அரபி இலக்கணத்தை அறியாத ஜாஹில் பீ.ஜெ

பீ.ஜெ என்பவர் மொழிபெயர்த்ததாக கூறிக் கொள்ளும் குர்ஆன் தர்ஜமாவில் பல தவறுகள் உள்ளது. அதில் சில தவறுகளை பற்றி இலங்கையை சேர்ந்த ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் வுழூ என்பது முக்கியமான மார்க்கக் கடமையாகும். வுழூச் செய்யும் போது,
1. முகத்தைக் கழுவ வேண்டும்.
2. முழங்கை வரை இரு கரங்களையும் கழுவ வேண்டும்.
3. தலையை மஸ்ஹ் செய்ய வேண்டும்.
4. கால்களை கரண்டை வரை கழுவ வேண்டும்.

இதுதான் குர்ஆன் கூறும் தொடர் ஒழுங்காகும்.

முகம், கை கழுவப்பட வேண்டியது, தலை தண்ணீரால் தடவப்பட வேண்டியது, கால் கழுவப்பட வேண்டியது, கழுவப்பட வேண்டிய உறுப்புக்களுக்கு மத்தியில் தடவப்பட வேண்டிய தலையையும் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லுவது போல் இந்த ஒழுங்கை மாற்றுகின்றனர்.

பீ.ஜே. தர்ஜுமா:
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முட்டுக்கால் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்….” (5:6)

என மொழியாக்கம் செய்துள்ளார்.
இவரின் தர்ஜுமாவைப் பார்த்து வுழூச் செய்தால் வுழூ செல்லாத நிலையை உருவாக்கியுள்ளார்.

ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் செய்துள்ள இந்த விமர்சனம் மிக சரியானதாகும் என்பதை மதரஸாவில் ஆரம்ப வகுப்பில் இருக்கும் மாணவர்கள் கூட அறிந்து வைத்திருப்பார்கள்.
ஏனெனில் வுழுவில் வரிசையமைப்பு அவசியமானதாகும். எனவேதான் அல்லாஹ் வரிசையமைப்புடன் கூறுகின்றான்.

இதனை கூட அறியாத பீ.ஜெ அறிஞரா?

1 – பீ.ஜெ தான் செய்த இந்த தவறை இன்றளவும் ஏற்றுக் கொள்ளாமல், அல்மாயிதா வசனம் 6 க்கு தான் மொழி பெயர்த்தது தான் சரி என கூறி வருகிறார். பீ.ஜெவின் இந்த அறியாமைக்கு தான்
(جهل مركب)
கூட்டுச் சேர்ந்த அறியாமை என்று கூறப்படும்.
ஒருவருக்கு சத்தியம் என்னவென்று தெரியாது, ஆனால் அசத்தியத்தை சத்தியமாக அவர் கருதுவாரெனில் அத்தகைய அறியாமைக்கு தான் கூட்டுச் சேர்ந்த அறியாமை என்று சொல்லப்படும். அந்த அறியாமை தான் பீ.ஜெவிடம் உள்ளது.

2 – அல்மாயிதா வசனம் 6 க்கு தவறாக மொழிபெயர்த்து விட்டு சரியாக தான் மொழிபெர்ப்பு செய்தேன் என வாதிடும் பீ.ஜெ வைக்கும் வாதங்கள்.

பீ.ஜெவின் வாதம் – 1 இவ்வசனத்தில் கழுவுங்கள் என்ற சொல் ஒரு தடவை தான் உள்ளது. மொழி பெயர்ப்பிலும் ஒரு தடவை தான் வர வேண்டும்.

நமது பதில்
1 – அல்குர்ஆனில் வந்துள்ள எத்தனையோ வார்த்தைகளுக்கு தமிழில் மொழிபெயர்ப்பே செய்யாத பீ.ஜெ வெல்லாம் இதனை சொல்வது கேலிக் கூத்தாகும்.

2 – இவ்வசனத்தில் கழுவுங்கள் என்பதை அடைக்குறிப்பிற்குள் கொண்டு வந்தால் பீ.ஜெவின் வாதமே தேவையற்றதாகி விடும்.

3 – பீ.ஜெவும் தனது தர்ஜுமாவில் சில இடங்களில் மொழிபெயர்ப்பில் கூடுதலாக சில வார்த்தைகளை சேர்த்துள்ளார்.
உதாரணத்திற்கு

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (29 62)

இதில் தான் நாடியோருக்கு என்ற வார்த்தை அல்குர்ஆனில் ஒரு முறை தான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பீ.ஜெ அதனை இரண்டு முறை மொழியாக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வாறு மூலத்தில் ஒரு முறை வந்த வார்த்தையை மொழியாகத்தில் இரண்டு முறை கொண்டு வந்த பீ.ஜெ, வுழு தொடர்பான வசனத்தில் கழுவுங்கள் என்பது ஒரு முறை தான் வந்துள்ளது என்று கூறி வுழுவின் வரிசையமைப்பையே மாற்றுவது எந்த விதத்தில் நியாயம்?

