அஸ்மாஉல் ஹுஸ்னா ஆதாரங்களுடன்

அறபியில்: அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி

தமிழில்: அபு ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்


عن أبي هريرة رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لله تسعة وتسعون اسما ، من حفظها دخل الجنة ، وإن الله وتر يحب الوتر  أخرجه البخاري 6410 ، ومسلم 2677 واللفظ له .

நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வுக்கு தெண்ணூற்று ஒன்பது திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுப் பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். மேலும், நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன் அவன் ஒற்றையையே விரும்புகின்றான். புகாரி: 6410, முஸ்லிம்: 2677 மேலும், இவ்வார்த்தை அவருக்குரியதே.

1     الله

2     الإله

3     الحي

4     القيوم   قال تعالى : الله لا إله هو الحي القيوم   البقرة : 255

1.    அல்லாஹ் – வணங்கப்படக்கூடியவன்

2.    அல்இலாஹ் – வணங்கப்படக்கூடியவன்

3.    அல்ஹய்யு – என்றும் உயிருடன்  இருப்பவன்

4.    அல்கய்யூம் – என்றும் நிலைத்திருப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன்  இருப்பவன், நிலைத்திருப்பவன். அல்பகரா: 255

5  الرب

6  الرحمن

7  الرحيم  قال تعالى : الحمد لله رب العالمين الرحمن الرحيم  الفاتحة : 3 وعن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :  … فأما الركوع فعظموا فيه الرب عز وجل  أخرجه مسلم رقم :479

5.    அர்ரப்பு – அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிப்பவன்

6.    அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்

7.    அர்ரஹீம் – நிகரற்ற அன்புடையவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். அல்பாதிஹா: 3, மேலும், நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: … ருகூவைப் பொருத்தளவில் அதனில் கண்ணியமிக்க இரட்சகனை மேன்மைப்படுத்துங்கள். முஸ்லிம்: 479

8     الملك

9     القدوس

10    السلام

11    المؤمن

12    المهيمن

13    الجبار

14    المتكبر

15    الخالق

16    البارئ

17    المصور

18    العزيز

19    الحكيم  قال تعالى : هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ الحشر : 23 – 24

8.    அல்மலிக் – ஆட்சியாளன்

9.    அல்குத்தூஸ் – பரிசுத்தமானவன்

10.   அஸ்ஸலாம் – சாந்தியளிப்பவன்

11.   அல்முஃமின் – தூதர்களுக்கு அற்புதங்களை வழங்கி உண்மைப்படுத்திப் பாதுகாப்பவன்

12.   அல்முஹைமின் – கண்காணிப்பவன்

13.   அல்ஜப்பார் – அடக்கியாளுபவன்

14.   அல்முதகப்பிர் – பெருமைக்குரியவன்

15.   அல்ஹாலிக் – படைப்பவன்

16.   அல்பாரி – தோற்றுவிப்பவன்

17.   அல்முஸவ்விர் – உருவமைப்பவன்

18.   அல்அஸீஸ் – யாவற்றையும் மிகைத்தவன்

19.   அல்ஹகீம் – ஞானமிக்கவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன்தான் அல்லாஹ்;. உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாரும் இல்லை. அவனே ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன், யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவன், அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவனே அல்லாஹ். அவனே படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமைப்பவனுமாவான், அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.     அல்ஹஷ்ர்: 23, 24

20    الأول

21    الآخر

22    الظاهر

23    الباطن

24    العليم قال تعالى : هو الأول والأخر والظاهر والباطن وهو بكل شيء عليم     الحديد : 3

20.   அல்அவ்வல் – முதலாமவன்

21.   அல்ஆகிர் – இறுதியானவன்

22.   அல்ழாஹிர் – மேலானவன்

23.   அல்பாதின் – அந்தரங்கமானவன்

24.   அல்அலீம் – யாவற்றையும் நன்கறிந்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன். அல்ஹதீத்: 3

