சீரழியும் இளைஞர் சமுதாயமும் கல்வி நிறுவனங்களும்

சிறு வயது முதல் பிள்ளைக்களுக்கு இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையும் ஏனைய போதனைகளையும் கற்றுக்கொடுப்பதோடு, இஸ்லாத்தின் ஈர்ப்பு மற்றும் அடிப்பட்டைகளும் புகட்டப்பட பேண்டும். 

இவையில்லாது சினிமா நடிகை நடிகர்களது வாழ்வியல் முறை வளர்ந்துவரும் பிள்ளைகளுக்கு  முன்னுதாரணமாக வீடுகளில் காண்பிக்கப்படும் வேளையில் “நாமும் பெரியவர்களாக ஆனதும் இவர்களைப் போன்று ஆடை அணிந்து பெண்களுடன் தொட்டுப் பேசி சல்லாபமாக இருக்க வேண்டுமென” சிறு வயது முதல் காம உணர்சிகளுடன் அலைவர். இதே நிலை சிறுமிகளாக இருப்பவர்களிடமும் ஏற்படுவதற்கு சினிமா மற்றும் மாற்றுமத கலாசாரத்தில் மீது மோகமும் காரணங்களாகும்.

பாடசாலைகள், பிரத்திதயக வகுப்புக்கள், மேற்படிப்பு கற்கைகளுக்கான தனியார்
கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் ஒரு சில மாணவ மாணவிகள் செய்யும் ஆபாசமான செயற்பாடுகள், பக்குவமான மாணவ மாணவர்களையும் அங்கு சேர்ப்பதற்குத் தடையாக அமைகின்றன. மார்பு மற்றும் கால் பகுதிகளில் வைத்து ஆண் பெண்ணுடன் விளையாடும் பலூன் விளையாட்டு, Ice cram ஊட்டிவிடுதல் போன்ற இன்னோரன்ன விளையாட்டுகள் அந்நிய ஆணுடன் சாதாரணமாக இருக்கும் செயற்பாட்டை பாவமற்றமாக சித்தரித்துக் காட்டுகிறது. இது இஸ்லாம் கண்டிக்கும் மிக முக்கிய பாவமாகும்.

இஸ்லாம் அந்நிய ஆண் பெண் கலப்புக்கு தடைவிதித்திருக்கும் நிலையில் இரு பாலாருக்குமான விளையாட்டை நடாத்துவது இஸ்லாமியா பாடசாலைகள் முற்றுமுழுதாக தவிர்ப்பதோடு மாற்று மத கல்விசார் நிறுவனங்கள் இப்போட்டிகளை நடாத்தினாலும் முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொள்ளாது இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி ரஸூல் (ஸல்) அவர்களது எச்சரிக்கையைப் பயந்து வழிப்பட்டு நடப்பதே நன்று.

மேற்குறித்த கல்விசார் நிறுவனங்கள், பாடசாலைகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் வெள்ளை பலூன்களும் (ஆணுறைகள்) பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் நிறைந்துள்ளன. தற்காலத்தில் பாவங்கள் fashion ஆக மாறிக்கொண்டு வருவதனால் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் சீர்குலைந்து சின்னாபின்னமாகி ஓர் ஆணும் பெண்ணும் மலசலகூடத்தில் தமது காம வேட்கையைத் தீர்த்துவிட்டு விபச்சாரம் செய்த குற்ற உணர்வோ, விபச்சாரம் என்ற பெரும்பாவம் உலகத்தில் இல்லாதது போன்று வெளியே வருவது சர்வசாதாரணமாகிவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நீ வெட்கப்படவில்லையாயின் வரும்பியதை செய்து கொள்” அவ்வாறே “ஓர் பாவிக்கு பாவம் செய்வது மூக்கில் வந்தமர்ந்து செல்லும் இளையானைப் போன்றிருக்கும்” எனும் கூற்றுக்களைப் பார்க்கையில் பாவத்தை துணிச்சலாக செய்யுமளவு வெட்கம் அற்றுப்போய்விட்டது, அத்தோடு பாவம் சாதாரணமாகிவிட்டது என்பதையும் உணர முடிகிறது.

எக்கலாச்சாரத்துடன் சேர்ந்து வாழ்ந்து பழகிய போதும் நாம் எமது கலாசாரத்தையோ தனித்துவத்தையோ தாரைவார்த்துக் கொடுப்பது நமக்கு நாம் செய்யும் அநியாயமும் துரோகமுமாகும்.

சிறு வயதுக் கற்றல் முறை, பெற்றோரின் வளர்ப்பு முறை என்பவை சரியாக அமைவது அவசியமாகும். இல்லையேல் பிள்ளைகள் பெரியவர்களான ஆன பின் அனைத்து அனாச்சாரங்களையும் அரங்கேற்றும் போது கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.

வல்லவன் அல்லாஹ் அனைத்து வாலிபர்களையும் யுவதிகளையும் பாவம், சீர்குலைவு மற்றும் வழிகேட்டிலிருந்து பாதுகாத்து என்றும் நன்மக்களாக விளங்க அருள் புரிவானாக! ஆமீன்

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
Previous Post Next Post