3 – அல்குர்ஆனிற்கு நேரடியாக மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. அல்குர்ஆனின் பொருளுக்கு தான் மொழியாக்கம் செய்ய முடியும். இதனை தான்
( ترجمة معانيه)
அல்குர்ஆனின் பொருளுக்கான மொழியாக்கம் என கூறுவார்கள்.
பீ.ஜெவும் தனது தர்ஜுமாவின் முகப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே மொழிபெயர்ப்பில் சில வாசகங்களை விளங்குவதற்காக கூடுதலாக குறிப்பிடுவது எல்லா மொழி பெயர்ப்புகளிலும் வழக்கமாகும்.

பீ.ஜெவின் வாதம் – 2 நேரடியான வாசகத்தின் படி பார்த்தால் தடவிக் கொள்ளுங்கள் என்பதை ஒட்டி கால்களையும் என்று சொல்லப்படுவதால் கால்களை மஸஹ் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தான் தரும்.

நமது பதில்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ

1 – இந்த வசனத்தை வைத்து கால்களை மஸஹ் செய்ய வேண்டும் என்ற கருத்து தான் வரும் என என்று ஒருவர் சொன்னால், அந்த நபர் அரபி மொழியை அறியாதவராகவும், இலக்கணத்தை தெரியாதவராகவும் தான் இருக்க வேண்டும்.

அறிஞர் (?) பீ.ஜெ அந்த நிலையில் தான் இருப்பதாக அவரது வாயால் அவரே ஒத்துக் கொள்கின்றார். ஒரு ஜாஹிலை அறிஞர் என்று ஜாஹில்கள் தான் சொல்வார்கள்.

2 – கால்களை மஸஹ் செய்ய வேண்டும் என்ற கருத்து (وَأَرْجُلِكمْ ) அர்ஜுலிக்கும் என கஸராவாக வந்திருந்தால் அப்படி பொருள் கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆனில் அவ்வாறு கூறவில்லை.
மாறாக (وَأَرْجُلَكُمْ) அர்ஜுலக்கும் என ஃபத்ஹாவாக கூறுகிறான். இதில் வாவ் என்பது முன்பு வந்துள்ள (وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ ) என்பதுடன் (அத்ஃப்) இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் என்ற பொருளில் பின்னால் வந்துள்ள வார்த்தையை முன்னர் வந்துள்ள வார்த்தையோடு சேர்த்து பொருள் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே நேரடியான வாசகத்தின் படி பார்த்தால் கால்களை மஸஹ் செய்யுங்கள் என்று பொருள் கொள்ளவே முடியாது. அதற்கான வாய்ப்பு அறவே இல்லை. கால்களை கழுவுங்கள் என்று தான் நேரடியாக பொருள் கொள்ள முடியும்.

பீ.ஜெவின் வாதம் 3 – கால்கள் கழுவப்பட வேண்டிய உறுப்பு என்று ஹதீஸ்களில் உள்ளது.

நமது பதில்
1 – பீ.ஜெவின் வாதப்படி கால்கள் கழுவப்பட வேண்டிய உறுப்பு என்பது குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் உள்ளது என்றால்?

கால்கள் கழுவப்பட வேண்டிய உறுப்பு தான் என்பதை அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகிறானே அதற்கு என்ன பதில்?

இந்த வசனத்தை வைத்து கால்கள் கழுவப்பட வேண்டிய உறுப்பு தான் என கூறும் அறிஞர்களின் கூற்றுக்கு என்ன பதில்?
அந்த அறிஞர்கள் எல்லாம் அறிஞர் (?) பீ.ஜெ வின் பார்வையில் அறிஞர்கள் இல்லையா?

3 – மார்க்கத்தை முறையாக படிக்காமல் தவறு செய்யும் பீ.ஜெ நல்லெண்ணம் கொண்டவராக இருந்திருந்தால், தனது தவறுகளை என்றோ திருத்திக் கொண்டிருப்பார். ஆனால் தவறுகள் சுட்டிக்காட்டியதற்கு பிறகும் அவர் அதனை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறார். அசத்தியத்திலும், வழிகேட்டிலும் செல்லும் பீ.ஜெவிடம் இன்னும் அறியாமைகளும், வழிகேடுகளும் அதிகமாக வெளிப்படத்தான் போகின்றது. நேர்வழியில் செல்ல விரும்பும் மக்கள் இந்த வழிகேடனை விட்டு எச்சரிக்கையாக இருங்கள்!

ஆக்கம்
ஹசன் அலி உமரி
أحدث أقدم