25    الغفور

26    الودود

27    المجيد   قال تعلى : وهو الغفور الودود ذو العرش المجيد       البروج : 15

25.   அல்கபூர் – மிக்க மன்னிப்பவன்

26.   அல்வதூத் – மிக்க நேசிப்பவன்

27.   அல்மஜீத் – மேன்மைமிக்கவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் மிக்க மன்னிப்பவன் மிக்க நேசிப்பவன். அவன் அர்ஷையுடையவன் மேன்மைமிக்கவன். அல்புரூஜ்: 14, 15

28    الرزاق

29    القوي

30    المتين قال تعالى :  إن الله هو الرزاق ذو القوة المتين    الذاريات : 58 ، وقال تعالى : وهو القوي العزيز      الشورى : 19

28.   அர்ரஸ்ஸாக் – உணவளிப்பவன்

29.   அல்கவிய்யு – பலமிக்கவன்

30.   அல்மதீன் – உறுதியானவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனும், பலமிக்கவனும், உறுதியானவனுமாவான். அத்தாரியாத்: 58 மேலும், கூறுகின்றான்: இன்னும் அவன் வலிமைமிக்கவன் யாவற்றையும் மிகைத்தவன். அஷ்ஷூரா: 19

31    الخير

32    الحافظ

33    الحفيظ  قال تعالى :  فالله خير حافظا وهو أرحم الراحمين    يوسف : 64 وقال تعالى :  إن ربي على كل شيء حفيظ      هود : 57

31.   அல்கய்ர் – மிக சிறந்தவன்

32.   அல்ஹாபிழ் – பாதுகாவலன்

33.   அல்ஹபீழ் – யாவற்றையும் கண்காணிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வே மிக சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் எல்லாம் மிகப்பெரிய கருணையாளன். என்று யஃகூப் கூறினார்.  யுசுப்: 64 மேலும், கூறுகின்றான்: நிச்சயமாக எனது இரட்சகன் யாவற்றையும் கண்காணிப்பவனாவான் என்றும் கூறினார். ஹூத்: 57

34    العالم

35    الكبير

36    المتعال ،  قال تعالى :  عالم الغيب والشهادة الكبير المتعال      الرعد : 9

34.   அல்ஆலிம் – நன்கறிந்தவன்

35.   அல்கபீர் – மிகப் பெரியவன்

36.   அல்முதஆல் – மிக உயர்ந்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவனும், மிகப் பெரியவனும், உயர்ந்தவனுமாவான். அர்ரஃத்: 9

37    المالك

38    المليك

39    المقتدر ، قال تعالى :  مالك يوم الدين    الفاتحة : 4 ، وقال تعالى : في مقعد صدق عند مليك مقتدر    القمر : 55

37.   அல்மாலிக் – தீர்ப்பு நாளின் அதிபதி

38.   அல்மலீக் – அரசன்

39.   அல்முக்ததிர் – வலிமைமிக்கவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அல்பாதிஹா: 4 மேலும், கூறுகின்றான்: வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள். அல்கமர்: 55

40    الأحد

41    الصمد ، قال تعلى :  قل هو الله أحد الله الصمد  الإخلاص : 1 – 2   وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال :  قال الله عزوجل : …… وأنا الاحد الصمد لم ألد ولم أولد ولم يكن لي كفئا أحد  أخرجه البخاري 4974

40.   அல்அஹத் – ஒருவன்

41.   அஸ்ஸமத் – எவ்வித தேவையுமற்றவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் ஒருவன் தான் என நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன். அல்இஹ்லாஸ்: 1, 2 மேலும் நபியவர்களைத் தொட்டும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ….. மேலும், நான் ஒருவன், எவ்விதத் தேவையுமற்றவன், நான் பெறவுமில்லை பெறப்படவுமில்லை இன்னும், எனக்கு நிகராக எவருமில்லை. புகாரி: 4974

42    الواحد

43    القهار ، قال تعالى : وهو الواحد القهار   الرعد : 16

42.   அல்வாஹித் – தனித்தவன்

43.   அல்கஹ்ஹார் – அடக்கியாளுபவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனே தனித்தவனும் அடக்கியாளுபவனுமாவான் என்று கூறுவீராக!   அர்ரஃத்: 16

