மேலும் கூறினார்கள், நீங்கள் அவற்றின் மூலம் (எலும்பு, சாணம்) சிறுநீர் சுத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில் அவை உங்களது சகோதரர்களது உணவாகும். (ஆதாரம் முஸ்லிம்)
ஜின்கள் மனிதர்கள் மீது காட்டும் பகைமை:
தப்பபிப்பராயங்களை அவர்களது உள்ளங்களில் இட்டு அதில் ஆதிக்கம் செலுத்தும்.
அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும். குறிப்பாக அவர்களை மனிதன் நாடிச் செல்லும் போது.
இதனையே இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
இன்னும், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள ஆண்கள் பலரிடம் (தங்களைக்) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள்
அவர்களுக்கு கர்வத்தை அதிகமாக்கிவிட்டார்கள். (அல் ஜின்: 6)
மனிதனை ஜின் ஆட்கொண்டு எரித்து விடுகிறது. இந்த ஆட்கொள்ளல் இரண்டு வகைப்படுகிறது
ஜின் மனிதனை மூடிக் கொள்கிறது.
ஜின் மனிதனில் நுழைந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்துகிறது.
ஷைத்தானிய வழிபாடுதான் செய்வினை பில்லி சூனியம் இவற்றின் அடிப்படை:
கெட்ட ஜின்களிடம் உதவி தேடி பிரார்த்தனை செய்வோர் மனிதர்களில் இருக்கின்றார்கள்.
وَأَنَّهُۥ كَانَ رِجَالٌ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا
மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர். (72:6)
இந்த இறை வசனத்தின் விரிவுரையில் கல்வியாளர்கள் இதைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த வழிபாட்டில் ஒவ்வொரு மதத்தவருக்கும் நிறைய சடங்குகளும் இருக்கின்றன. இஸ்லாம் அனைத்தையும் தவ்ஹீதின் மூலம்
ஒழித்துக்கட்டுகின்றது.
தாங்கள் இந்த மனிதர்களை அச்சுறுத்தி தங்களை வணங்கச் செய்ய முடியும் என்கின்ற நினைப்பும் கருவமும் அந்த ஜின்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் மனிதர்களை துன்புறுத்துவதற்கு அவர்கள் தயாராகிவிடுகிறார்கள். தங்களால் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்றால் தங்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நிலையை அவர்கள் ஏற்படுத்திவிடுகிறார்கள். - இதுவே தப்ஸீர்களில் உள்ள சுருக்கமான விளக்கம்.