சிலர் ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் தொழுகையாளிகளின் எண்ணிக்கையினால் நிறைந்து வழிந்தால் உடனே தங்களை நீதிபதிகளாகவும், ஆய்வாளர்களாகவும் கருதிக்கொண்டு
இத்தனை நாட்கள் எங்கு இருந்தார்கள் இவர்கள் ?இவர்களை இந்த வருடத்தில் இடையிலே கண்டதே இல்லையே?
ஏதோ சுவனமும், நரகமும் இவர்களுக்கு முன்பாக இருப்பது போன்று பிதற்றுவார்கள்,
சகோதரரே!!
அவர்கள் அல்லாஹ்வுடைய இல்லத்தில் வருகை புரிந்து இருக்கக்கூடிய விருந்தாளிகள் உங்களுடைய விருந்தாளிகள் அல்ல ,
அவர்களைப் படைத்த அதிபதியின் மீது கருணையை ஆதரவு வைத்தவர்களாக அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள் உங்களுடைய கருணை அவர்களுக்கு தேவை இல்லை,
உங்களுடைய வழிபாட்டின் மூலம் பெருமை கொள்ளும் இந்த தன்மையிலிருந்து சற்று எச்சரிக்கையாக இருங்கள்,நீங்கள் அறியாத வண்ணம் உங்களுடைய அமல்கள் வீணாகி விடக் கூடும்.
اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
அவர்கள் அல்லாஹ்வின் நல்லருளை (நியாயமாக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் பிழைகளைப் பெரிதும் மன்னிப்பவனா கவும், இன்னும் அவர்கள் மீது பேரருள் புரிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:218)
-கலாநிதி அஹ்மத் ஈசா அல்மஃஸராவி
-தமிழில்
உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி
حقيقه ونصيحة لي ولك
بعض الناس إذا رأى المساجد ٳمتلأت بالمصلين في رمضان نصب نفسه محققا وقاضيا : أين كانوا؟ ولماذا لم نراهم أثناء العام ؟
وكأن الجنة والنار بيده
أخي
إنهم ضيوف الله لا ضيوفك في بيت الله لا في بيتك
ويرجون رحمة ربهم لا رحمتك
فاحذر العُجب بطاعتك فيحبط عملك وانت لاتشعر
د.احمد المعصراوي