44    الولي

45    الحميد ، قال تعالى : وهو الولي الحميد    الشورى : 28

44.   அல்வலி – பாதுகாவலன்

45.   அல்ஹமீத் – புகழுக்குரியவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனே பாதுகாவலன் புகழுக்குரியவன். அஷ்ஷுரா: 28

46    المولى

47    النصير ، قال تعالى : فنعم المولى ونعم النصير     الحج : 78

46.   அல்மவ்லா – பாதுகாவலனில் சிறந்தவன்

47.   அந்நஸீர் – உதவி செய்பவனில் சிறந்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனே பாதுகாவலனில் சிறந்தவன், உதவி செய்பவனில் சிறந்தவன். அல்ஹஜ்: 78

48    الرقيب

49    الشهيد ، قال تعالى : فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد     المائدة : 117

48.   அர்ரகீப் – கண்காணிப்பவன்

49.   அஷ்ஷஹீத் – கண்காணிப்பவன், சாட்சியாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீ என்னைக் கைப்பற்றியதும், நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய். அல்மாயிதா: 117

50    السميع

51    البصير ، قال تعالى : إن الله هو السميع البصير     غافر : 20

50.   அஸ்ஸமீஉ – செவியுறுபவன்

51.   அல்பஸீர் – பார்ப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்தான் செவியுறுபவன் பார்;ப்பவன். அல்காபிர்: 20

52    الحق

53    المبين ، قال تعالى : ويعلمون أن الله هو الحق المبين    النور : 25

52.   அல்ஹக்கு – உண்மையாளன்

53.   அல்முபீன் – தெளிவுபடுத்தக்கூடியவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் தெளிவுபடுத்தக்கூடிய உண்மையாளன் என்பதை அறிந்து கொள்வார்கள். அந்நூர்: 25

54    اللطيف

55    الخبير ، قال تعالى : ألا يعلم من خلق وهو الطيف الخبير   الملك :14

54.   அல்லதீப் – நுட்பமானவன்

55.   அல்ஹபீர் – நன்கறிந்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் நுட்பமானவன் நன்கறிந்தவன். அல்முல்க்: 14

56    القريب

57    المجيب ، قال تعالى : إن ربي قريب مجيب     هود : 61

56.   அல்கரீப் – அருகிலுள்ளவன்

57.   அல்முஜீப் – பதிலளிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக எனது இரட்சகன் அருகிலுள்ளவனும் பதிலளிப்பவனுமாவான் என்று கூறினார்.  ஹூத்: 61

58    الكريم

59    الأكرم ، قال تعالى : ياأيها الإنسان ما غرك بربك الكريم  الانفطار : 6 ، وقال تعالى : اقرأ وربك الأكرم         العلق : 3

58.   அல்கரீம் – கண்ணியமிக்கவன், கொடையாளன்

59.   அல்அக்ரம் – மிக சங்கையானவன், மிக்க தாராளமானவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதனே! கண்ணியமிக்கவனான உன் இரட்சகன் விடயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அல்இன்பிதார்: 6 மேலும், கூறுகின்றான்: நீர் ஓதுவீராக! உமது இரட்சகன் மிக சங்கையானவன். அல்அலக்: 3

60    العلي

61    العظيم ، قال تعالى : ولا يؤده حفظهما وهو العلي العظيم   البقرة :255

60.   அல்அலிய்யு – மிக உயர்ந்தவன்

61.   அல்அழீம் – மிக்க மகத்துவமானவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவனும் மிக்க மகத்துவமானவனுமாவான். அல்பகரா: 255

62    الحسيب

63    الوكيل ، قال تعالى: فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل  آل عمران : 173، وقال تعالى: وكفى بالله حسيبا  النساء : 6

62.   அல்ஹஸீப் – போதுமானவன்

63.   அல்வகீல் – பொறுப்பாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அது அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. இன்னும், அல்லாஹ்வே எமக்குப் போதுமானவன். அவனே பொறுப்பாளர்களில் சிறந்தவனாவான் என்றும் கூறினர். ஆல இம்றான்: 173 மேலும் கூறுகின்றான்: அல்லாஹ் விசாரணை செய்யப் போதுமானவன். அந்நிஸா: 6

64    الشكور

65    الحليم ، قال تعالى : والله شكور حليم     التغابن : 17

64.   அஷ்ஷகூர் – நன்றி செலுத்துபவன்

65.   அல்ஹலீம் – சகிப்புத்தன்மையுடையவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் நன்றி செலுத்துபவன் சகிப்புத்தன்மையுடையவன். அத்தகாபுன்: 17

66    البر ، قال تعالى : إنه هو البر الرحيم     الطور : 28

66.   அல்பர் – பேருபகாரம் செய்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அவன் பேருபகாரம் செய்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான். அத்தூர்: 28

67    الشاكر ، قال تعالى : وكان الله شاكرا عليما   النساء :147

67.   அஷ்ஷாகிர் – நன்றியுடையவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் நன்றியுடையவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அந்நிஸா: 147

68    الوهاب ، قال تعالى : أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب       ص : 9

68.   அல்வஹ்ஹாப் – கொடையாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: கொடையாளனும், அனைத்தையும் மிகைத்தவனுமான உமது இரட்சகனின் அருள் பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா? ஸாத்: 9

69    القاهر ، قال تعالى : وهو القاهر فوق عباده        الأنعام :18

69.   அல்காஹிர் – அடக்கி ஆள்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனே தனது அடியார்களுக்கு மேலிருந்து அடக்கி ஆள்பவன். அல்அன்ஆம்: 18

70    الغفار ، قال تعالى : رب السموات والأرض وما بينهما العزيز الغفار       ص :66

70.   அல்கப்பார் – மிக்க மன்னிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டவற்றின் இரட்சகனும், யாவற்றையும் மிகைத்தவனும், மிக்க மன்னிப்பவனுமாவான். ஸாத்: 66

71    التواب ، قال تعالى : فتلقى ءادم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم       البقرة :37

71.   அத்தவ்வாப் – மிக்க மன்னிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று அதன் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான். அல்பகரா: 37

72    الفتاح ، قال تعالى : وهو الفتاح العليم       سبأ : 26

72.   அல்பத்தாஹ் – சிறந்த தீர்ப்பாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் சிறந்த தீர்ப்பாளனும் நன்கறிந்தவனுமாவான் என்று கூறுவீராக! ஸபஉ: 26

73    الرءوف ، قال تعالى : ولو لا فضل الله عليكم ورحمته وأن الله رءوف رحيم       النور : 20

73.   அர்ரஊப் – கருணையாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் உங்களுக்கு இல்லையென்றிருந்தால் உங்களுக்குத் தண்டனை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் கருணையாளன் நிகரற்ற அன்புடையவன். அந்நூர்: 20

74    النور ، قال تعلى : الله نور السموات والأرض        النور :35

74.   அந்நூர் – பிரகாசமாவான்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாவான். அந்நூர்: 35

75    المقيت ، قال تعالى : وكان الله على كل شيء مقيتا         النساء :85

75.   அல்முகீத் – கண்காணிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். அந்நிஸா: 85

76    الواسع ، قال تعالى : والله واسع عليم        البقرة :247

76.   அல்வாஸிஉ – விசாலமானவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மேலும் அல்லாஹ் விசாலமானவனும், நன்கறிந்தவனுமாவான் என்று அவர் கூறினார். அல்பகரா: 247

77    الوارث ، قال تعالى : ونحن الوارثون      الحجر : 23

77.   அல்வாரிஸு – உரிமையாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மேலும் நாமே எல்லாவற்றிக்கும் உரிமையாளர்களாவோம். அல்ஹிஜ்ர்: 23

78    الأعلى ، قال تعالى : سبح اسم ربك الأعلى      الأعلى : 1

78.   அல்அஃலா – மிக உயர்வானவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நபியே மிக உயர்வான உமது இரட்சகனின் பெயரைத் துதிப்பீராக! அல்அஹ்லா – 1

79    المحيط ، قال تعالى :  ألا إنه بكل شيء محيط      فصلت : 54

79.   அல்முஹீத் – சூழ்ந்தறிபவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் யாவற்றையும் சூழ்ந்தறிபவன். புஸ்ஸிலத்: 54

80    العلام ، قال تعالى : ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب     التوبة : 78

80.   அல்அல்லாம் – மறைவானவற்றை மிக அறிந்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் அவர்களது உள்ளத்து இரகசியத்தையும், அவர்களது இரகசியப் பேச்சையும் நன்கறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?  அத்தவ்பா: 78

81    المستعان ، قال تعالى :  وربنا الرحمن المستعان على ما تصفون        الأنبياء : 112

81.   அல்முஸ்தஆன் – உதவி தேடப்படக்கூடியவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மேலும் எங்கள் இரட்சகன் நீங்கள் வர்ணிப்பதற்கு மாற்றமாக உதவி தேடப்படக்கூடிய அர்ரஹ்மானாவான். அல்அன்பியா: 112

82    الهادي ، قال تعالى :  وأن الله لهاد الذين ءامنوا إلى صراط مستقيم       الحج : 54

82.   அல்ஹாதி – நேரான வழியின் பால் செலுத்தக்கூடியன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டோரை நேரான வழியின் பால் செலுத்தக்கூடியவன். அல்ஹஜ்: 54

83    الناصر ، قال تعالى : بل الله مولاكم وهو خير الناصرين      آل عمران : 150

83.   அந்நாஸிர் – உதவி செய்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மாறாக அல்லாஹ்வே உங்கள் பாதுகாவலன். அவனே உதவி செய்வோரில் மிகச் சிறந்தவனாவான். ஆல இம்றான்: 150

84    الخلاق ، قال تعالى : إن ربك هو الخلاق العليم       الحجر : 86

84.   அல்ஹல்லாக் – அனைத்தையும் படைத்தவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக உமது இரட்சகனே அனைத்தையும் படைத்தவன் நன்கறிந்தவன். அல்ஹிஜ்ர்: 86

85    العفو ، قال تعالى : فإن الله كان عفوا قديرا       النساء : 149

85.   அல்அப்வு – பிழை பொறுப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான். அந்நிஸா: 149

86    الحاكم ، قال تعالى :  واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين      يونس : 109

86.   அல்ஹாகிம் – தீர்ப்பளிப்பவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! இன்னும் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவனாவான். யூனுஸ்: 109

87    الغني ، قال تعالى  :  وربك الغني ذو الرحمة       الأنعام : 133

87.   அல்கனிய்யு – யாதொரு தேவையுமற்றவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: கருணையுடையவனும் யாதொரு தேவையற்றவனுமான உமது இரட்சகன்… அல்அன்ஆம்: 133

88    الكفيل ، قال تعالى : وقد جعلتم الله عليكم كفيلا النحل : 91   وعلق الإمام البخاري رحمه الله في كتاب الحوالات ، بعد حديث رقم 2291 ووصله أحمد 2/348  عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجلا من بني إسرائيل : …. قال كفى بالله كفيلا ، وهو حديث صحيح.

88.   அல்கபீல் – பொறுப்பாளன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையே உங்கள் சத்தியங்ளுக்குப் பொறுப்பாளனாக ஏற்படுத்தியிருக்கின்றீர்;கள். அந்நஹ்ல்: 91 மேலும், இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கிதாபுல் ஹவாலாத் எனும் பகுதியில் 2291 ஆவது ஹதீஸ் இலக்கத்திற்குப் பிறகு முஅல்லகாக இடம்பெறச் செய்ததும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ்வை வந்தடைந்ததுமான செய்தியான 2/348 நபியவர்களைத் தொட்டும் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு செய்தியைக் குறிப்பிடலாம். அதாவது நிச்சயமாக நபியவர்கள் பனு இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு மனிதனைப் பற்றிக் கூறும்போது … அம்மனிதன் பொறுப்பாளனாவதற்கு அல்லாஹ் போதுமானவன் என்று கூறினான் என்றார்கள். இது ஸஹீஹான ஒரு செய்தியாகும்.

89    الحيي

90    الستير ، قال تعالى :  والله لا يستحي من الحق  الأحزاب : 53 وعن يعلى بن أمية قال : قال رسول الله صلى الله عليه وسلم :  إن الله عز وجل حيي ، ستير ، أخرجه أبوداود 4012 وأحمد  4/224   والنسائي 406 ، وهو حديث صحيح

89.   அல்ஹயிய்யு – வெட்கப்படுபவன்

90.   அஸ்ஸித்தீர்; – மறைப்பதை விரும்புபவன்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். அல்லாஹ் சத்தியத்தைக் கூற வெட்கப்படமாட்டான். அல்அஹ்ஸாப்: 53 நபியவர்கள் கூறியதாக யஃலா இப்னு உமையா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவனாகவும் மறைப்பதை விரும்புபவனாகவும் இருக்கின்றான். அபூதாவுத்: 4012, அஹ்மத்: 4/224, அந்நஸாயி: 406 இதுவும் ஸஹீஹான ஹதீஸாகும்.

91    المسعر

92    القابض

93    الباسط

94    ‎الرازق ، عن أنس بن مالك قال : قال الناس : يا رسول الله غلا السعر ، فسعر لنا ، فقال رسول الله صلى الله عليه وسلم :  إن الله  هو المسعر ، القابض ، الباسط ، الرازق ، وإني لأرجو أن ألقى الله وليس أحد منكم يطالبني بمظلمة في دم ولا مال ، حديث صحيح ، أخرجه أبوداود 3450 ، وغيره.

91.   அல்முஸக்கிர் – விலையைத் தீர்மானிப்பவன்

92.   அல்காபிழ் – பற்றிப்பிடிப்பவன்

93.   அல்பாஸித் – விசாலப்படுத்துபவன்

94.   அர்ராஸிக் – உணவளிப்பவன்

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: மக்களில் ஒரு கூட்டத்தினர் நபியவர்களிடத்தில் சமுகம் தந்து அல்லாஹ்வின் தூதரே! பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அவற்றிக்கான விலையை எங்களுக்கு நிர்ணயித்துத் தாருங்கள் என வினவினார்கள். அதற்கு நபியவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வே விலை நிர்ணயம் செய்யக்கூடியவனாகவும் பிடிக்கக்கூடியவனாகவும் விசாலப்படுத்தக்கூடியவனாகவும் உணவளிப்பவனாகவும் இருக்கின்றான். மேலும், எவரும் இரத்தம் மற்றும் செல்வம் ஆகியவற்றில் தனக்கு ஏற்பட்ட அநியாயம் தொடர்பாக என்னிடத்தில் முறைப்பாடு செய்யாத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்க நான் உறுதியாக ஆசைவைக்கின்றேன் என்றார்கள். இது ஒரு ஸஹீஹான ஹதீஸாகும். இதனை இமாம் அபூதாவுத் 3450 ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களல்லாதவர்களும் தத்தமது நூட்களில் பதிவு செய்துள்ளார்கள்.

95    المقدم

96    المؤخر

97    القدير ، عن أبي موسى ، عن النبي صلى الله عليه وسلم قال :  …. أنت المقدم ، وأنت المؤخر ، وأنت على كل شيء قدير ، أخرجه البخاري 6398 ، ومسلم 2719

95.   அல்முகத்திம் – முற்படுத்துபவன்

96.   அல்முஅஹ்ஹிர் – பிற்படுத்துபவன்

97.   அல்கதீர் – அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன்

அபூ முஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: ……… நீயே முற்படுத்துபவன், நீயே பிற்படுத்துபவன், நீயே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன் என்று பிரார்த்தித்தார்கள். புகாரி: 6398, முஸ்லிம்: 2719

98    السبوح ، عن عائشة رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في ركوعه وسجوده : سبوح قدوس … ، أخرجه مسم 487

98.   அஸ்ஸுப்பூஹ் – அனைத்து விடயங்களை விட்டும் தூய்மையானவன்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நபியவர்கள் தனது ருகூவிலும் சுஜூதிலும் سبوح قدوس  என்று ஆரம்பிக்கக்கூடிய துஆவை கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். முஸ்லிம்

பொருள்: அவன் அனைத்து விடயங்களை விட்டும் தூய்மையானவன், குறைகளை விட்டும் சுத்தமானவன் ….

99    الرفيق ، عن عائشة رضي الله عنها قال : أن رسول الله صلى الله عليه وسلم قال : يا عائشة إن الله رفيق يحب الرفق في الأمر كله … ، أخرجه البخاري رقم : 6927 ومسلم رقم 2593

99.   அர்ரபீக் – மென்மையானவன்

நிச்சயமாக நபியவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: ஆயிஷாவே! நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் தனது எல்லாக் காரியங்களிலும் மென்மையையே விரும்புகிறான் … புகாரி: 6927, முஸ்லிம்: 2593

100    الطيب ، عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا ….. ، أخرجه مسلم 1015

100.   அத்தய்யிப் – சிறந்தவன்

நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் சிறந்தவன். அவன் சிறந்ததையன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை … முஸ்லிம்: 1015

101    الحكم ، عن أبي شريح هاني بن يزيد رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :  إن الله هو الحكم وإليه الحكم …. أخرجه أبو داود 4955 ، والنسائي 5387 ، وهو حديث حسن .

101.   அல்ஹகம் – நீதி வழங்குபவன்

நபியவர்கள் கூறியதாக அபூ ஷுரைஹ் ஹானி இப்னு யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் (நீதியைக் கொண்டு) தீர்ப்பளிப்பவனாக இருக்கின்றான். மேலும், அவனிடமே தீர்ப்பும் உள்ளது. அபூதாவுத்: 4955, அந்நஸாயி: 5387 மேலும், இச்செய்தி ஹஸன் எனும் தரத்தைப் பெறும் செய்தியாகும்.

102    الشافي ، عن عائشة رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا قال : أذهب الباس رب الناس اشف وأنت الشافي ….. ، أخرجه البخاري 5675 ، ومسلم رقم 2191

102.   அஷ்ஷாபி – நோய் நிவாரணம் அளிப்பவன்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நபியவர்கள் நோயாளியை நோய்விசாரிக்கச் சென்றால் பின்வருமாறு கூறுவார்கள்:

أذهب البأس رب الناس اشف وأنت الشافي ….

புகாரி: 5675, முஸ்லிம்: 2191

பொருள்: இறைவா! கஷ்டத்தைப் போக்குவாயாக, மனிதர்களின் இரட்சகனே! நோயைக் குணமாக்குவாயாக! மேலும், நீயே நோயைக் குணப்படுத்துபவனாக இருக்கின்றாய்! …..

103    المعطي ، عن معاوية رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : … والله المعطي وأنا القاسم ، أخرجه البخاري 3116 ، ومسلم 1037 واللفظ للبخاري .

103.   அல்முஃதி – கொடுப்பவன்

நபியவர்கள் கூறியதாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: … மேலும், அல்லாஹ் கொடுக்கக்கூடியவனாகவும் நான் பகிர்ந்தளிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றேன். புகாரி: 3116, முஸ்லிம்: 1037 மேலும், இந்த வாசகம் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரியதாகும்.

104    الوتر ، والدليل الحديث المذكور في أول هذه الأسماء .

104.   அல்வதர் – ஒற்றையானவன்

மேற்குறித்த பெயர்களின் துவக்கத்தில் இடம்பெற்ற ஹதீஸே இதற்கு ஆதாரமாகும்.

105    الطبيب ، عن أبي رمثة قال : قال النبي صلى الله عليه وسلم : … الله الطبيب ، أخرجه أبوداود 4206 وأحمد 4/163  وهو حديث صحيح .

105.   அத்தபீப் – நோய் நிவாரணிகள் பற்றி பூரண அறிவுள்ளவன்.

நபியவர்கள் கூறியதாக அபூ ரிம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: … அல்லாஹ் நோய் நிவாரணிகள் பற்றி பூரண அறிவுள்ளவனாவன். அபூதாவுத்: 4206, அஹ்மத்: 4/163 இன்னும் இது ஓரு ஸஹீஹான ஹதீஸாகும்.

106    الجميل ، عن عبد الله بن مسعود رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : إن الله جميل يحب الجمال ، أخرجه مسلم 91

106.   அல்ஜமீல் – அழகானவன்

நபியவர்களைத் தொட்டும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகின்றான். முஸ்லிம்: 91

107    المنان ، عن أنس بن مالك قال : سمع النبي صلى الله عليه وسلم رجلا يقول : اللهم إني أسألك بأن لك الحمد ، لا إله إلا أنت وحدك لا شريك لك ، المنان …. فقال : لقد سأل الله باسمه الأعظم الذي إذا سئل به أعطي وإذا دعي به  أجاب ، أخرجه ابن ماجه 3858 وهو حديث حسن .

107.   அல்மன்னான் – பெருமைப்படத்தக்கவிதத்தில் பேருபகாரம் செய்பவன், வாரிவழங்கக்கூடியவன்

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் பின்வருமாறு ஒரு மனிதன் கூறச் செவிமடுத்தார்கள்:

اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت وحدك لا شريك لك ، المنان …

அப்போது நபியவர்கள்: இவர், கேட்கப்பட்டால் கொடுக்கப்படுவதும்  அழைக்கப்பட்டால் பதிலளிக்கப்படுவதுமான, அல்லாஹ்விடத்தில் அவனது மகத்துவமிக்க பெயரைக் கொண்டு கேட்டுள்ளார் என்றார்கள். இப்னு மாஜா: 3858 மேலும், இது ஹஸன் எனும் தரத்தையுடைய ஹதீஸ் ஆகும்.

பொருள்: இறைவா! நிச்சயமாக நான் உன்னிடத்தில் கேட்கின்றேன் உனக்கே புகழனைத்தும், உன்னைத்தவிர வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை, நீ தனித்தவன், உனக்கு இணைதுணை இல்லை, நீயே பெருமைப்படத்தக்கவிதத்தில் வாரிவழங்கக்கூடியவன் …..

108    السيد ، عن عبد الله بن الشخير قال : قلنا يا رسول الله أنت سيدنا ، فقال : السيد الله تبارك وتعالى ، أخرجه أبوداود 4806 وهو حديث صحيح .

108.   அஸ்செய்யித் – தலைவர்

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸிஹ்ஹீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தான் எங்களுடைய தலைவர் என்றோம். அதற்கு நபியவர்கள்: மேன்மைமிக்க உயர்வான அல்லாஹ் தான் எங்கள் தலைவர் என பதிலளித்தார்கள். அபூதாவுத்: 4806 இன்னும் இச்செய்தி ஸஹீஹான செய்தியாகும்.

109    الديان ، قال الإمام البخاري رحمه الله : في كتاب التوحيد ، باب 32 ويذكر عن جابر ، عن عبد الله بن أنيس قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : يحشر الله العباد فيناديهم بصوت يسمعه من بعد كما يسمعه من قرب أنا الملك أنا الديان …. ، ووصله أحمد في مسنده  3 /495 ، والحديث حسن ، وقد أثبت هذه الاسم ابن القيم في نونيته

109.   அத்தய்யான் – விசாரணை செய்பவன்

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: கிதாபுத் தவ்ஹீத் தொகுப்பு, தலைப்பிலக்கம்: 32 ஜாபிர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உனைஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பின்வருமாறு நபியவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன்: அல்லாஹுத்தஆலா அடியார்களை மறுமை நாளில் எழுப்பி, சமீபத்தில் உள்ளவர்கள் செவிமடுப்பது போன்று தூரத்தில் உள்ளவர்கள் செவிமடுக்கத்தக்க விதத்தில் அழைத்து நான் தான் அரசன், நான் தான் விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் நீதியாளன் … என்று கூறுவான். அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் தனது முஸ்னத் எனும் கிரந்தத்தில் இச்செய்தியை கொண்டு சேர்த்துள்ளார் 3/  495 இச்செய்தி ஹஸனான செய்தியாகும். இன்னும், இப்பெயரை இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூனிய்யா எனும் கவிதைத் தொகுப்பில் உறுதி செய்துள்ளார்கள்.

Previous Post Next Post